விஜய் சேதுபதியை தாக்கிய நபர் கொடுத்த வழக்கு!

🎬சென்னையை சேர்ந்த ஆக்டர் மகா காந்தி சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செஞ்சிருக்கும் மனுவில், கடந்த மாசம் 2ஆம் தேதி, மெடிக்கல் செக் அப் ஒன்றிற்காக மைசூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்திச்சதாவும், திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தபோது, அதனை ஏற்க மறுத்து, விஜய் சேதுபதி பொதுவெளியில், தம்மை இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அப்பாலே ஏர்போர்ட்டை, விட்டு வெளியேறிய தம் மீது, விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன், காதில் அறைந்ததாகவும் இதனால் தனது செவித்திறன் முழுமையா பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உண்மை இவ்வாறிருக்க, கடந்த மாதம் 3ஆம் தேதி, விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக அவரது தரப்பில், அவதூறு பரப்பு வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்ட சென்ற தம்மை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பான செய்தியாக மாற்றியதற்காக, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இந்த மனு இந்த வாரம் விசாரணைக்கு வரும். என தெரிகிறது.

இதுக்கிடையே இந்த மகாகாந்தி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளதாக நடிகர் விஜய்சேதுபதியின் வழக்கறிஞர் நர்மதா சம்பத் தெரிவிச்சிருக்கார். பெங்களூரு ஏர் போர்ட் சம்பவத்தில், எந்த புகாரும் வேண்டாம் என அங்குள்ள போலீஸ் ஸ்டேசனில் எழுதி கொடுத்து புட்டு, தற்போது விஜய்சேதுபதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவிச்சிருக்கார்.