சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி உடன் இணைகிறார் தனுஷ்

தமிழை தாண்டி ஹாலிவுட் முகம் பெற்ற தனுஷ், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் என பல மொழி படங்களை கையில் வைத்துள்ளார்.  சமீபத்தில் “ ஜகமே தந்திரம் “ திரைப்படம் நெட்பிலிக்ஸ்-ல் தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியானது.

 இதனை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படங்கள் மாறன், திரு சிற்றம்பலம்,  என தமிழ் படங்களும், The Gray Man  ஆங்கில படமும், Atrangi Re  ஹிந்தி படமும் ஒரு பட்டியலே உள்ளது. இந்த திரைப்படங்களுக்கு அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், தெலுங்கு-ல் சேகர் கமுலா இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் நடிப்பில் பல படங்கள் இருக்க, இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பெரிய நடிகர்களை இயக்கிய முன்னணி இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் படம் அரண்மனை 3. ஆயுதபூஜைக்கு அரண்மனை 3 வெளியாகும் என் ஏதிர்பார்க்க படுகிறது. இந்த திரைப்படதிற்கு அடுத்து, சுந்தர் சி, தனுஷ் உடன் ஒரு புதிய படத்தில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.