Romeo Juliet movie Review 2015|ரோமியோ ஜூலியட் திரைவிமர்சனம்.

romeo-juliet-poster_139744498800

இயக்குனர் எஸ்ஜே சூர்யாவின் மாணவர் லக்ஷ்மன் இயக்கும் ரோமியோ ஜூலியட் என்று படம் பற்றிய செய்தி வந்ததுமே…நிமிர்ந்து உட்கார்ந்தது தமிழ் திரையுலகம்.. காரணம் எஸ்ஜே சூர்யா திரைப்படங்கள்… அப்படி பட்டவை… அவருடைய சிஷ்ய கோடி என்றால் ???எதிர்பார்ப்பை எகிற வைப்பது போல .. படத்தின் போஸ்ட்டரும் அமைந்தது…படுக்கையில் ரவியும் ஹன்சிகாவும் இருப்பது போல….
டிரரைலர் இன்னும் சிறப்பாக இருந்தகாரணத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி போனது..
எங்கேயும் காதல் திரைப்படத்துக்கு பிறகு ரவியும் ஹன்சிகாவும் இணைகின்றார்கள்…
=====
ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் கதை என்ன??

romeo-juliet-tamil-movie-hansika-motwani-jayam-ravi-poster-pic
ஏர்ஹோஸ்ட்டல் ஹன்சிகா… ஜிம் டிரெயினர் ரவியை பார்த்து பணக்காரர் என்று நினைத்துக்கொண்டு காதல் வயப்படுகின்றார்..ரவியும்.. பம்ளிமாஸ் போல ஒரு பெண் நம்மை வட்டம் இடுதே என்று காதல் கொள்கின்றார்… ஆனால் ரவி பணக்காரர் இல்லை என்று தெரிந்ததும் காதலை உதறுகின்றார் ஹன்சிகா.. ரவி அப்படியே சும்மாவா விட்டு விடுவார்.. அவர் என்ன செய்தார்.. ஹன்சிகா சந்தித்த சிக்கல் என்ன? என்பதை வெண்திரையில் கண்டு மகிழுங்கள்.

====
ரவியின் பிரச்சனையே அவருடைய குரல் தான்.. இந்த படத்தில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகின்றது.. கீச்சுகுரல் கொஞ்சம் கம்மியானது போல ஒரு பிலிங்.. எனக்கு மட்டும்தானா?
மேன்லியாக இருக்கின்றார்.. லோக்கல் காஸ்ட்யூமில் ஒட்டாமல் அவரை பார்க்க வெறுப்பாய் இருக்கின்றது.. அனால் இதுவே ஜீவா பக்காவாக செட் ஆவார்.ஹன்சிகாவிடம் உனக்கு அம்மா அப்பாவாக நான் இருப்பேன் என்று சொல்லும் காட்சியில் சிறப்பாக நடித்து இருக்கின்றார்.
ஹன்சிகா..செமையாக கியூட்டாக இருக்கின்றார்… குஷ்புஇடத்தை பிடித்த காரணத்தால் இந்த படம் ஓட ஹன்சிகா முக்கிய காரணியாக இருக்கின்றார்.. அந்த சின்ன சின்ன எக்ஸ்பிரஷன் எல்லாம் சோ கியூட் என்று சொல்ல வைக்கின்றார்…பருவமே புதிய பாடல் பாடு பாட்டுக்கு அவர் ஓடி வரும் போது தியேட்டரில் படம் பார்க்கும் ஆண் ஆடியன்ஸ் அத்தனை பேருக்கும் நெஞ்சம் படபடப்பதை தவிர்க்க முடியவில்லை.. முக்கியமாக அந்த கிளைமாக்சில் நடிப்பில் பின்னு இருக்கின்றார் ஹன்சிகா..

?????????????????????????????????????????????????????
புனம் பஜ்வா. சேம ஹாட்டாக இருக்கின்றார்…. ஒரு வெள்ளை சட்டையில் வந்து சூடு ஏற்றுகின்றார்… கேமரா பின் பக்கம் அவர் நடந்து செல்வதை காண்பிக்கும் போது பின்பக்க தொடைகளில் புள்ளி புள்ளியாக டாட் இருக்கின்றது… மேக் மேன் பவுடர் போட்டு கரெக்ட் பண்ணி இருக்கலாம்.. பட் கொஞ்சம் நேரம் வந்தாலும் பஜ்வா மனதில் நிற்கின்றார்.

கேமராவை சவுந்தர்ராஜன் கையாண்டு இருக்கின்றார்… பிரேமுக்கு பிரேம் கண்ணில் ஒத்திக்கொள்வது போல அசத்தி இருக்கின்றார்…
இசை இமான்… டண்டணக்கா பாடலும்…. வைக்கம் விஜயலட்சுமியின் இதற்குதானே பாடலும் அருமை…
====
படத்தின் டிரைலர்.


===
படக்குழுவினர் விபரம்…

Directed by Lakshman
Produced by S. Nanthagopal
Written by Lakshman
Starring
Jayam Ravi
Hansika Motwani
Vamsi Krishna
Poonam Bajwa
Music by D. Imman
Cinematography S. Soundar Rajan
Edited by Anthony
Production
company
Madras Enterprises
Distributed by Sun Pictures
Release dates
12 June 2015
Running time
150 minutes
Country India
Language Tamil
=======
பைனல்கிக்.
கதை என்று புதியதாய் எதுவும் இல்லை… அடித்து துவைத்து காய போட்ட கதைதான்.. ஆனாலும் தியேட்டரில் விசில் பறக்கின்றது.. அதுவும் காதலித்து ஏமாற்றிய ஹன்சிகாவை ரவி வாரி வாயடைக்கும் இடங்களில் பசங்க ரொம்பவே என்ஜாய் செய்கின்றார்கள்… எனக்கு தெரிந்து ஒரு பெண் இரண்டு பேரை காதலித்து வைரலாக பரவிய வாட்சப் இந்த கை தட்டலுக்கு காரணமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்…

பேசும் போது எதையாவது புடிச்சிக்கனாதான் எனக்கு பேசவே வரும் என்று ரவி சொல்ல…ஹன்சியா வெளிறிபோய் பார்க்க…உன் கன்னத்தை பிடிச்சிக்கறேன் என்று ரவி சொல்லும் போது,சூர்யாவின் சிஷ்யன் மெல்ல எட்டிபார்க்கின்றார்…

இந்த படம் என்னை பொறுத்தவரை டைம்பாஸ் படம்.. ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் என்ஜாய் செய்கின்றார்கள்.. காதலர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்…

=