எல்லா துறைகளிலும் உலக அளவில் சாதனை படைத்தவர்களை கொண்டுள்ள நாடுதான் நமது இந்தியா. இது போன்ற நமது நாட்டின் ஒரு பொக்கிஷம் தான் பிரபுதேவா. அவரது நடனத்தினாலும் சாதனைகளிலாலும் கடந்த இருபதும் மேற்பட்ட ஆண்டுகளாக நமது நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் ஊந்துதலாகவும் அவர் இருந்து வருகிறார்.
இந்தியாவின் குடியரசு தினத்தை போற்றும் விதமாக ‘Face Of India’ என்ற மியூசிக் வீடியோவை வேல்ஸ் யூனிவெர்சிட்டியின் தலைவரும் ,பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான Dr.K.கணேசனுடன் இணைந்து பிரபுதேவா தயாரித்துள்ளார்.
நாட்டுப்பற்றை மையமாக வைத்து இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களும் மொழிகளிலும் இருக்கும் சிறப்பம்சங் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் போஸ்டர் இன்று வெளியிடப்படவுள்ளது. இப்பாடலின் டீசரை இன்று மாலை 8 மணிக்கு RJ பாலாஜி வெளியிடவுள்ளார்.
வருண், விகாஸ், வினோத் மற்றும் அஞ்சனா ஜெயப்ரகாஷ் ஆகியோர் இந்த மியூசிக் வீடியோவில் நடித்துள்ளனர். A J இயக்கத்தில், தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில், விஷ்ணு பிரசாத்தின் படத்தொகுப்பில் , ஜெகதீசனின் கலை இயக்கத்தில் ‘Face Of India’ உருவாகியுள்ளது.