பாஸ்ட் பியூரியஸ் திரைப்படத்தின் இலக்கு…
இளைஞர்கள்….
உலகம் எங்கும் இருக்கும் இளைஞர்கள்தான்இந்த திரைப்படத்தின் பார்வையாளர்கள்..
அதனால்தான் கொம்பன் ,நண்பேண்டா போன்ற திரைப்படங்கள் புக் ஆக நேரம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது அனைத்து வெள்ளி , சனி ,ஞாயிறு என்று மூன்று தினங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் சத்தியத்தில் விற்று தீர்ந்தன… அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது இளைஞர்களுக்கு கிரேஸ் அதிகம்.….
காரணம் படத்தின் வேகம்… வேகமாக கார் ஓட்டுவது இதுதான் இந்த படத்தின் அடி நாதம். முதல் இரண்டு பாகங்களில் வின்டீசல் ,பவுல்வால் இரண்டு பேரில் யார் காரை வேகமாக ஓட்டுகின்றார்கள் என்பதுதான் படடத்தின் ஒன்லைன்.. அதன் பின் இரண்டு பேரும் நண்பர்கள் ஆகி… வின் டீசலின் தங்கையை பவுல் திருமணம் செய்ய மாமான் மச்சானாகி விட்டார்கள்….
அது மட்டுமல்ல கவர்மென்ட் கொடுக்கும் ஆப்த ரெக்கார்ட் வேலைகளை வின்டீசலின் ஐவர் குழு கணக்கச்சிதமாக முடித்து வைக்கும்… அதாவது வெட்டிக்கொண்டு வா என்றால் வெட்டி எடுத்து கட்டிக்கொண்டு வந்து காலடியில் வைக்கும் ரகம்.
இந்த படத்தின் ஏழாம் பாகம் எடுக்கின்றார்கள் என்று சொன்னதுமே ரசிகர்கள் உற்சாகமானார்கள்.. ஆனால் பவுல், படம் பாதி முடியும் போது…. கார் விபத்தில் சிக்கி மரித்து போனார்… உலகம் எங்கும் ரசிகர்கள் விக்கித்து போனார்கள்…
முக்கிய கேரக்டர் இறந்து போய் விட்டார்… என்ன செய்ய போகின்றார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறிகிடந்தது… எம்ஜிஆர் பாதியில் நடித்து விட்டுபோன படத்தை, இயக்குனர் பாக்கியராஜ் 1990 ஆம் ஆண்டில் அவசர போலிஸ் 100 என்ற திரைப்படத்தை எம்ஜிஆர் நடித்த பாகங்களை வைத்து திரைப்படத்தை எடுத்தார்.. அந்த திரைப்படம் எப்படி எடுத்து இருப்பார் என்று பார்க்க எம்ஜிஆர் ரசிகர்கள் எப்படி ஆர்வமாக இருந்தார்கேளோ… அதே போல இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி போய் இருந்தது… அதனால்தான் இந்த திரைப்படம் யுனிவர்சல் பிக்சர் எடுத்த திரைப்படத்திலேயே முதல் வாரத்திலேயே கலெக்ஷனில் கொலை குத்து கொய்யா குத்து குத்தி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் இது என்றும்.. எங்கள் திரைத்துறை வரலாற்றிலேயே பியூரியஸ் செவன் போல எந்த படமும் முதல் வாரத்தில் பெரிய வசூலை எடுக்கவில்லை என்று ஸ்டேட்மென்ட் விட்டுள்ளது..
பாஸ்ட் பியுரியஸ் கதை என்ன?
வேகமாக கார் ஓட்டுவதில் ஜகஜால கில்லாடிகள் வின் டீசல் , பால் வாக்கர், மற்றும் அவர்களின் கில்லாடி ஐவர் கூட்டனியிடம் ராக் ஜான்சன் பொறுப்புகளை ஆப்த ரெக்கார்டாக கொடுத்து சாதித்துக்கொள்ளுவார்….. இதுதான் ஆரம்பாகத்தில் நடந்தது… இந்த பாகத்தில் இந்த வின் டிசல் டீமிடம் உலகத்திலே யாராக இருந்தாலும் அவர்களை இரண்டு மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் சாட்வேரையும் அந்த சாப்ட்வேரை கண்டு பிடித்த பெண்ணையும் கடத்துகின்றார்கள்.. அந்த சாப்ட் வேரையும்…அதை கண்டு பிடித்த பெண்ணையும் எப்படி காப்பாற்றுகின்றார்கள் என்பதுதான் பாஸ்ட் பியுரியஸ் ஏழாம் பாகத்தில் கதை.
படத்தின் சுவாரஸ்யங்கள்… வித் ஸ்பாய்லர்ஸ்….
