Bus 657 movie review by jackie sekar

 

 

குற்றம் என்பது தேவையின் பொருட்டு நடைபெறும் இயலாமையின் பொருட்டு நடைபெறும். ஆசையின் பொருட்டு நடைபெறும்… ஆனால் தேவையின்  பொருட்டு நடைபெறும்  குற்றங்கள்தான் இந்த உலகில்  அதிகம்…

அதேவேளையில் அமச்சூர் தனமாக  குற்றத்தை செய்து மாட்டிக்கொள்ளுவார்கள்.. தேவையின் பொருட்டு  கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் புதியவர்கள் எனபதால் குற்றத்தில் ஒரு  தொழில்முறை இருக்காது…இன்னும் சொல்லப்போனால் மாட்டிக்கொண்டு விடுவோம் என்று தெரிந்தே குற்றத்தை செய்வார்கள்..

உங்கள் செல்ல மகளுக்கு கேன்சர்.. இன்றும் கொஞ்சநாளில் உங்களை விட்டு  மறைந்து விடுவாள்.. ஆனால் அவளை  காப்பாற்றலாம்…  அவளின்  மருத்துவ செலவுக்கு  பெரும் பணம்  தேவை… என்ன செய்வீர்கள்..??   ஒன்றும் செய்யமுடியாது.. தெரிந்தவர்களிடம் கைமாத்தாக பணம் வாங்கலாம் என்றால் பெரும் தொகை கை பிசைந்து நின்றாலும்  எதாவது செய்தாக வேண்டும்…

உங்கள் செல்ல மகளை எப்படி அப்படியே விட்டு விட முடியும்  சொல்லுங்கள்…??  இதே பிரச்சனைதான் Jeffrey Dean Morgan as

Luke Vaughn சந்திக்கின்றான்… அவனுடைய செல்ல மகளுக்குதான் பிரச்சனை

சரி அவ்வளவு பணம் எங்குகிடைக்கும்..??? உண்மைதான்.. ஆனால் Luke வேலை  செய்வது தினமும் பணம் புழங்கும் சூதாட்ட விடுதி.….லட்ச லட்சமாக  பணம் புரளும்இடம்….. அந்த பணங்களை எல்லாம் எண்ணி லாக்கரில் வைக்கும் பொறுப்பும் அவனுடையதே… அது மட்டுமல்ல  அவன் என்ன  வேலை செய்கின்றான் என்று கேட்கின்றீர்களா?-

சூதாட்ட விடுதியில்  சீட்டுக்கட்டு கார்டுகளை  விளையாட  போடுபவன். ஆனால் அவனுக்கு பணம் தேவை…

அந்த சூதாட்ட விடுதியின் ஓனர் போப்… ராபர்ட் டி நீரோ  அவருக்கு  பணம்தான் முக்கியம்

 

பெற்ற மகள் பாசம் எல்லாம்  கூட   அப்புறம்தான்…  பண  விஷயத்தில்  அவரை கொஞ்சம் ஏமாற்றினாலும் கொடுரமாக  துப்பாக்கி குண்டுக்கு  மண்டை சிதறி சாகத்தான் வேண்டும். காரணம் போப்பிடம் மன்னிப்பு என்றே பேச்சுக்கே இடமில்லை…

தன் முதலாளியான போப்பிடம் சென்று  தன் மகள் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்கிறான் லூக் .. அவ்வளவு பணம் எல்லாம் தர முடியாது… நான் என்ன  தர்ம சத்திரமா  வச்சி நடத்தறேன் ?? என்று  சொல்லி பணம் கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புகிறான்

ஆனால் பணம் தேவை ஒருவாரத்தில் மகளுக்கு ஆப்பரேஷன் செய்யவில்லை என்றால் இனி செல்லமகளை காண முடியாது..

சரி ஆனது ஆச்சி போனது போச்சி… ஓனர் கல்லா பெட்டியிலேயே  கை வைத்து விட முடிவெடுகிறான்.. லூக்… ஒரு சுப  யோக சுப தினத்தில்   போப்பின்  சூதாட்ட விடுதியில்  கொள்ளை அடிக்க ஒரு டீமாக திட்டம் போடுகின்றான்.. ஆனால் இந்த கொள்ளை செயலில் இருந்து‘தப்பித்தானா-? மகள் மருத்துவமனையில் இருந்து நோயில் இருந்து  மீண்டாளா ? போன்றவற்றை    சென்னை சத்தியம் தியேட்டர் வெள்ளிதிரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

போப்பாக  ராபட் டீ நிரோ பின்னி இருக்கின்றார்… மகள் வேலை செய்யும் ஓட்டலுக்கு  சென்று பேசும் அந்த காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியிலும் பின்னி இருக்கின்றார்.

Jeffrey Dean Morgan  லூக் பாத்திரத்தில் சிறப்பாக செய்து இருக்கின்றார் மகளுடன் அரட்டை அடிப்பதும் அவளுக்கு நிகழப்போகும் ஆப்பரேஷனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும்  அந்த இயலாமையும்  மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார்…

Kate Bosworth போலிசாக  நடித்து இருக்கின்றார் கிளைமாக்சில் பில்  கட்டும் இடம் வந்து ஒரே ஒரு சாக்லேட்டை பிரித்த வாயில் போட்டு நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு போகும் அழகே அழகு..

ஸ்பீட் படம் போல இருக்குமோ என்று நினைத்தால்  அப்படி  எல்லாம் இல்லை என்று இயக்கி இருக்கின்றார் ஸ்காட் மேன்…

 

திரில்லர் ரசிகர்கள்  டைம்பாசுக்கு சென்று பார்த்து விட்டு வரவேண்டிய திரைப்படம், இது.. அது மட்டுமல்ல..

இந்த படம் ஹேயிஸ்ட் என்ற பெயரில் வெளிவந்தாலும் இந்தியாவில் பஸ் நம்பர் 657 என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

 

==========