அவன் ஏழ்மை குடியில் பிறந்தவன்…
சமையல்காரர் மகன்
உழைப்பால் உயர்ந்தவன்…
சினிமாவில் சின்ன பாத்திரங்கள் ஏற்று பத்தோடு பதினொன்றாக திரையில் தலைகாட்டியவன்…
தொடர்ந்து நம்பிக்கையோடு பணியாற்றி… நாயகனாக உயர்ந்தவன்…
ஹீரோவாக இருந்தாலும் உதை வாங்குவார்கள் என்று தன் திரைப்படங்களில் காட்சிபடுத்தியவன்.
நடிகர், திரைக்கதையாசியரியர், இயக்குனர் தயாரிப்பாளர், சண்டைபயற்சி வல்லுனர், என்று பன்முக திறமைகொண்டவன்.
சீரியசான ஆக்ஷன் படத்தில் கூட ஜாக்கியின் காமெடி சென்ஸ் உலகபிரசித்தம்…
ஒரு படத்தை தவிற வேறு எந்த படத்திலும் புகைபிடிக்கும் காட்சியில் ஜாக்கி நடித்ததில்லை…
குழந்தைகளுக்கும் பிடித்த நடிகன்… அதனாலே ஜாக்கி கார்ட்டுன் கேரக்டராக வலம் வந்தார்.
ஜாக்கியின் எந்த படப்பிடிப்புலும் புக் படித்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஷாட்டுக்கு மட்டும் தலைகாட்டும் நம்மூர் ஹீரோ போல அவர் இல்லவே இல்லை… சட்டென டிராலி தள்ளிக்கொண்டு போகையில் ஊழியர்கள் தினறினால் கூட… அவரும் சேர்ந்து தள்ளும் அந்த டவுன்ட் டூ எர்த் குணம் உலகில் வேறு எந்த நடிகனிடத்திலும் கண்டதில்லை…
60வயது என்று சொன்னாலும் தன் சுறு சுறுப்பினால் அந்த வயதுக்கே ஆச்சர்யத்தை கொடுத்தவன்…
ஹாங்காங் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து ஆசிய சூப்பர் ஸ்டாராக மாறி… ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக வெற்றிக்கொடி நாட்டியவன்…
ஜாக்கியின் உழைப்பின் மீது இருந்த காதலும், அந்த நம்பிக்கையும், என் பெயரையே ஜாக்கிசேகர் என்று வைத்துக்கொள்ள துண்டியது….
உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இன்றுபிறந்தநாள்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக்கிசான் ஜி.
happy birthday jackiechan