ஏழாம் பாகத்தில் என்ன வித்தியாசத்தை வைக்கலாம் என்று மண்டையை பிய்த்துக்கொண்டு யோசித்ததில் கடந்த பாகத்தில் இறந்து போன வில்லனின் தம்பியாக டிரான்ஸ்போர்டர் ஜேசனை களம் இறக்கிஇருக்கின்றார்கள்..
மனிதர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் கை தட்டல்… வின் டீசல் குழுதான் தன் அண்ணின் இறப்புக்கு காரணமானவர்கள் என்பதால் அவர்களை வேர் அறுக்க அவர் காட்சிக்கு காட்சி வந்துக்கொண்டே இருக்கின்றார்…
இதெல்லாம் பத்தாது என்று தாய்லாந்து ஆக்ஷன் மன்னன் டோனி ஜா இந்த திரைப்படத்தில் வில்லன் கையாளாக நடித்து இருகிக்னறார்…
கடத்தி செல்லப்படும் பெண்ணை பஸ் ஒன்றிற்குள் காப்பாற்ற செல்லும் பாலுக்கும் டோனி ஜாவுக்கும், நடக்கும் சண்டை ரசிகர்களை சீட்டின்நுனிக்கு அழைத்து வருகின்றது.. பாதி அந்தரத்தில் தொங்கும் பவுல் அந்த பேருந்தில் இருந்து தப்பிக்கும் காட்சி காதில் அப்பட்டமாக பூச்சுற்றும் காட்சி என்றாலும் ரசிக்க வைக்கின்றது….
அபுதாபியில் எடுக்கப்பட்ட காட்சிகளில் கட்டிடத்துக்கு கட்டிடம் தாவும் காரில் நம் மனமும் தாவுகின்றது…
சாப்ட்வேர் கண்டு பிடிக்கும் பெண்ணாக நித்தாலி இம்னுவேல் இந்திய சாயலில் இருக்கின்றார்… அபுதாபி கடற்கரையில் சிறு மார்பு அதிர அவர் நடந்து வரும் போது கண்கள்அவர் உடல் எங்கும் டிராவல் ஆவதை தடுக்க முடியவில்லை…
எக்ஸ்கியூட்டிவ் டிசிஷன் ஹீரோ கர்ட் ரஷல் ரொம்ப நாளைக்கு பிறகு இப்போதுதான் பார்க்க முடிகின்றது…
========
படத்தின் டிரைலர்.
=====
படக்குழுவினர் விபரம்.
Directed by James Wan
Produced by
Neal H. Moritz
Vin Diesel
Michael Fottrell
Screenplay by Chris Morgan
Based on Characters
by Gary Scott Thompson
Starring
Vin Diesel
Paul Walker
Dwayne Johnson
Michelle Rodriguez
Jordana Brewster
Tyrese Gibson
Chris Bridges
Kurt Russell
Jason Statham
Music by Brian Tyler
Cinematography
Stephen F. Windon
Marc Spicer
Edited by
Christian Wagner
Leigh Folsim Boyd
Dylan Highsmith
Kirk M. Morri
Production
company
Original Film
One Race Films
Relativity Media
Media Rights Capital
Distributed by Universal Pictures
Release dates
March 16, 2015 (SXSW)
April 3, 2015 (United States)[1]
Running time
137 minutes[2]
Country United States
Language English
Budget $250 million[3]
Box office $406.3 million[4]
=========
பைனல்கிக்.
படத்தின் முதலில் பவுல் வால்கருக்கு இந்த படம் காணிக்கை… சமர்பணம் என்று எல்லாம் ஐல்லி அடிக்காமல் அவன் எங்களோடு இருக்கின்றான் என்று படம் நெடுக வரசெய்துஇருக்கின்றார்கள்..நிறைய இடங்களில் கம்யூட்டர் கிராபிக்ஸ் என்பதால் எந்த சீரியஸ்நெஸ்சும்இல்லாமல் அசால்டாக தலைகாட்டி இருக்கின்றார்..
அவருடைய தம்பி மற்றும் அவர் சாயலில் இருப்பவர்களை வைத்து மேக்கப் செய்து இருக்கின்றார்கள்… படம் முடியும் போது முதல் பாகத்தில் இருந்து பவுல் நடித்த காட்சிகளை போட்டு தியேட்டரே அமைதியாக இருக்கும் வேலையில் For Paul என்று திரையில் எழுத்துக்கள் ஒளிரும் போது நம் கண்களில் நீர் திவலைகள் …..
====
லாஜிக் பார்க்காமல் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளை ரசிக்கின்றவர்கள்… அவசியம்இந்த திரைப்படத்தை கண்டு களிக்கலாம்… முக்கியமாக பவுலுக்காக.,…
======
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஏழு.
=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(ஜாக்கி சினிமாஸ்)
===
வீடியோ விமர்சனம்.