மெகா பவர் ஸ்டார் ராம் சரண், உப்பென்னா புகழ் புச்சி பாபு சனா இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது

* விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், சார்பில் தயாராகும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது*

இந்தியா கடந்து உலகை திரும்பி பார்க்க வைத்த பான் இந்தியா திரைப்படம் “RRR” மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மற்றொரு பான் இந்திய படத்தில் நடித்து வருகிறார். சரண் நடிக்கும் அடுத்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உப்பென்னா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இளம் இயக்குனர் புச்சி பாபு சனா ராம்சரணை இயக்குகிறார். பான் இந்தியா எண்டர்டெயின்ருக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட அட்டகாசமான திரைக்கதையை இயக்குனர் தயார் செய்துள்ளார்.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்க, இப்படத்தினை விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பேனர்களின் கீழ் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் மூலம் வெங்கட சதீஷ் கிலாறு திரைப்பட தயாரிப்பில் பிரமாண்டமாக இறங்குகிறார்.

இப்ப்டத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

நடிகர்கள்: ராம் சரண்

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர், இயக்குனர்: புச்சி பாபு சனா
வழங்குபவர்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
பேனர்: விருத்தி சினிமாஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

Ajith Thunivu Movie Release on Jan 11th
Previous article24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த Chup!!!
Next articleஇந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ தொடரின் பிரத்யேக காட்சி