இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘ சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார்.

‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரையுலக‌ பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில்

நடிகர் சரத்குமார் பேசியதாவது…
இந்த விழாவில் நான் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் என் அன்பு சகோதரர் சேரன் , அவர் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த முறையை உடைக்கின்ற படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கப்போகிறது. இப்படம் வெற்றி திரைப்படமாக அமையும் என வாழ்த்துகிறேன்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது…
நிறைய திரைப்படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்தது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். இந்தப் படத்தில் வரும் பாடல் மற்றும் பிண்ணனி இசை ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கும். நல்ல கதை என்பது வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும், கண்டிப்பாக இத்திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும். இயக்குந‌ர் இசக்கி கார்வண்ண‌ன் அவர்களுக்கு நன்றி.

இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் பேசியதாவது…
இந்த படத்தின் முன்னோட்டம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘தமிழ்க்குடிமகன்’ ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும், இதில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய‌ வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் பெரிதாக பேசப்படும்.

இயக்குந‌ர் மற்றும்  நாயகன் சேரன் பேசியதாவது…
அனைவரும் திரையரங்குகளில் வந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும். புத்திசாலித்தனமான திரைப்படம் இது. சாதிகளை ஒழிக்க வேண்டும் போன்ற‌ நிறைய நல்ல விஷயங்களை இத்திரைப்படத்தில் சொல்லி இருக்கிறோம்.

இந்த படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.