ஜீவனாம்சத்தை மறுத்த சமந்தா

 

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். நடிகை சமந்தா  மற்றும்- நாகசைதன்யா இருவரும் விவாகரத்து செய்ய போவதாக  கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே, செய்திகள் பரவி வந்த நிலையில், கணவரை விட்டு பிரிவதை சமந்தா சமூக வலைதளம் மூலமாக அறிவித்தார்.

 

பிரபலமான ஜோடியான நாகசைத்தன்யா-சமந்தா உடைய விவாகரத்து செய்தி பரபரப்பை கிளப்பி இருந்தது.  முன்னரே இந்த தீர்மானத்தை எடுத்த, சமந்தா மற்றும் நாக சைத்தன்யா ஜோடி, இப்போது தான் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.  இந்த பிரிவை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சமந்தா, தமிழிலும் சில படங்களை கையில் வைத்துள்ளார். 

இந்த விவாகரத்து பற்றிய இதர தகவல்கள் வெளியாகி உள்ளது. கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்த சமந்தாவிற்கு, ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுக்க, நாக சைத்தன்யா குடும்பம் முன் வந்ததாகவும், அதனை சமந்தா வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.