வான் மூன்று திரை விமர்சனம் !

 

இயக்கம் –  ஏ எம் ஆர் முருகேஷ்

நடிகர்கள்  – வினொத்கிஷன் ,அபிராமி வெங்கடாசலம் , ஆதித்யா பாஸ்கர் , அம்மு அபிராமி மற்றும் டெல்லிகணேஷ்

இசை –  r2bros

ஒளிப்பதிவு – சார்லஸ் தாமஸ்

தயாரிப்பு – வினோத் சென்னியப்பன்

 

கதை

காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமிக்கு ஏற்படும் காதல் ஒரு வானம், 40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், டெல்லி கணேஷ் லீலா சாம்சன் ஜொடி இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழும் வினோத் கிஷன் அபிராமி வெங்கடாசலம்ஜோடி . அபிராமி வெங்கடாசலத்துக்கு மூளை பாதிப்பு ஏற்பட இவர்கள் படும் அவஸ்தை மூன்றாம் வானம். இந்த முன்று கதைகளிலும் என்ன நடக்கிறது என்பதே வான் மூன்று கதை.

படத்தில் திரைக்கதை அமைப்பதற்கு தேவையான கதையம்சம் இருந்தாலும், படத்தில் புதிதாக எதுவுமில்லை , ஆனால் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் படத்தை தாங்கிப் பிடித்துள்ளனர் . வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம் டெல்லி கணேஷ் லீலா சாம்சன் மற்றும் அம்மு அபிராமி ஆதித்யா பாஸாகர் என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.

சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவும் R2bros –ன் இசையும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.  இயக்குநர் ஏ.எம்.ஆர் முருகேஷ் மூன்று ஜோடிகளின் வாழ்க்கை பதிவை சொல்ல நினைத்திருக்கிறார் ஆனால் ஒன்றோடு ஒன்று இணைந்து எந்தவொரு கதையும் நம்மிடம் பாதிப்பு ஏற்படுத்த வில்லை, \

மொத்தத்தில் வான் மூன்று திரைக்கதையில் சிறிது மெனக்கெடல் போட்டிருந்தால் ஒரு அருமையான ஃபீல் குட் படமாக வந்திருக்கும்