Jackiecinemas

Inimey Ippadithan movie (2015) review |இனிமே இப்படித்தான் திரைவிமர்சனம்.

Tamil Cinema

????????????????????????????????????????????????????????????

சந்தானம் இனிமேல் நாயகனாகத்தான் நடிப்பேன்…. முக்கியமாக நெருங்கிய நண்பர்களுக்காக வேண்டுமானால் காமெடி வேடம் தரிப்பேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்… வல்லவனுக்குபுல்லும் ஆயுதம் திரைப்படத்துக்கு பிறகு ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம்…. லொள்ளுசபா டீமில் இருக்கும் அத்தனை நண்பர்களையும் கண்டிப்பாக இயக்குனராக களம் இறக்குவேன் என்று சொன்னதோடு அவருக்கு பஞ்ச் டயலாக் எழுதி கொடுக்கும் முருகன், ஆனந் என்ற இரண்டு நண்பர்களை முருகானந்த் என்று இயக்குனராக புரமோஷன் கொடுத்து இருக்கும் படம்.
=====

santhanams-inimey-ippadithaan-usa-show-timings-photos-pictures-stills

இனிமே இப்படித்தான்திரைப்படத்தின் கதை என்ன?,
3 மாதத்தில் சந்தானத்துக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்… அப்படி ஒரு சூழல்…நண்பர்கள் திருமணங்களை பார்க்கும் போது காதல் கல்யாணம் பெஸ்ட் என்ற முடிவுக்கு வந்து ஆஸ்சா சவேரியை லவ்வுகின்றார்.. ஆனால் அவர் பிடி கொடுக்வில்லை… வீட்டில் அகிலா கிஷோரை நிச்சயத்து விடுகின்றார்கள்…ஆனால் பாருங்கள் ஒரு குழப்பத்தால் அஸ்னா சவேரியின் காதலித்தது தெரியாமல் போய் விட.. நிச்சயதார்த்த பெண் அகிலா..…. காதலி ஆஸ்னாசவேரி இரண்டு பேரில் யாரை திருமணம் செய்து கொண்டு விட்டார் என்பதை வெண்திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
=====
சந்தானம்….காதல் காட்சிகளில்இன்னும் மெனக்கெட வேண்டும்… நிறைய டவுட்டை டன் கணக்கில் முகத்தில் வைத்துக்கொண்டு காதலிக்க காதலியிடம் நெருங்குவது போன்ற எக்ஸ்பிரஷன்.தான் ஹீரோ என்ற நம்பிக்கையோடு வெளிவந்தால்தான் அது சாத்தியம்.,ரொமான்ஸ் காட்சிகளில் சந்தானம் ஷேவ் செய்து விட்டு வந்து இருக்கலாம்… வெள்ளை முடி தெரிகின்றது… சொந்த படம் என்பதால் அவசரம் அவசரமாக நடித்து இருக்க வேண்டும்…??? ரொமான்சாக எப்படி நடிப்பது என்று சந்தானம் அவருடைய நண்பர் ஆர்யாவிடம் டிப்ஸ் பெற்றுக்கொண்டால் நலம்.

அஸ்னா சவேரி…. உதடும் கண்ணும் ஐஸ்வர்யா ராயை நினைவுப்டுத்துகின்றார்…ஓவர் மேக்கப்… அதிக லிப்ஸ்ட்டிக்.. தொடை தெரிய உடை போட்டு சிலகாட்சிகளில் சூடு ஏற்றுகின்றார்… முக்கியமாக கிளைமாக்சில் என்னை தொடாதே…? என்னை டி கோடாதே என்று சொல்க்கொண்டு கை அறுத்துக்கொள்ளும் இடத்தில் அவர் நடிப்பு அருமை.

Akhila-Kishore-Latest-Sexy-Photos-4
அகிலா கிஷோர்… கதை திரைக்கதை படத்திலேயே கவனம் ஈர்த்த பெண்.. நல்லஉயரம் நயன்தாரா போல சாயல்.. சிரிக்கும் கண்கள்…ஆனாலும் சரியான வாய்ப்பை இன்னும் தமிழ் சினிமா அவருக்கு வழங்கவில்லை.. மாடியில் சந்தானத்திடம் எதுவும் நடக்காதது போல பேசும் அந்த காட்சி சிறப்பான நடிப்பு…
தம்பிராமைய்யா.., நரேன் போன்றவர்கள் அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கின்றார்கள்…விடிவி கணேஷ் வரும் காட்சிகள் கல கல.

