டிராஷ்…
2014ஆம் ஆண்டு வெளியான பிரேசில் நாட்டு திரைப்படம்…
பள்ளிக்கரனை சதுப்புநில பகுதியை கடந்து ஐடி செக்டாருக்கு வேலைக்கு செல்லும் அத்தனை பேரும் மூக்கை பொத்திய படி வேலைக்கு செல்வார்கள் … ஆனால் அந்த இடத்தில் வேலை செய்யும் லாரி ஓட்டுனரில் இருந்து சூப்பரவைசர் வரை எல்லோரும் மனிதர்களே… அதை விட அந்த பகுதியில் குப்பையில் இருந்து நல்ல பொருட்களை பிரித்து எடுத்து பழைய பேப்பர் ,இரும்பு வாங்கும் கடையில் குப்பையில் இருந்து எடுத்த பொருட்களை கொடுத்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அதிக அளவில் இருக்கின்றார்கள்.. அப்படியா மனிதர்களை பற்றிய கதைதான் பிரேசில் நாட்டு திரைப்படமான டிராஷ்…
டிராஷ் படத்தின் கதை என்ன??
பிரேசில் நாட்டில் குப்பையில் கிடைக்கும் நல்ல பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்தி வரும் சிறுவர்கள் கையில் ஒரு பர்ஸ் கிடைக்கின்றது.. அந்த பர்சை எடுத்ததில் இருந்து அவர்கள் மிக மோசமாக துரத்த படுகின்றார்கள்.. அரசு அதிகாரம் அவர்களை அடித்து துவசம் செய்கிறது.. எப்படி அவர்கள் அந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவந்தார்கள்.. அந்த பர்சில் அப்படி என்னதான் இருந்தது போன்றவற்றிர்க்கு விடை வெண்திரையில் காண்க..
======
சின்ன பசங்க மூன்று பேர் சும்மா பின்னி இருக்காங்க… எந்த பிரச்சனையிலும் விட்டு விட்டு ஓடாத அந்த குணம்… அவர்கள் மேல் இன்னும் காதல் கொள்ள செய்கிறது..
அந்த பகுதி மக்களுக்காக அந்த பகுதி பசங்களுக்காக பாடுபடும் பாதர்.. ஒரு என்ஜிஓ பெண்மணி என்று அனைவரும் மனதில் நிற்கிறார்கள்.
ஒரு போலிஸ் டிடெக்டிவ் போல… அந்த பர்சின் பின் புலத்தை கண்டுபிடிக்கும் விஷயத்தை மிகவும் லாஜிக்கோடு சொல்லி இருக்கின்றார்கள்..
அதிகார வர்கம் பசங்களை போட்டு துவசம் செய்யும் காட்சிகளில் கண்கள் நிச்சயம் கலங்கும்…
கேமராமேன் எப்படி குப்பை குளங்களுக்கு மத்தியில் ஷாட் வைத்தார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கின்றது..
2010 ஆம் ஆண்டு டிராஷ் என்ற தலைப்பில் Andy Mulligan எழுதிய கிரைம் நாவலின் திரை வடிவம்தான் இந்த திரைப்படம்..
இந்த திரைப்படத்தை மிகவும் பரபரப்பாக Stephen Daldry இயக்கி இருக்கிறார்….
======
படத்தின் டிரைலர்.
========
படக்குழுவினர் விபரம்
Directed by Stephen Daldry
Produced by Tim Bevan
Eric Fellner
Kris Thykier
Screenplay by Richard Curtis
Based on Trash
by Andy Mulligan
Starring Wagner Moura
Selton Mello
Rooney Mara
Martin Sheen
Music by Antônio Pinto
Cinematography Adriano Goldman
Edited by Elliot Graham
Production
company
Working Title Films
O2 Filmes
PeaPie Films
Distributed by Focus World
Release dates
9 October 2014 (Brazil)
30 January 2015 (United Kingdom)
Running time
114 minutes[1]
Country Brazil
United Kingdom
Language English
Portuguese
Box office $5.36 million
====
பைனல் கிக்..
இந்த திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.. பொதுவான வெளிநாடு என்றால் ரொம்ப டீசன்டாக இருக்கும் என்பது தமிழ் ரசிக மனோபாவம்.. ஆனால் இது போன்ற படங்களை பார்க்கும் போது நம் ஊர் ஒன்றும் அவர்களுடைய ஊருக்கு குறைச்சல் இல்லை என்று என்ன தோன்றும். அருமையான கிரைம் திரில்லர் டோன்ட் மிஸ் இட்.
======
படத்துக்கான ரேட்டிங்
பத்துக்கு ஏழு.
==========
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் நன்றி.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
படத்தின் வீடியோ விமர்சனம்.