மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் நந்தினி ஜே.எஸ் உருவாக்கி, சுக்தேவ் லஹிரி தயாரித்த தமிழ் சீரிஸில் நவீன் சந்திரா நாயகனாகவும், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ரிஷி, மார்ச் 29 முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யயப்படவுள்ளது.
இணையத்தில் வழியாக உள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது
டிரையிலர் இணைப்பு: https://youtu.be/4CKU89MI0_0?si=Z1XVP-v1vDefBNXO
இத் தொடர், பசுமை மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தமிழ்நாட்டின் ஒரு அழகிய கிராமத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. இன்ஸ்பெக்டர் ரிஷி மற்றும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், (அய்யனார் மற்றும் சித்ரா,) காட்டின் ரகசியங்களை வெளிக்கொணர போராடும் அவர்களுடைய போராட்டத்தை சொல்கிறது இந்த தொடர்.
அமேசான் பிரைம் தளத்தில் முழுமையாக தொடரை கண்டு ரசிக்கலாம்