அன்சார்டட் (uncharted) விமர்சனம் !

 

சோனி நிறுவன சார்பில் வெளியாகி உலகம் முழுக்க புகழ்பெற்ற வீடியோ கேம் சீரிஸான ‘அன்சார்டட்’ தான் அதே பெயரில் அவர்களின் ஃபேவரைட் நடிகரான டாம் ஹாலந்த் நடிப்பில், படமாக வந்துள்ளது.

ஆய்வாளர் மெக்கலன் திரட்டிய 500 ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் தங்கப் புதையல், பல ரத்த காவுகளை வாங்கியும் மீட்டெடுக்கப்படாமல் உள்ளது. இந்த தங்கத்துக்கு சரியான வாரிசுகள் தான் என நினைக்கும் சாண்டியாகோ மான்காடா, தனது குடும்ப பாரம்பரியத்தை மீட்க நினைக்கிறார். அதேநேரம் பல பில்லியன்கள் மதிப்புள்ள அந்த தங்கத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது சுல்லி – நேட் – க்ளோயி கூட்டணி. தங்களிடம் இருக்கும் துப்புகளைக் கொண்டு உலகின் மிக பழமையான மர்மங்கள் நிறைந்த அந்தப் புதையலை இரு தரப்பும் எப்படி மீட்கிறது, இதன் பின்னணியில் இருக்கும் சவால்கள் என்ன என்பதை தான் இந்த படம் ஹாலிவுட் பாணி ஆக்சனில் சொல்லியுள்ளது.

நாவல், புத்தகங்களை தாண்டி இப்போது வீடியோ கேம்கள் படமாக வர ஆரம்பித்துவிட்டது ஆனால் எந்த வீடியோ கேம் படமும் இதுவரை ரசிகர்களை முழுதாக திருப்தி படுத்தவில்லை அந்த லிஸ்டில் இந்த படமும் இணைந்துள்ளது.

ஸ்பைடர் மேன் புகழுடன் டாம் ஹாலந்த் நடித்திருக்கிறார். சோனி அவரை வைத்து கல்லா கட்ட நினைத்திருக்கிறது. நாம் வழக்கமாக பார்க்கும் புதையல் தேடி போகும் ஹாலிவுட் படங்களில் என்ன நடக்குமோ அது அச்சரம் பிசகாமல் அப்படியே இதிலும் நடக்கிறது.

ரஃபே ஜட்கின்ஸ், ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹாலோவே திரைக்கதை அமைத்துள்ளனர்.கேமில் உள்ள பரபரப்பும் விறுவிறுப்பும் படத்தில் இல்லை. படம் லாஜிக் சொதப்பல்கள் ஆனால் தமிழ் டப்பிங் வசனங்கள் பல இடங்களில் அசத்தலாக இருக்கிறது.

எல்லாம் மறந்து ஒரு ஆக்சன் படம் பார்க்க விரும்புவர்களுக்கு ‘அன்சார்டட்’ நல்ல விருந்து.

Previous articleபிரபுதேவாவின் ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Next articleவீரபாண்டியபுரம் -திரை விமர்சனம் !