24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த Chup!!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது. டாக்டர் ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டுடியோ, கௌரி ஷிண்டே, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அனில் நாயுடுவின் Hope production தயாரிப்பில், R.பால்கி இயக்கத்தில்,  சன்னி தியோல், துல்கர் சல்மான், ஸ்ரேயா தன்வந்தரி, பூஜா பட், சரண்யா பொன்வண்ணன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ-5-ல் இந்த படம் கிடைக்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, ZEE5 இல் திரையிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த திரைப்படம் 30 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது.

குரு தத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும், சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் திரைப்படம் திரைப்பட விமர்சகர்களைக் குறிவைத்து இயங்கும் ஒரு மனநோயுடைய கொலையாளியின் கதையை விவரிக்கிறது. திரைப்பட விமர்சனத்தின் நெறிமுறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பும் பரபர த்ரில்லர் படம் இது. ஒரு சிலரின் கருத்துக்கள் ஒரு கலைஞனின் தலைவிதியை தீர்மானிப்பதா? மறுபுறம், கலை விமர்சிக்கப்படாமல் இருக்க முடியுமா? இதை அலசுவதே சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்.  தனித்துவமான கதை, திறமைமிகு நடிகர்களின் நடிப்பு மற்றும் அசத்தலான ஒளிப்பதிவு என இப்படம்  உங்களை  இருக்கையின் நுனிக்குக் கூட்டி செல்லும்.

அமித் திரிவேதி மற்றும் சினேகா கான்வால்கரின் மெல்லிசை ட்யூன்கள் மற்றும் பின்னணியில் ஒலிக்கும் எஸ் டி பர்மனின் பாடல்களுடன், சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் திரைப்படம் ஊடகங்களின் உலகத்தை அழகாகச்  சித்தரிக்கிறது. இப்போது, ZEE5 இல் அதன் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம், இப்படம் 190+ நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்கு இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் கிடைக்கிறது.  அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் சப்டைட்டில் உடன் அசல் மொழியிலும்  இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம். .

 

ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்.., ஜீ5 தளத்தில், பார்வையாளர்களை புதிய கதைகள்  மூலம் மகிழ்விப்பதே எங்கள் நோக்கம. சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்திரைப்படம் நட்சத்திர நடிகர்களுடன் உருவான தனித்துவமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாகும். இந்த படத்தை நாங்கள் ஜீ5ல் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இதன் மூலம்சுப்திரைப்படம் பெரும்பான்மையான பார்வையாளர்களைச்  சென்றடையும் மற்றும் இந்த திரைப்படத்தினை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காத திரைப்பட ஆர்வலர்கள் இப்போது ஜீ5 இல் பார்த்து ரசிக்கலாம். ஆக்ஷன் த்ரில்லர்கள் இப்போது சிறப்பாக வரவேற்பை பெற்று வருகிறது, அந்த வகையில்சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்திரைப்படம் அதில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் சந்தாதாரர்கள் விரும்பும் திரைப்படமாக இது இருக்கும். இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லரை வெளியிடுவதில் இந்த படக்குழுவுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

 

MD of Pen Studios தலைவர் & MD டாக்டர் ஜெயந்திலால் கடாவ் கூறுகையில்,

“R. பால்கி கதை சொல்வதில் தனித்துவமானவர். மேலும் திறமையான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் PEN Studios பெருமிதம் கொள்கிறோம். ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’  மிகவும் அர்ப்பணிப்புடன் உருவான கதையாகும், இது பார்வையாளர்களைப் பெரிதும் கவரும். ஜீ5 உடன் இணைந்து பயணிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் இது திரைப்படம் உலகளவில் சென்றடையும் வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறது. மேலும் இது பார்வையாளர்களை அவர்கள் விரும்பும் மொழியில் பார்க்கும் வாய்ப்பை கொடுக்கும்.   தற்போது ஜீ5ல்  இப்படத்தைக் கண்டுகளிக்கலாம்.