கேமராமேன் கோபி ஜகதீஸ்வர் அவரழ குரு பாலசுப்ரமணியம் பெயரை காப்பாற்றி இருக்கின்றார்… லோ பட்ஜெட் படத்தை ஹை பட்ஜெட் படமாக எடுத்து கொடுத்து இருக்கின்றார்… அகிலாவை ரொம்ப பிடிக்கும் போல…. குளோசப்களில் பில்டர் எல்லாம் போட்டு செம அழகாக காட்டி இருக்கின்றார்..

பாடல்கள் ரைம்ஸ் கெட்பதை போன்று இருக்கின்றது என்பதே எதார்த்தம்.

தொலைகாட்சியில் சின்ன வேடங்கள் செய்து , தமிழ் சினிமாவில் காமெடியானாக பிரபலமாகி, இன்று ஹீரோவாக அவதாரம் எடுத்து இருக்கின்றார்… சந்தானம்… அது மட்டுமல்ல… இந்த படத்தை சொந்தமாக தயாரித்து இருப்பதும் அவரே…
======
படத்தின் டிரைலர்..

=====
படக்குழுவினர் விபரம்.

Directed by Muruganand
Produced by Santhanam
Written by Muruganand
Starring Santhanam
Ashna Zaveri
Akhila Kishore
Music by Santhosh Kumar Dhayanidhi
Cinematography Gopi Jagadesswaran
Edited by Anthony L. Ruben
Production
company
Handmade Films
Distributed by Suara Networks (Malaysia)
Release dates
12th June 2015
Running time
2h 14mins
Country India
Language Tamil
=======
பைனல்கிக்.

இந்த திரைப்படம் வழக்கமான பார்த்து பார்த்து புளித்து போன கதையை கொண்டு இருந்தாலும் இந்த படம் சில நுட்பங்களை காமெடியாக போகிற போக்கில் பேசி செல்கின்றது…
காதலுக்கு கண்ணில்லை… அதனால் அழகான பெண் சப்பை பையனையும், சப்பை பையன், அழகான பையனையும் காதலில் கரெக்ட் செய்து விடுவது வேறுகதை..
ஆனால் அம்மா அப்பாவிடம் பசங்க… நீங்க பெண்ணோ பையனோ பார்த்து ஓகே சொன்னா போதும் என்ற பொறுப்பை பெற்றோர் இடத்தில் கொடுக்கும் பசங்களையும் பெண்களையும் அவர்களது பெற்றோர்… 50 சவரன் நகை மற்றும் பைக்கிற்காக கிஞ்சித்தும் பொறுத்தமே இல்லாதவர்களை திருமணம் செய்து வைக்கும் கொடுமைகளை மிக அழகாக இந்த படம் போகின்ற நக்கலோடு போக்கில் பேசுகின்றது…

ஏதார்த்தமான வாழ்க்கையை பதிவு செய்த நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ் முக்கியமாக சின்ன வீடு திரைப்படத்தை நினைவு படுத்து கிளைமாகஸ்தான் என்றாலும்… அந்த அன்னியோன்யம்.. சின்னதாக கண்களில் நீர் கசிவை வரவைக்கின்றது…இனிமே இப்படித்தான் திரைப்படத்துக்கு கூடுதல் பலம்… புதியதான் எதுவும் சொல்லமால் செப்ட்டி திரைக்கதையில் பயணம் செய்து இருக்கின்றார்கள்.. வார்த்தை விளையாட்டில் ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்.. படம் ஜாலியாக செல்கின்றது..இனிமே இப்படித்தான் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Related posts

𝑲𝑨𝑳𝑨𝑴 𝑺𝑨𝑳𝑨𝑨𝑴 – 𝑽𝑰𝑹𝑻𝑼𝑨𝑳 𝑻𝑹𝑰𝑩𝑼𝑻𝑬 𝑻𝑶 𝑻𝑯𝑬 𝑷𝑬𝑶𝑷𝑳𝑬’𝑺 𝑷𝑹𝑬𝑺𝑰𝑫𝑬𝑵𝑻 𝑶𝑵 𝑯𝑰𝑺 5𝑻𝑯 𝑹𝑬𝑴𝑬𝑴𝑩𝑹𝑨𝑵𝑪𝑬 𝑫𝑨𝒀 𝑭𝑹𝑶𝑴 7.00𝑷𝑴 𝑶𝑵𝑾𝑨𝑹𝑫𝑺

admin

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்

admin

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்

admin

Leave a Comment