Kaakka Muttai (2015) movie review | காக்கா முட்டை திரைவிமர்சனம் |தமிழில் ஒரு உலக சினிமா

Danush's Kakka Muttai First Look Posters

ஏற்ற தாழ்வுகள் கொண்ட நகரம் சென்னை.. அதிலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து… கடந்த பத்து வருடத்தில் வெவ்வேறு முகமூடிகளை சென்னை மாட்டிக்கொண்டுவிட்டது.…

பீட்சா ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்று என் நான்கு வயது மகளுக்கு தெரிகின்றது. ஆனால்அதே பீட்சாவை சுவைத்த பார்க்காத குழந்தைகளுக்கும் இதே சென்னையில் வாழ்கின்றார்கள்..

சினிமா என்பது சமுகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்சினிமாக்கள் நடுத்தர அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையைதான் அதிகம் பதிவு செய்து இருக்கின்றன.. ஆனால் விளம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்த திரைப்படங்கள் மிக மிக குறைவு…. உதாரணத்துக்கு ஈரான் படங்களை பார்த்தால் அந்த தேசத்தின் வறுமை அவர்கள் வாழ்வியல் போன்றவற்றை எளிதாக புரிந்துக்கொள்ளலாம்… இந்தி படங்கள் கூட வருடத்தில் நான்கைந்து படங்களில் விளம்புநிலை மக்களில் வாழ்வியலை பதிவு செய்கின்றன… ஆனால் தமிழில் மிக குறைவு… அந்த குறையை எந்த சினிமா பூச்சும் இன்றி காக்கா முட்டை சாதித்து இருக்கின்றது.

ஆர்டர் செய்தால் பீட்சா வீடு தேடி வரும்… ஆனால் அதே பீட்சாவை சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரம் வசிக்கும் வறுமை சூழல் கொண்ட இரண்டு சிறுவர்களுக்கு பீட்சா எட்டாக்கனியாக இருக்கின்றது…

சார் இப்ப எல்லாம் பணம் புழங்குது… 300 ரூபாய் பீட்சா எல்லாம் ஜூஜூப்பி என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்… கொஞ்சம் மனசாட்சியை அடகு வைத்து விட்டால் போதும் எல்லாமே கைவசம் அகும் எல்லாமே ஜூஜூப்பிதான்… ஆனால் நேர்மையாக வாழ வேண்டும் என்று யோசித்தால்… அதன் படி வாழ்தால்… சாதராண பீட்சா சுவை என்பதே போராட்டம்தான்…

சென்ட்ரல் போகும் போது பாடிகாட் மூனிஸ்வரன் கோவிலை தாண்டி பாலம் ஏறுகையில் வலப்பக்கம் பூங்கா நகர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி ஒரு குப்பம் இருக்கின்றது. அங்கேதான் தில்சன் என்ற பையன் பாதம் கொட்டை எடுக்க போய் ஒரு மில்ட்ரி ஆபிசரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லடப்பட்ட இறந்து போன இடம் அங்கேதான் இருக்கின்றது…

பாதம் கொட்டை எடுக்க போய் உயிர் விடும் அளவுக்குதான் அங்கே வாழ்க்கை இருக்கின்றது… பசிக்கு எதாவது கொறிக்கலாம் என்று சென்று உயிர் விட்டவன் அங்கேததான் வாழ்ந்தான்… அது போன்ற இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்படும் கதைதான் காக்கா முட்டை

========
காக்கா முட்டை படத்தின் கதை என்ன..?

ரமேஷ், விக்னேஷ் அண்ணன் தம்பிகள். அம்மா ஐஸ்வர்யா குப்பத்தில் தன் பிள்ளைகளுடன் சொற்ப வருமானத்தில் வசிக்கின்றார்கள்.. கணவன் திருட்டு கேசில் ஜெயிலில்….ரயில் டிராக் ஓரம் விழுந்து கிடக்கும் நிலக்கரிகளை பொறுக்கி எடுத்து விற்று வரும் சொற்பவருமானத்தில் வாழ்க்கை ஓட்டிக்கொண்டு இருக்கையில்… அவர்கள் ஏரியாவில் நடிகர் சிம்பு ஒரு பிட்சா கடை திறந்து வைக்க… அந்த பீட்சா ருசி எப்படி இருக்கும் என்ற அறிய விரும்பும் சிறுவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்தான் இந்த படத்தின் மீதிக்கதை.

