CHILD 44 -2015 MOVIE REVIEW|WORLD MOVIE|44 சிறுவர்கள் கொலை.

2015-04-13-1428911155-7753671-child44

 

நேற்று காலை 10,30 மணிக்கு   உங்கள் எட்டு வயதான  மகன்  ஜோரா அன்ட்ரூவின்   உடல்  வயால்கி நகரின்  கிழக்கே ஒரு கிலோ  மீட்டர் தூரத்தில் ரயில் பாதை ஓரமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளது…

அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது  அவன் உடலில் அவன் அணிந்து இருந்த உடை இருந்தது என்று  உயிருக்கு உயிரான  நண்பன்  தன்னோடு வேலை பார்ப்பவன்..தன் இறந்து போன மகனின்  உடலில்  உடை இருந்தது என்ற தன் நண்பனே  அண்டை புளுகு புளுகி பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும்  போது…..  மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்??

மகனின் தாய் குலுங்கி அழுகிறாள்..

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது…  மகனின் தாய் குறிக்கிடுகின்றாள்…

என் மகனின்   உடல்நிர்வாணமாக  கண்டெடுக்கப்பட்டது..  என்று இடைமறிக்கின்றாள்…

இல்லை உங்கள் மகன் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, அவன் உடலில் உடை இருந்தது… என்று வாதிடுகின்றான்…

மேலும் பிரதே பரிசோதனை என்ன சொல்கின்றது என்றால்.. என்று  தொடர முற்படும் போது….

மகனை  பறிகொடுத்த தாய் சொல்கிறாள்…  ரயில் ஒரு போதும் என் மகனின் உடையை  அவிழ்த்து இருக்காது என்று திடமாக  தீர்க்கமாக  கோபமாக சொல்கிறாள்.

ஆனாலும் அவன் மேலும் வாசிக்கிறான்.. இதனால் சகலமானவர்களுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால்… இந்த இறப்பு ஒரு  மோசமான  விபத்தினால் உங்கள்  மகன் இறந்து விட்டான் என்று  சொல்ல…

மனம் வெம்பிய தாய்… ரிப்போர்ட்டில் என்மகன் உடலில் உடுப்பு இருந்தது என்று  எழுதி இருக்கின்றதா? என்ற தாய் கேட்க..

ஆம் அப்படித்தான் எழுதி இருக்கிறது.. அதுவும்  மேஜர் குஸ்மின் இந்த ரிப்போர்ட்டில்  கையெப்பம் இட்டு இருக்கின்றார் என்று  விளக்கும் போதே ..

என் மகன் கயவன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறான்.. அதை   கண்டுபிடியுங்கள் என்று மன்றாடுகின்றாள்..

நண்பன் பொய் பிரேத பரிசோதனை  அறிக்கையை  வாசிக்கிறான்.. மனைவி பொய் என்கிறாள்… தகப்பன் கண்டு பிடித்து என்ன செய்ய? என்று கேட்கிறான்..

காரணம் அதிகாரம்…

பாசம் நேசம்  மண்ணாங்கட்டியெல்லாம் தூக்கி தூரப்போட்டு விடவேண்டும்.

அதிகாரம் என்ன சொல்கிறதோ.. அதைதான் கேட்க வேண்டும்.. நில் என்றால்நிற்க வேண்டும்   உட்காரு என்றால் உட்காரவேண்டும்…

உன் மனைவி அழகாய் இருக்கின்றாள்… அவளை என் எதிரில் நீ உடலுறவு கொள் என்று  ஒரு சைக்கோ அதிகாரி விரும்பினால் அதை செய்ய வேண்டும்… செய்ய மறுத்தால்  கேள்வி கேட்காமல் தூப்பாக்கி குண்டுக்கு  பலியாவாய்….. அதற்கு முன் உன் எதிரிலேயே பல பேர் உன் மனைவியை  உன் கண் எதிரில்  கற்பழிப்பு செய்து கடித்து துப்புவார்கள்..

துப்பாக்கி குண்டை விட, கண் எதிரில் மனைவி மானபங்க படுவதை காட்டிலும்… மனைவியோடு வெட்கம் தவிர்த்து முயங்கி தொலைக்கலாம்.. அல்லவா.-?? உயிராவது மிஞ்சுமே…!!!

இப்படியா வாழ்க்கையைதான்   கடந்த நூற்றாண்டுகளில்  மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அதிகாரத்துக்கு பயந்து  பயந்து  வாழ்ந்து தொலைத்தார்கள்… அந்த பயத்தை வைத்து பின்னப்பட்ட நாவலின் திரைவடிவம்தான்  சைல்டு 44

freedvdcover_child-44-cover

 

===

சைல்டு 44 படத்தின்  கதை என்ன,?

