‘குங்ஃபூ பாண்டா- 3’ ஏப்ரல் 1-ம் தேதி

501

உலகமெங்கும் சுட்டிக் குழந்தைகள் முதல் அருமையான திரைப்படங்களுக்கான ரசிகர்கள் அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பையும், ஆவலையும் உருவாக்கியிருக்கும், உலகின் மிகப்பிரம்மாண்டமான அனிமேஷன் படமான ‘குங்ஃபூ பாண்டா- 3’ ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது என்பதை மிகவும் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்து கொள்கிறோம்.
’குங்ஃபூ பாண்டா’ வரிசை அனிமேஷன் படத்தின் முந்தையப் பாகம் இந்தியாவில் வசூலில் மிகப்பெரியளவில் சாதனைகளைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ’குங்ஃபூ பாண்டா -2’ படத்தின் வசூல் சாதனையை, அனிமேஷன் படங்களுக்கான இந்திய பாக்ஸ் ஆபிஸில் இதுவரை வேறெந்த அனிமேஷன் படங்களும் முறியடிக்கவில்லை என்பதால் இதன் அடுத்த பாகத்திற்கு வரவேற்பு அதிகரித்து கொண்ட வருகிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக, ‘குங்ஃபூ பாண்டா- 2’ அனிமேஷன் படத்தின் வசூல் சாதனையை வேறெந்த அனிமேஷன் படம் முறியடிக்கவில்லை என்பது ஹைலைட்டான விஷயம்.

’குங்ஃபூ பாண்டா -3’ அனிமேஷன் படம் சில நாடுகளில் வெளியாகி இருக்கிறது. வெளியான சில நாட்களிலேயே 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளிக் குவித்திருக்கிறது. உலகின் பாதி பகுதிகளில் வெளியான நிலையிலேயே இவ்வளவு பிரம்மாண்டமான வசூலைக் குவித்திருக்கிறது. இப்படம் இதுவரை உலகின் அனைத்து பகுதிகளிலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வசூலில் இன்னும் சாதனைகளைப் படைக்கும் என நம்பப்படுகிறது. ஆசியாவில் இப்படம் வசூலில் பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது. குறிப்பாக சீனாவில் இதுவரை வேறேந்த அனிமேஷன் படமும் எட்டியிராத உச்சக்கட்ட வசூலை அள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

‘குங்ஃபூ பாண்டா – 3’ வெளியானதிலிருந்தே உலகெங்கும் அசத்தலான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனையும் இப்படத்திற்கு பிரபல ‘ராட்டன் டொமட்டோஸ்’ ‘குடும்பம் முழுவதுக்குமான முழு பொழுதுபோக்கு அனிமேஷன் படம். இப்படம் அனிமேஷனின் அடுத்தக்கட்டம்’ என தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறது.
இந்தியாவில் வெளியாக இருக்கும் ‘குங்ஃபூ பாண்டா -3’ அனிமேஷன் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. பிரபல ‘புக் மை ஷோ’ இணையதளத்தில் இப்படம் 2,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இந்தாண்டின் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான திரைப்படங்களில் இரண்டாவது பெரிய படம் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது. இவர்களில் 100% ரசிகர்கள் இப்படத்தை பார்த்தே ஆகவேண்டுமென்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

‘குங்ஃபூ பாண்டா –3’ படத்திற்கு மிகப்பிரம்மாண்ட முறையில் விளம்பரம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாதம் முழுவதும் தொலைக்காட்சிகளில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற 5 ப்ராண்ட்கள் இப்படம் குறித்த விளம்பரங்களை மேற்கொள்ளவிருக்கின்றன. இதனால் இவ்வருட கோடைக் காலத்தில் அனைவராலும் பார்க்கக்கூடிய படமாக இப்படம் திகழும்.
அனிமேஷன் படங்களில் புதிய சாதனைகளைப் படைத்து கொண்டிருக்கும் ‘குங்ஃபூ பாண்டா-3’ இந்த கோடைக் காலத்தின் கொண்டாட்டத்திற்கு ஏற்றவகையில் 2டி, 3டி, 4டிஎக்ஸ் மற்றும் ஐமேக்ஸ் 3டி ஆகியவற்றில் வெளியாக இருக்கிறது.
குங்ஃபூ பாண்டா, இது உற்சாகப் பொழுதுபோக்கின் நண்பேன் டா!

Previous articleBus 657 movie review by jackie sekar
Next articleநடப்பின் ஆழம் தான் – தோழா