=====
படத்தின் சுவாரஸ்யங்கள்…

மிக அற்புதமான திரைப்படம்… சிறுவர்கள் இரண்டுபேரும் கலக்கி இருக்கின்றார்கள்.. சில்ட்ரன்ஸ் ஆப் ஹேவன் என்று சொல்லிக்கொள்ளும் போது இனி காக்கா மூட்டையையும் கண்டிப்பாக சொல்லிக்கொள்ளலாம்…
எனக்கு சினிமா தெரியும்… கரைச்சி குடிச்சி கிழிச்சிட்டேன் என்று மார்த்தட்டிக்கொள்ளுபவர்கள் இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்ப்பது நல்லது… ஒரு நல்ல சினிமாவுக்கான உருவாக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று.??

இயக்குனர் மணிகண்டன் ஒளிப்பதிவும் செய்து எழுதி இயக்கி இருக்கின்றார்… அதிக பட்சம் ஒரு கோடி என்பதே இந்த திரைப்படத்தை பொருத்தவரை அதிகமான தொகை… அந்த தொகையில் உலக தரத்தில் ஒரு திரைப்படம்…
ஏற்கனவே உலக திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பெரும் பாராட்டை பெற்ற இந்த திரைப்படம்… இரண்டு சிறுவர்களுக்கும் சிறந்த நடிப்பு…மற்றும் சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படமாக தேசிய விருது இரண்டினை இந்த திரைப்படம் பெற்றுள்ளது…
02-1425298331-aishwarya-rajesh-s1s1-600
படத்தின் பாராட்ட பட வேண்டிய மற்றொருவர்…. நடிகை ஐஸ்வர்யா.,.. சான்சே இல்லை… அந்த குப்பத்தின் உள்ளே நடிக்கவே கூச்சப்படும் நடிகைளுக்கு மத்தியில் அந்த குப்பத்து வீட்டில் இருக்கும் பெண்ணாகவே வாழ்ந்து நடித்து இருக்கின்றார்.. பேச்சும் உடல் மொழியும் அருமையோ அருமை… அதுவும் புடவையை அப்படியே சாவு வீட்டில் வழித்துக்கொண்டு எழுந்து நடப்பது என்று அப்படியே டிட்டோவாக செய்து இருக்கின்றார். மேக்கப் எல்லாம் இல்லாமல்… இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதோடு சோற்றை தின்றுக்கொண்டு வக்கிலை திட்டும் அந்த காட்சி இயல்பான காட்சிக்கு ஒரு ஷொட்டு…

பாட்டி பேர பிள்ளைகளுக்கு பீட்சா ரெடி செய்து தருவதும்… அதை உவ்வே என்று புறக்கணிப்பாதும்.. அதே பீட்சாவை வாங்கி சாப்பிடும் போது பாட்டி செய்த தோசை பீட்சாவே நன்றாக இருக்கும் என்று உணUம் காட்சி அருமை…

இலக்கை நோக்கி செல்லும் போது தவறு செய்ய நிறைய வாய்ப்பு இருந்தும் அதனை தவிர்ந்து விட்டு செல்லும் பெரிய காக்கா முட்டை நெஞ்சில் நிற்கின்றான்… அதை விட சின்ன பையன் பீட்சா கடையில் நுழைந்ததுமே.. ஜில்லிப்பா இருக்கு என்று சொல்வது.. பணத்தை எண்ணி எண்ணி பார்ப்பதும் வறுமை வாழ்கையை மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றார் இயக்குனர் …

பிட்சா படத்தை காட்டி இதைதான் சிம்பு துன்னுவானா?? ஏன் நம்ளை போல ரசம் சாதம் எல்லாம் சாப்பிட மாட்டானா?? என்று ரயில்வே கலாசி கேட்கும் இடம் அருமையோ அருமை.

