Jackiecinemas

THE DISAPPERANCE OF ALICE CREED -2009 15+ உலகசினிமா/ இங்கிலாந்து… மிக நேர்த்தியாய் ஒரு பெண் கடத்தல்

European Movies

 

2010 ஆம் ஆண்டு  ஆந்திராவில் நடந்த அந்த கொடூர கடத்தல் கொலை பத்திரிக்கையில் எல்லோரும் படித்த செய்திதான்.. சொத்துக்காக ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் அந்த சின்ன பெண்ணின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்…

கடத்தலில் இரண்டு வகை இருக்கின்றது.. ஒன்று பணத்தை வாங்கி கொண்டு கடைசியில் உயிரோடு விட்டு விடுவது.. இரண்டாவது பணத்தை வாங்கி கொண்டு எப்படியும் நம்மை காட்டிகொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் கடத்தியவரை கொன்று விடுவது…

கடத்தியதும் பணம் பெற்றுக்கொண்டு உயிரோடு விட்டு மாட்டிக்கொண்டால் கூட கிட்நாப்பிங்கேஸ்சில் போடுவார்கள்… ஆனால் கொலை செய்தால், தூக்கு அல்லது ஆயுள் இரண்டில் ஏதாவது நிச்சயம்… இது எல்லாம் தெரிந்தும் வாழ்க்கையை பணயம் வைத்து கடத்தல் நாடகம் தினமும் அரங்கேறியபடி உள்ளது…. எல்லாம் அந்த பணத்துக்காக…..

THE DISAPPERANCE OF ALICE CREED-2009 பிரிட்டிஷ் படத்தின் கதை என்ன???
டேனி, விக் இரண்டு பேரும்… ஒரு வேன் திருடுகின்றார்கள்…

நம்பர்பிளேட் மாற்றபடுகின்றது…

கடைக்கு சென்று தட்டு முட்டு சாமான்கள் வாங்குகின்றார்கள்..

சத்தம் போடாதே படத்தில் ஒரு ரூம் ரெடி செய்வார்களே..உள்ளே என்ன கத்தினாலும் வெளியே கேட்காதது போல் ஒரு ரூம் ரெடி செய்து அதில் ஒரு கட்டிலையும், அதில் ஒருவரை கட்டி போடுவதற்கு ஏற்றது போல் எல்லா சமாச்சாரத்தையும் ரெடி செய்து வைக்கின்றார்கள்…
எல்லா முடிந்ததும் அலிஸ் என்ற பண்ணகாரர் வீட்டு பருவ பெண்ணை கடத்தி வருகின்றார்கள்…

அந்த பெண்ணை சத்தம் போட்டாலும் வெளியே கேட்காத அறையில் இருக்கும் கட்டிலில் கட்டி போடுகின்றார்கள்..

கத்திவிட கூடாது என்பதற்க்காக வாயில் பால்கேங் வைத்து அடைக்கின்றார்கள்….
கத்திரிக்கோல் எடுத்து அந்த பெண்ணின் உடைகளை களைந்து முழு நிர்வாணமாக்குகின்றார்கள்.. அவளின் பிறப்பு உறுப்பு மேல் ஒரு நியூஸ் பேப்பர் வைத்து மறைத்து விட்டு… அவளை அரைநிர்வாணமாக புகைபடம் எடுத்து அதனை அந்த பெண்ணின் அப்பாவுக்கு அனுப்பிகின்றனர்…

அந்த பெண்ணுக்கு வேறு உடை அணிவிக்கின்றனர்.. அந்த உடை கூட எளிதில் அகற்றலாம் அது போலான உடை…அந்த பெண்ணின் கண்ணை பார்த்தால் இரக்கம் வரும் என்பதால் தூக்கு போடும் போது ஒரு துணி தலையில் போட்டு மூடுவார்களே… அது போல ஒரு துணியை தலையில் போட்டு மூடுகின்றார்கள்..

அந்த பெண்ணிடம் தெளிவாக சொல்லபடுகின்றது.. உன்னை துன்புறுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.. எங்களுக்கு வேண்டியது பணம்…. அவள் எப்படியும் தப்பிவிடக்ககூடாது என்பதால் இரண்டு கை, இரண்டுகால்… கட்டிவிட்டு பேசி ஏதாவது மனதை மாற்றிவிடுவாள் என்பதால், வாயில் பால் கேங் வைத்து கட்டி விடுகின்றார்கள்…

சரி இப்படி கட்டிவிட்டா எப்படி? அந்த பொண்ணு ஒன்னுக்கு ரெண்டுக்கு போகறது எப்படி என்று கேட்கின்றீர்களா? அதுக்கும் வழி சொல்கின்றார்கள்.. கையில் அசைத்தால் எல்லாம் உனக்கு செய்வோம்… அதுவும் கை கால்கள் கட்டபட்டு இருந்த நிலையில்தான் … இது எப்படி சாத்தியம்..???
அவள் ஒன்னுக்கு வருவதாக செய்கை செய்ய பெட்பேர்ன் எடுத்து வந்து பேன்டை கழட்டி, டேனி அவளின் மூத்திரத்தை பிடித்துக்கொண்டு போகின்றான்.. அவளால் எதுவும் செய்ய முடியவில்லை…கதறுகின்றாள்..

