ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக ‘நானும் ஒரு விவசாயி’ என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு

ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நானும் ஒரு விவசாயி என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு , திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது .

இதில் சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்ற ஜேபிஆர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒருவருக்கு தலா இரண்டு நாற்றுகள் வீதம் நடப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமிய பாடகி சின்ன பொண்ணு கலந்து கொண்டு நாட்டுபுற பாடல்களை பாடினார்.
மேலும் நண்பர்கள் குழுவினர் பறை இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் குழுவினர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர் .

இந்த நிகழ்வு சீனா நடத்திய கின்னஸ் சாதனையானா 2017 பேரை கொண்டு நடத்திய சாதனையை முறியடிக்கும் விதமாக 2683 பேரை கொண்டு நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வை ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்றும் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனம் சேர்ந்து சிறப்பாக நடத்தியது.

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் கின்னஸ் சாதனை பெறவேண்டும் என்பதுடன் மட்டும் இல்லாமல் விவசாயத்தின் பெருமையை பறை சாற்றும் விதமாக அமைக்க பெற்றது.

Naanum Oru Vivasaayi Guiness Event Stills (4)Naanum Oru Vivasaayi Guiness Event Stills (3)Naanum Oru Vivasaayi Guiness Event Stills (2)Naanum Oru Vivasaayi Guiness Event Stills (1)Naanum Oru Vivasaayi Guiness Event Stills (8)Naanum Oru Vivasaayi Guiness Event Stills (7)Naanum Oru Vivasaayi Guiness Event Stills (6)Naanum Oru Vivasaayi Guiness Event Stills (5)Naanum Oru Vivasaayi Guiness Event Stills (12) Naanum Oru Vivasaayi Guiness Event Stills (11) Naanum Oru Vivasaayi Guiness Event Stills (9) Naanum Oru Vivasaayi Guiness Event Stills (10)