 

 

நடிகர் சன்னி தியோல் கூறுகையில்,

இப்படத்தில் IG  அரவிந்த் மாத்தூரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்ததுஒரு புதிரைத் கண்டுபிடிக்கும் அனுபவமாக இருந்தது. இப்படம் தற்போது ஜீ5 இல் 5 வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது, அதிக ஸ்பாய்லர்களை வெளிப்படுத்தாமல் பார்வையாளர்கள் படத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படம் உங்களை பலவிதமான சஸ்பென்ஸுடன்  ஆச்சர்யப்படுத்தும். ”

 

நடிகர் துல்கர் சல்மான் கூறுகையில்.,

இப்படத்தில் தொடர் கொலையாளியான டேனியின் பாத்திரத்தை ஏற்று நடித்தது என் திரை வாழ்வில் இன்றுவரை மிகவும் கடினமானப் பாத்திரமாக இருந்து வருகிறது. விமர்சகர்களைக் கொலை செய்து, நகரம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தை பற்றி நினைக்கையில் பயமாக  தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு குற்றவாளியின் மனதின் ஒவ்வொரு அடுக்கையும் அலசி ஆராய்கிறது, இப்படம் பார்வையாளர்களின் மனதிற்குள் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தும்.சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்ஒரு வழக்கமான துப்பறியும் படம் அல்ல. மிரளவைக்கும்  ஒரு த்ரில்லர் அனுபவமாக  உங்கள் எதிர்பார்ப்புகளை  மீறி ஆச்சர்யப்படுத்தும்

 

 

ஸ்ரேயா தன்வந்தரி கூறியதாவது..,

 ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்ஒரு காதல் கதை. சினிமாவின் காதல் கதை. ரத்தமும் சதையும் கலந்த உலகில் ஒருவரையொருவர் கண்டுபிடிக்கும் இருவரின் காதல் கதை. குரு தத்துடன் ஒரு காதல் கதை. கொலையில் கலை தேடும் காதல் கதை. இப்படத்தின் திருப்பங்கள் உங்களை க்ளைமாக்ஸில் ஆச்சர்யபட வைக்கும். ஒரு ஆர்வமுள்ள திரைப்பட விமர்சகராக நடிக்கும் நிலா கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சியை அளித்தது. நிஜ வாழ்க்கையில் என்னைப் போலவே அவளுக்கும் சினிமா பிடிக்கும். நடிகர்களாகிய நாம் திரைப்பட விமர்சகர்களின் உடைய வேலையின் கடைசிக் கட்டத்தை மட்டுமே பார்க்கிறோம், ஆனால் மறுபக்கத்தைப் பார்க்கும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது. திரையில் நிலாவாக நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

 

 

இயக்குநர் R.பால்கி கூறியதாவது.,

சுப் திரைப்படம் உணர்ச்சிமிக்க கலைஞர்களுக்கு நாங்கள் கொடுக்கும் ஒரு அஞ்சலியை போல, முக்கியமாக குரு தத் அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். நீண்ட நாட்களாக என்னிடம் இந்த கதை இருந்தது, இறுதியாக இதை முழுமையாக எழுதியதில் மகிழ்ச்சி. குரு தத்தின் மிகச்சிறந்த படைப்பான Kaagaz Ke Phool கடுமையாக விமர்சிக்கப்பட்டது, படம் தோல்வியடைந்தது, அதன் பிறகு அவர் படம் எடுக்கவில்லை. கலையை விமர்சித்து கிழித்தெறியும்போது, ​​கலைஞரின் உணர்வினை பற்றி சிலர் மட்டுமே  சிந்திக்கிறார்கள். சுப் என்பது ஒரு கலைஞனின் படைப்பின் மீதான தாக்குதல் மற்றும் அத்தகைய விமர்சனத்திற்குக் கலைஞனின் எதிர்வினையை  ஆராயும் கதை. அதிகாரத்திற்கான பொறுப்பைத் தவறாகப் புரிந்துகொள்வதால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளைப் பற்றிய படம் இது.”

இந்த மர்மம்  நிறைந்த படத்தை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால்இப்போதே பாருங்கள்!,  ZEE5 இல் மட்டுமேசுப்: ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’-படத்தை உங்களால் காண முடியும்