வீடியோவில் துப்பாக்கி முனையில் அலிசை மிரட்டி அவள் அப்பாவிடம் கதறி பணம் கேட்க வைக்கின்றார்கள்….இதில் விக்கி வெளியே செல்கின்றான்.. போகும் போது டேனியை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு போக…

டேனி இருக்கும் போது தனக்கு ரெண்டுக்கு வருகின்றது என்று அலிஸ் கையால் செய்கை செய்கின்றாள்….. ஒரு பக்கெட் மற்றும் ஒரு பேப்பர் நாப்கின் பேப்ப்ர் ரோல், எடுத்து போய் அவள் பக்கத்தில் வைத்து விட்டு துப்பாக்கி முனையில் அவள் கால்கள் மற்றும் ஒரு கை விலங்கை அவுத்து விட்டு வாயில் இருக்கும் பாலை எடுத்து விடுகின்றான்…
அவள் உடைகளை களைந்து அந்த பக்கெட்டில் உட்கார. துப்பாக்கி முனையில் அவளை பார்த்துக்கொண்டே இருக்க…அலிஸ் டேனியிடம்… இப்படியே பார்த்துக்கொண்டு இருந்தால் எனக்கு எதுவும் வராது என்று சொல்லி அவனை திரும்பி நிற்க்க சொல்ல, டேனியும் பாவம் பார்த்து திரும்பி நிற்க்க…
அலிஸ் அப்படியே திரும்பி அந்த பாக்கெட்டை சத்தம் காட்டாமல் எடுத்து அவன் தலையில் ஒரு போடு போட்டு விட்டு அவனிடம் இருக்கும் துப்பாக்கியை பறித்து வைத்துக்கொள்கின்றாள்… இப்போது டேனி அலிஸ்ன் துப்பாக்கி முனையில்… அவள் தப்பி இருக்கலாம் அல்லவா??? இல்லை தப்பிக்க முடியலை ஏன்…. அதுக்குதான் படம் பார்க்கனும்ங்கறது.-.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

 

நிறைய டிவிஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் அதிகம் உள்ள இந்த பிரிட்டிஷ் படம் உடனே பார்த்து தொலைக்க வேண்டிய பார்த்தே தீர வேண்டியபடங்களின் வரிசையில் உள்ளபடம் இது….
இப்பதான் எக்சாம்னு ஒரு பிரிட்டிஷ்படம் பார்த்துட்டு மூக்கு மேல வைச்ச விரல் எடுக்கலை அதுக்குள்ள அதே போல செலவு கம்மியா… செம கலக்கலா ஒரு படம்…. எக்சாம் படம் விமர்சனம் வாசிக்க…இங்கே கிளிக்கவும்
இப்பதான் ரெஸ்ட்ரெயின்ட் போன மாசம் ஒரு ஆஸ்திரேலியபடம் எழுதினேன் அதை வாசிக்க….இங்கே கிளிக்கவும் மூன்றே பேர்… செமையானபடம்.. அந்த படத்தின் பதிவை கூட யூத்புல் விகடனில் குட்பிளாக்கில் போட்டு இருந்தார்கள்…. அந்த வியப்பு முடிவதற்க்குள் அடுத்த படம்…. இந்த படம்…
இந்த படத்தின் சிறப்பு என்ன தெரியுமா???
மூன்றே பேர்தான்.. படம் முழுக்க…. முதலில் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் காண்பிக்கும் போது லோ ஆங்கிளில் கேமரா பயணிக்கும் போது ஒரு ஒரு ஆள் இருப்பது போல வரும்…. அதை தவிர்த்து பார்த்தால் படம் முடியும் வரை… அந்த மூன்று பேர்தான் அது போலான திரைக்கதை மற்றும் பிரேமிங்…அபாரம்…

அதாவது அப்பா போனில் பேசுவது … ஏதிர் வீட்டு அப்பார்ட்மென்ட்டில் கதவை திறந்து ஆள் போவது.. பார்க்கிங் ஏரியாவில் யாராவது நடந்து போய் கார் எடுப்பது… என்று எததாவது ஒரு வகையில் ஒரு ஆள் கூட பிரேமில் வராதது போல் எடுத்து இருக்கின்றார்கள்… பாராட்டுக்கள் இயக்குனர், மற்றும் கேமராமேன்

படம் முழுக்க ஒரு விற விறுப்பு… நிறைய டுவிஸ்ட்… இதுல ஒரு கிஸ்சிங் சீன் அந்த சீனை நீங்க வாழ்க்கையில மறக்கவே முடியாது… அது போலான காட்சி அது… நானே திடுக்கிட்டேன்…
நிறைய ஷாட்ஸ், நிறைய டூவிஸ்ட்.. படம் பார்க்கும் போது சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால் நான் விரிவாய் சொல்லவில்லை…

அலிஸ் ஆக நடித்து இருக்கும் ஜெம்மா டிரெட்டன்… நடிப்பு செம நடிப்பு…. படம்புல்லும் கட்டி போட்டு இருப்பது போலான காட்சிதான் பின்னி எடுத்து இருக்குது அந்த பொண்ணு…. என்னா உடம்புடா அது..???
டேனிக்கும் அலிஸ்க்கும் ஒரு டுவிஸ்ட் மேட்டர் சீன் வச்சி இருக்காங்க…செமை…

படம் முழுக்க டிடெய்லாக சொல்லி இருக்கின்றார்கள்..