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் லியோ, அலெக்சி இருவரும் உயர்பதவில் இருப்பவர்கள்… அலெக்சின் எட்டு வயது  மகன் கொடுரமாக   கொல்லப்படுகிறான்.. ஆனாலும் அரசு  சொல்வதை  அமோதிக்க வேண்டும்… ரஷ்யாவில் ஸ்டாலின் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த நேரம்… சொர்கத்தில்  கொலைகள் நடக்காது என்ற வாக்கியத்துக்கு  வலு சேர்க்க வேண்டுமே?? அப்படி கொலை நடந்து விட்டால்…??? அதை மறைக்க வேண்டும்… அதேதான்..ஒரு கொலை அல்ல இரண்டு கொலை அல்ல..  மொத்தம் 44 கொலைகள் எல்லாம் எட்டு வயதில் இருந்து பத்து வயது சிறுவர்கள்… சரி அவர்களுக்கு அப்பா அம்மா இல்லையா? இல்லை அவர்கள் அனாதைகள்,… எப்படி அனாதைகள் ஆனார்கள்.. ரஷ்யா உக்ரேனில் செயற்கையாக உருவாக்கிய பஞ்சத்துக்கு நாள் ஒன்றுக்கு 25  ஆயிரம் பேர் 1939களில் செத்து மடிந்தார்கள்.. அவர்களின் பிள்ளைகள் அனாதையானார்கள்… அவர்கள்தான் கொலைகாரனின் இலக்கு… கொலைகாரன் யார்… ஏன் அந்த கொலைகள்.. முக்கியமாக 44 சிறுவர்கள்  டார்ச்சர் செய்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன?? போன்றவற்றின் விடையை வெண்திரையில்   காணுங்கள்.

==

படத்தின் சுவாரஸ்யங்கள்..

படத்தின் பிரதானமே சிறுவர் கொலைகள்தான்.. முக்கியமாக ரயில் பாதை செல்லும் ஓரங்களில் சிறுவர்களின் பினங்கள்  கிடக்கின்றன..

படம் தொடங்கும் போதே…

THERE IS NO MURDER IN PARADISE   என்று டைட்டில் போடுகின்றார்கள்..  அதுதான்  படத்தின் ஒன்லைன்…

சொர்கத்தில்  கொலைகள் நடக்காது… நடந்தால்   அதை மறைக்க வேண்டும்.. ஏன் மறைக்க வேண்டும்…  ஆட்சியாளர் ஸ்டாலினுக்கு   பிடிக்காது.. காரணம்..?? மாட்டிக்கொண்டால் .. அல்லது  கொலையாளியை தேடி கண்டுபிடிக்காவிட்டால் மரணம் என்பதால்…

படத்தில் ரயில்தான் முக்கியபாத்திரம் என்பதால் ரயில் செல்லும் இடங்கள்  காட்சிகள் கவிதை.

அதை விட 1950 களில் நடக்கும் கதை என்பதால் 60 ஆண்டுக்கு முன்னான நகரத்தை நம் கண் முன் நடக்க விட்டு இருக்கிறார்கள்.. முக்கியமாக சுரங்க ரயில்.. ஆனால்  சென்னையில் இன்னும் மெட்ரோ ரயில் பூமிக்கடியில் செல்ல  இன்னமும் யோசித்துக்கொண்டு இருக்கிறது…

பெரகுவே நாட்டின்  பாதள ரயிலை… மாஸ்கோ ரயில்  நிலையமாக சீட் பண்ணி  எடுத்து இருக்கிறார்கள்…

========

படத்தின் டிரைலர்.

 

 

======

படக்குழுவினர் விபரம்

 

Directed by Daniel Espinosa
Produced by
Ridley Scott
Michael Schaefer
Greg Shapiro
Screenplay by Richard Price
Based on Child 44
by Tom Rob Smith
Starring
Tom Hardy
Gary Oldman
Noomi Rapace
Joel Kinnaman
Jason Clarke
Vincent Cassel
Music by Jon Ekstrand
Cinematography Philippe Rousselot
Edited by Dylan Tichenor
Production
company
Summit Entertainment
Worldview Entertainment
Scott Free Productions
Distributed by Lionsgate
Release dates
April 17, 2015
Running time
137 minutes
Country
United States
United Kingdom
Czech Republic
Romania
Language English
Budget $50 million
Box office $3.3 million

==

பைனல்கிக்

 

படம் நிறைய  நெகட்டிவ் ரிவியூவ்களை கொடுத்தாலும்  இரண்டரை மணி நேர படத்தில் பின் பகுதியில் நிறைய  காட்சிகளை குறைத்து இன்னும் கிரிஸ்பாக  கொடுத்து இருக்கலாம்…

இருந்தாலும் நல்ல திரில்லர் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.. இந்த   திரைப்படம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

====

படத்துக்கான ரேட்டிங்…

பத்துக்கு ஏழு.

========

 

 

வீடியோ விமர்சனத்துக்கு…

https://youtu.be/1uDOTOwHT1M