அரன்மணை படம் போல தொடர்ந்து பல பாகங்களாக வெளியாகும் தலைநகரம்! சுந்தர் சி இன் அறிவிப்பு!!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த காமெடி கலந்த ஆக்சன் படம் தான் தலைநகரம் இந்தப் படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில் ..

தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது..
எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது, நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆனால் முதலில் நம் நட்பு கெட்டுவிடும் என மறுத்தார். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து ஒப்புக்கொண்டார். யாரை கதாநாயகனாக்கலாம் என்று கேட்ட போது சுந்தர் சி அண்ணாவைச் சொன்னார். உடனே நம் படம் கண்டிப்பாக ஹிட்டாகுமென சொன்னேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படத்தை உங்கள் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளோம். தொடர்ந்து நாங்கள் இணைந்து நல்ல படைப்புகள் தருவோம், எங்களை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

நடிகர் சுந்தர் சி பேசியதாவது…
இங்கு வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். ஆஸ்கர் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும், தலைநகரம் டைட்டில் அவரிடம் தான் இருந்தது, அவர் பெருந்தன்மையாகத் தந்தார். தலைநகரம் 2 ஆம் பாகத்தை நாம் எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன் ஆனால் துரை சார் கேட்ட போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனே ஓகே சொல்லி விட்டேன். அவரின் இருட்டு படம் மிக அருமையான திரைக்கதை. அந்தப்படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இருட்டு வெற்றி தான் தலைநகரம் படத்திற்கு ஓகே சொல்ல வைத்தது. இன்னும் நான் படமே பார்க்கவில்லை அவர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர்.அவருக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்த தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு என் நன்றிகள். இந்தப்படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் துரை சார் செதுக்கியிருக்கிறார். அரண்மனை போல் இந்தப்படமும் எனக்குத் தொடர் படங்களாக அமையும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் V Z துரை பேசியதாவது…
நான் யாரிடமும் துணை இயக்குநராகப் பணி புரியவில்லை , என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் சக்கரவர்த்தி சார் அவருக்கு நன்றி, அவர் பலருக்கு அறிமுகம் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் பெரிய தூண் என் தம்பி பிரபாகர் தயாரிப்பாளர், என் மீது நம்பிக்கை வைத்த ராம்ஜி சாருக்கு நன்றி, ஒளிப்பதிவாளர் மற்றும் இசை அமைப்பாளர் ஆகியோருக்கு எனது மிகப்பெரிய நன்றிகள் , சுந்தர் சி சார் தான் எனக்கு ஆசிரியர், பல விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன், அவருடன் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய படத்தில் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார். இயக்குநர் சசி சாருக்கு நன்றி. நாங்கள் நீண்ட காலமாகப் பார்த்துக் கொள்ளவில்லை எனினும் எங்கள் பந்தம் மாறவே இல்லை, இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படம் நன்றாக உள்ளது அனைத்து பத்திரிக்கையாளர்களும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.