‘Love at First Fight – 2014 (‘Les Combattants’) French movie review

les combattants (2013)

 

லவ் அட் பர்ஸ்ட் பைட்…

நேற்று இரவு பார்த்த பிரெஞ்சு திரைப்படம் மனதை கவர்ந்தது..

இந்தனைக்கு அரதபழசான கதை… பெரிதாய் திருப்பங்கள் ஏதும் இல்லை.. அப்படி இருந்தும் அந்த படத்தை நான்   ரொம்பவே ரசித்தேன்..

பொதுவாக உலக படங்கள்… சம்பவங்களின்  கோர்வையாக மட்டுமே இருக்கும்.. அவர்கள் திரைப்படங்களில் திரைப்படத்தின் முடிவில் தீர்வை நோக்கி வலுக்கட்டாயமாக செல்லவேமாட்டார்கள்… அது ஒரு படைப்பாளியின் வேலை அல்ல….

சினிமா கலை தெரிந்தவர்களுக்கு இது புரியும்…தமிழில் அவ்விதமாக தீர்வை வலுக்கட்டாயமாக திணிக்காமல் அதன் போக்கில்  விட்டு விடுபவர்களில் இயக்குனர் மணிரத்னம் மிக முக்கியமானவர் என்று சொல்லாம்..

=========

Les_combattants_poster_franciafilmsunar5487451filmsunar54510filmsunar15121

சரி லவ் அட் பர்ஸ்ட் பைட் படத்தின் கதை என்ன?,

Madeleine பருவ பெண்… ராணுவத்தில் சேர வேண்டும் லட்சியமும் வேட்கையும் கொண்ட பெண்… Arnaud Labrède அவனுக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது…..,இராணுவ  தேர்வு நடக்கும் இடங்களில் அவனை பார்க்கலாம்…

அப்படியான ஒரு சந்திப்பில் இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் நிகழ்கிறது… அது காதலாக கனிந்ததா ? இல்லையா என்பதை திரைப்படத்தினை பார்த்து  தெரிந்துக்கொள்ளுங்கள்.

Arnaud Labrède  அண்ணனோடு கார்பென்டர் வேலை செய்தாலும் ராணுவ அக்காடமியில்  சேர்ந்து பயிற்சி  பெற வேண்டும்  என்ற ஆசை இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாதவன்…  Madeleine சேர்ந்து விட்டால் என்று சொன்னதும் தானும் சேரும் முடிவை எடுக்கும் இடம் கவிதை.

LES COMBATTANTS

ஜாலியா வாழ்கையை வாழனும்னு நினைக்கறவனும்… முன் கோபத்தோடு எதையும் அனுகும் பெண்ணும் ஒரு புள்ளியில் இணையும் போது  அது எந்த விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை ஜிகினாதனம் இல்லாமல்  செல்லுலாய்டில் சிறை பிடித்து இருக்கிறார் இயக்குனர்

Madeleine படம் முழுக்க ஒரு மெல்லிய  ஒயிட் பனியன் மற்றும் சுவிம்மிங் சூட்டில் நனைந்த படியே சுற்றுகிறார்… ஒயிட் பனியனோடு மழையில் நனைகிறார்.. நண்பனோடு சண்டை  இடுகிறார்… ஒயிட் பனியனோடு மழையில் தொப்பலாக நனைந்து அவர் இயல்பாக வசனம் பேசுகிறார்… நாம் தான் வசனத்தை கவனிக்காமல் Madeleine வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

========

படத்தின் டிரைலர்

 

படக்குழுவினர் விபரம்

Directed by Thomas Cailley
Produced by Pierre Guyard
Written by Thomas Cailley
Claude Le Pape
Starring Adèle Haenel
Kévin Azaïs
Music by Lionel Flairs
Benoît Rault
Philippe Deshaies
Cinematography David Cailley
Edited by Lilian Corbeille
Distributed by Haut et Court
Release dates
17 May 2014 (Cannes)
20 August 2014 (France)
Running time
98 minutes
Country France
Language French
Budget $3 million
Box office $2.2 million

=========

பைனல் கிக்.

2014 ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படம் நிறைய உலக திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.. சாதாரண  கதைதான்  ஆனால் அதை இயல்பாய் சொன்ன விதத்தில் மனிதில் நிற்கிறது இந்த திரைப்படம்.. உலக திரைப்படங்கள் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு  இந்த திரைப்படம் கண்டிப்பாக பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

லவ் அட் பர்ஸட் சைட்

============

படத்தோட   ரேட்டிங்.

பத்துக்கு ஏழு.

=====

இந்த தளம் பிடித்து இருந்தால் அவசியம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்…

 

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

====

பாலோஸ் ஆன்.

 

http://www.jackiecinemas.com/

https://www.facebook.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas

https://www.youtube.com/JackieCinemas