முக்கியமா கடத்துவதற்கு முன் டென்ஷனா ஸ்டேரிங்கில் விரல்கள் நடுக்குவது…
ரூம் ரெடி செய்யும் போது வைத்து இருக்கும் குளோஸ் ஷாட்டுகள்….
அலிஸ் பயந்துட்டா…அவ உடம்புல கேமரா டிராவல் ஆகும் போது… அவள் தொப்புள் சுற்றி இருக்கும் எல்லா ரோமங்களும் சிலிர்த்து இருப்பது போன்ற ஒரு காட்சியும்…
அலிஸ்… மூத்திரத்தை டேனி பிடித்துக்கொண்டு போய் அதை டாய்லட்டில் கொட்டும் போதும் அதன் மஞ்சள் தன்மையும்…டாய்லட்டி தோட்டா பாகத்தை போட்டு விட்டு பிளஷ் செய்ய, அது போகாமல் அடம் பிடிக்க, அப்போது வைத்து இருக்கும் கேமரா கோணமும் மிக மிக அழகு… இது போலான காட்சிகளால் நாமும் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிப்பதை தவிர்க்க முடியவில்லை….

இந்த படம் டோரன்டோ,லண்டன் டிரேபிகா என மூன்று உலகபடவிழாவில் திரையிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது இந்த பிரிட்டிஷ்படம்….

இந்த படத்தை தமிழில் 20 லட்ச ரூபாயில்… 15 நாட்களில் படத்தை எடுத்து முடித்து விடலாம்…என்னதான் சுவாரஸ்யமாக இருந்தாலும் இந்த படம் தமிழில் ஓடாது… ஆனாலும் எச்சரிக்கை என்ற பெயரில் வரலட்சுமி  மற்றும்  சத்யராஜ் நடிப்பில் எச்சரிக்கை என்ற படம் வர போகின்றது… இதே போன்று எடுத்தால்   படம் நிச்சயம் ஓடும் ஆனால் சென்சார் கலாச்சாரம் போன்ற விஷயங்கள் இருப்பதால் இங்கே செல்ப் எடுப்பது ரொம்ப கஷ்டம் என்றே எண்ணுகின்றேன்.. ஆனாலும் திரைக்கதையில் மாற்றம் செய்து ஒரு வேளை கிளிக் ஆனால்  வாய்பு இருக்கும்.

ஒரே அறையில கதையே இல்லாம படம் எடுத்து இருக்கானுங்க…ச்சே என்று சலிப்புதான் காட்டுவார்கள்.. அதே போல் இந்த படத்தில் உள்ளது போலான காட்சிகள்… நிச்சயம் இந்திய சென்சார் நிச்சயம் அனுமதிக்காது என்பது வேறு விசயம்…
கிளைமாஸ் சூப்பரே சூப்பர்

 

படக்குழுவினர் விபரம்..

Directed by J Blakeson
Produced by Adrian Sturges
Written by J Blakeson
Starring Gemma Arterton
Martin Compston
Eddie Marsan
Distributed by CinemaNX
Release date(s) 30 April 2010[1]
Running time 98 minutes
Country United Kingdom
Language English

பார்த்தே தீர வேண்டியபடம்….

 

 

Related posts

WHO I AM I -2014 (GERMAN) MOVIE REVIEW | நான் யாரு ? எனக்கே தெரியலையே…

admin

Trash (2014) movie review | must watch movie

admin

The Salvation-2014-movie review -Denmark|உலக சினிமா|பழிக்குப்பழி.

admin

kingsman The Secret Service -2015- Movie Review| உருவாகும் உளவாளி|உலக சினிமா|இங்கிலாந்து

admin

I’m a Killer 2016 world Movie poland review by jackiesekar

admin

CHILD 44 -2015 MOVIE REVIEW|WORLD MOVIE|44 சிறுவர்கள் கொலை.

admin

“The Connection” (aka “La French”)-2014 franch movie review|பிரான்ஸ் தேசத்து ஹெராயின் சாம்ராஜ்யம்.

admin

‘Love at First Fight – 2014 (‘Les Combattants’) French movie review

admin

1 comment

Dortmund Agentur für AdWords Oct 21, 2021 at 1:37 pm

This is the topic that’s in the vicinity of to my coronary heart… Lots of many thanks! Wherever are your Speak to facts though?

Reply

Leave a Comment