Rajinikanth Upcoming Movie Kabali Title controversy

1284

CMnknprUwAAl6UC

 

ரஜினியின் புதுப்படம் கபாலி டைட்டில் பிரச்சனையை சந்தித்து வருகிறது..

பெங்களூருவை சேர்ந்த சிவக்குமார்… கபாலி என்ற படத்தை பணம் கிடைக்கும் போது எடுத்து வருகிறார்.. கடந்த வருடமே பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்தி இருக்கிறார்…
டைட்டில் எனக்கே சொந்தம் என்கிறார்… சிவக்குமார்.. அவர் கபாலி தலைப்பை ஆறு மாதமாக புதுப்பிக்க தவறிவிட்ட காரணத்தால் அந்த டைட்டிலை ரஞ்சித் குழுவினருக்கு கொடுத்து விட்டோம் என்கிறார்கள்..
ஆனால் சிவக்குமார் அதை மறுக்கிறார்.. நான் புதுப்பிக்க செல்லும் போது எல்லாம் வேலை இருப்பதாக என்னை அலைகழித்தனர் என்கிறார்.

இன்னும் நாலு நாளில் படப்பிடிப்பு முடிந்தால் என் படத்தை போஸ்ட் புரொடெக்ஷன் பணியை ஆரம்பித்துவிடுவேன் என்கிறார்… சிவக்குமார் விட்டுக்கொடுப்பாரா இல்லையா… கபாலி என்று தான் பார்ம் ஆகி விட்டேன்.. அதனால் தலைப்பை விட்டுக்கொடுக்க முடியாது என்று சொல்லலாம்…

அப்படி ஒத்துக்கொள்ளவில்லை என்றால்…??

கபாலி ஒன்னு கபாலி ரெண்டு என்று பெயர் வைக்கும் அளவுக்கு தமிழ் திரைப்பட உலகம் இன்னும் வளரவில்லை.

என்ன செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை…

என்னை பொருத்தவரை கபாலி என்ற டைட்டிலில் பிரச்சனை வரும் பட்சத்தில் காளி என்று அறிவிப்பு வந்த போது வைத்த பெயரையே வைத்து விடலாம்… காளிக்கும் கபாலிக்கும் பெரிய வித்தியாசமில்லை.
தமிழ் சினிமாவுல தலைப்பு பஞ்சம் பெரும் பஞ்சமா இருக்கு…. பேசாம பத்து தலைப்பை பதிவு பண்ணிட்டு சினிமா தலைப்பு விற்கப்படும்ன்னு போர்டு போடலாம் போல இருக்கு….

சீக்கிரம் டைட்டில் முடிவு பண்ணிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பர வழிய பாருங்கப்பு… வி ஆர் வெயிட்டிங் பார் விசில்.
#kabali
#kaali
#rajinikanth
#ranjith
#கபாலி #காளி #ரஜினிகாந்த் #ரஞ்சித்

 

https://youtu.be/LvEkhjj9dW8

Previous articleWHO I AM I -2014 (GERMAN) MOVIE REVIEW | நான் யாரு ? எனக்கே தெரியலையே…
Next articleActress Shruthi Reddy New Photoshoot Images