வீட்டில்தான் ஈ இருக்கின்றது என்று பார்த்தால் பீட்சா கடையில் காக்கா முட்டை சிறுவர்கள் சாப்பிடும் இடத்திலும் ஈ இருக்கும்….வறுமை ?ஈ மூலம் துரத்துகின்றாதா? என்று எதையாவது எழுதி வைக்கலாம் என்று பார்த்தால் ….ஷாட்டுல ஈ வந்துச்சி ,..சரி அப்படியே விட்டு விட்டேன் என்று இயக்குனர் மணிகண்டன் நடந்ததை ஒத்துக்கொண்டார்……

இரண்டாம் பாதியில் என்ன பெரிய விறு விறுப்பு இருந்து விட போகின்றது என்று பார்த்தால்…. சூது கவ்வும் ரமேஷ் மற்றும் யோகி பாபு ரெண்டு பேரும் அடிக்கும் கூத்து .. உள் குத்தி சான்சே இல்லை…

நல்லவாயன் சம்பாதிக்க நாற வாயன் சாப்பிடுவான் எண்ணும் பழமொழிக்கு ஏற்ப்ப… சப்ஜெக்டல இல்லாதவன் எல்லாம் எப்படி பொழைக்கறான் என்பதை பகடியாய் சொல்லி இருக்கின்றார்…
nf5m4ibbebbsi_small

போகின்ற போக்கில் பொங்கல் வைக்கும் டிவி சேனல்களையும் விட்டு வைக்கவில்லை. அதையும் கலாய்த்து இருக்கின்றார்..முக்கியமாக கேள்வி கேட்கும் போது சிறிய விளம்பர இடைவேளை என காம்பயரர் சொல்ல… சான்சே இல்லை.

,இந்த படத்திலும் குறைகள் இருக்கின்றன… என்னால் நிறைய சொல்ல முடியும்.. ஆனால்… அவைகளை சொல்லி என்னை பெரிய ஆளாக்கி கொள்ள இந்த படத்தை பொருத்தவரை நான் விரும்பவில்லை..

ஜிவி பிரகாஷின் இசை… உலக சினிமா தரத்தில் இருக்கின்றது… அதே போல காலஞ்சென்ற எடிட்டர் கிஷேர்… ரொம்ப தரமாக விறு விறுப்பாக எடிட் செய்து இருக்கின்றார்.

=====
படத்தின் டிரைலர்..

=====
படக்குழுவினர் விபரம்.

Directed by M. Manikandan
Produced by Dhanush Kastooriraja
Vetri Maaran[1]
Written by Manikandan
Starring Ramesh
Vignesh
Music by G. V. Prakash Kumar
Cinematography Manikandan
Edited by Kishore Te.
Production
company
Wunderbar Films
Grass Root Film Company
Distributed by Ace Studios, Transmission Films
Release dates
June 5th 2015
Running time
109 minutes
Country India
Language Tamil
=====
பைனல்கிக்.
தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உலக தரத்தில் ஒரு உலக சினிமா காக்கா முட்டை… அவசியம் குடும்பத்தினரோடு இந்த திரைப்படத்தை முக்கியமாக பசங்களை அழைத்துக்கொண்டு சென்று கண்டு களிக்க வையுங்கள் அப்போதுதான் ஒரு பிட்சா வாங்கி திங்க கூட வக்கில்லாத பிள்ளைகளும் இந்த சென்னையில் இருக்கின்றார்கள் என்பதை வளரும் சமுதாயம் உணர வேண்டும்… யாழினி சொல்லுவாள்… மெரினாபிளாட்பாரத்தில் படித்து இருப்பவர்களை பார்த்து விட்டு அப்பா நான் பெரிய ஆளா ஆயி… இவுங்களுக்கு எல்லாம் நான் வீடு கட்டி கொடுப்பேன்… மழை வந்தா பாவம் இல்லைப்பா என்பாள்… அத போல இந்த படத்தை பார்த்தால் காசில்லா சிறுவர்களை கேவலமாக பார்க்கும் செயல் மாறும். கவுரவேடத்தில் நடித்துக்கொடுத்த சிம்பு.., படத்தை தாயரித்த வெற்றி மாறன்..மற்றும் தனுஷ்.. படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கிய மணிகண்டம் டீமுக்கு நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். காக்கா முட்டை தமிழில் ஒரு உலக சினிமா… காக்கா முட்டை கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.

வீடியோ விமர்சனம்.

Previous articleBahubali Trailer review| பாகுபலி டிரைலர் விமர்சனம்.
Next articleBahubali Trailer Launch|ss rajamouli speaks making Bahubali|பாகுபலி டிரைலர் வெளியீடு