வீரபாண்டியபுரம் -திரை விமர்சனம் !

இயக்கம்- சுசீந்திரன்
நடிகர்கள் – ஜெய், மீனாக்‌ஷி, பாலசரவணன்

சுசீந்திரன் ஆரம்ப அறிமுக காலகட்டங்களில் அனைவரையும் யாரிவர் என திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ் சினிமா பார்க்காத கதைகளை அச்சு அசலாக பேசுவதாக பாரட்டப்பட்டவர், ஆனால் அப்படிபட்டவர் சமீப காலங்களில் அய்யோ அவரா ? என கவலைப்பட வைக்கிறார்.

அவரது சமீப கால படங்கள் சோபிக்காத நிலையில், ஜெயிக்க நினைத்து ஒரு பழிவாங்கல் கதையை கமர்ஷியல் மசாலா தூவி எடுத்திருக்கிறார்.

ஒரு கிராமம் அருகே இரண்டு குழுக்கள் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க காத்திருக்கிறார்கள். அந்த கூட்டத்திற்குள் ஒரு குழுவின் மாப்பிள்ளையாக உள்ளே நுழைகிறார் ஜெய், அவர் என்ன செய்கிறார் என்பது தான் திரைக்கதை.

படு மோசமான 80 கால திரைக்கதை, அதை விட மோசமான இயக்கம் திடீர் திடீரென வரும் பாட்டு என படம் நம் பொறுமையை சோதிக்கிறது.

ஜெய் இதில் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் மோசமில்லை. அவர் இன்னும் முயன்று கொஞ்சம் இசை பக்கம் திரும்பலாம் நடிப்பு ஒரே மாதிரி இருப்பது போல் இசை இல்லாமல் இருக்கிறது அதுவே நலம் தான்.

பாலசரவணன் படத்தை பல இடங்களில் ஏதோ பஞ்ச் அடித்து காப்பாற்றுகிறார். நாயகி மீனாக்‌ஷி ஹீரோயினுக்கு டூப் போட்டது போலவே இருக்கிறார்.

படத்தில் வழக்கமாக சுசீந்திரன் படங்களில் வரும் அனைத்து நடிகர்களும் வருகிறார்கள் ஆனால் எந்நேரமும் அருவாவோடு ரத்தம் பார்க்க சுத்துவதோடு சரி வேறெந்த காட்சிகளிலும் அவர்களை பார்க்க முடியவில்லை.

ஒளிப்பதிவு சுமாராக இருக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
படம் முழுக்க எல்லோரும் யாரையாவது நினைத்து கொண்டு பழிவாங்க அருவாவை தூக்கி கொண்டு ஓடுகிறார்கள். படம் பார்க்கும் நம்மையும் கொஞ்சம் நினைத்து பார்த்திருக்கலாம்.