Bahubali Trailer Launch|ss rajamouli speaks making Bahubali|பாகுபலி டிரைலர் வெளியீடு

unnamed

பாகுபலி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் ஹயத் ஓட்டலில் நடைபெற்றது… விழாவில் இயக்குனர் எஸ் ராஜமௌலி பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சூர்யா, நாசர், சத்தியராஜ், மதன்கார்கி போன்றவர்கள் கலந்துகொண்டார்கள்.

ஒரு இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் எஸ் எஸ் ராஜமௌலி. பாகுபலி படத்தை பார்த்து விட்டு ஷங்கரை விட எஸ் ராஜமௌலி சிறந்தவர் என்று மீடியாக்கள் பேச.. அதற்கு எஸ் ராஜமௌலி ஷங்கர் சார்… சிஜி விஷுவல் எபெக்ட் போன்றவற்றை அவருடைய திரைப்படங்களில் கையாண்டு வெற்றியடைந்த போது தனக்கு எதுவுமே அதை பற்றி தெரியாது என்று உண்மையை ஒத்துக்கொண்டதோடு ஷங்கருக்கு பின் என் பெயர் வருவதுதான் பொருத்தம் என்று பெரும்தன்மையோடு பத்திரிக்கையாளர்களிடம் சொல்லி இருக்கின்றார்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே பிரி புரொடெக்ஷனுக்கு ஒரு வருடம் எடுத்துக்கொண்ட திரைப்படம் பாகுபலிதான்….

பாகுபலி தெலுங்கு டப்பிங் படம் அல்ல… ஒரிஜினல் தமிழ் திரைப்படம் … படம் எடுக்கும் போதே இரண்டு மொழிகளில் வசனம் பேசி படம் பிடித்து இருக்கின்றார்கள்..

தமிழ் பாகுபலிக்கு வசனம் மதன் கார்க்கி…

.பாகுபலி திரைப்படத்தை வேறு ஒரு இயக்குனர் எடுத்து இருந்தால் அது அவருடைய கனவு படம் என்று சொல்லி இருப்பார்… ஆனால் எனக்கு இது கனவு படம் எல்லாம் இல்லை.. இதுதான் என் வாழ்க்கை… அப்பா எனக்கு சின்ன வயதில் அமர் சித்திரகதா புத்தகத்தில் வந்த ராஜா ராணி கதைகளே இது போன்ற திரைப்படங்களை உருவாக்க காரணமாக இருந்தன என்றார் இயக்குனர் எஸ் ராஜமௌலி..

அதே போல சென்னையில்தான் தான் பிறந்தது படித்தது என்று சகலமும்… திரும்பவும் சொந்த மண்ணில் நிற்பது போன்ற உணர்வை கொடுக்கின்றது என்று மேடையில் உணர்ச்சி வசப்பட்டார்… பாகுபலி திரைப்பட உருவாக்கம் பெரிய சவால்… 2000 பாடி பில்டர்கள் அவர்களை ஓட்டலில் இருந்து அழைத்து வந்து அவர்களுக்கு மேக்கப் விக் எல்லாம் வைத்து அவர்களுக்கு போர் தளவாட கருவிகள் கொடுப்பதே… பெரிய வேலையாக இருக்கும்… அதன் பிறகுதான் நான் ஷாட் மற்றும் விஷுவல்களில் கவனம் செலுத்தினேன்… என்னுடைய லைன் புரொட்யூசர் இல்லையென்றால் இது சாத்தியம் இல்லை என்று வெளிப்படையாக பேசினார்.

நாயகன் பிரபாஸ் பற்றி பேசிய போது….நான் ஒரு வருடத்துக்கு கால்ஷீட் கேட்டேன்… ஆனால் அவர் எனக்கு இரண்டு வருடத்துக்கு கால்ஷீட் கொடுத்தார்… இப்போது மூன்று வருடம் ஆகிவிட்டது என்று ஏகத்துக்கு புகழ்ந்தார்..

அதே போல மேடையில் அனுஷ்காவை வைத்துக்கொண்டே… என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் தமன்னா போன்ற ஒரு சின்சியர் ஆன ஆர்ட்டிஸ்ட்டை நான் பார்த்ததே இல்லை என்று ஓப்பனாக ஸ்டேட்மென்ட் கொடுத்தார்… பொதுவாக இது போன்று எந்த இயக்குனரும்… ஒரு நாயகியை சபையில் இருக்கும் பொது மற்ற நாயகியை புகழ்ந்து பேசமாட்டார்கள்… ஆனால் ராஜமௌலி செம தில்லாம பேசினார்…. அதற்கு ஒரு கட்ஸ் வேண்டும்…

அதே போல பிரமாண்ட படங்கள் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்… ஆனால் அதனை பிரண்டிங் செய்ய கொஞ்சம் மூளை வேண்டும்… அது ராஜமௌலிக்கு அதிகமாகவே இருக்கின்றது… காரணம்.. எல்லா எவிகளையும் பார்த்த போது.. அவர் மிகச்சரியாக தன் படப்பை பிராண்டிங் செய்வதில் வல்லவர் என்பது தெரிந்து போனது…

raja

நிச்சயம் பாகுபலி இந்திய திரையுலகில் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறப்போவது நிச்சயம் என்பது மட்டும் உண்மை.