kingsman The Secret Service -2015- Movie Review| உருவாகும் உளவாளி|உலக சினிமா|இங்கிலாந்து

kingsman-the-secret-service-poster

சுத்தி வளைச்சி எல்லாம் கதை சொல்ல வரலை… ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துஇருக்கிங்க இல்லை..???
ஆமாம்..
அது போலான ஒரு உளவாளி திரைப்படம் தான் கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்விஸ் திரைப்படம்.
கிங்ஸ்மேன் என்பது ஒரு டைலர் கடை… சிரிக்காதிங்க.. மிஸ்டர்.,… வெளியிலேதான் டைலர் கடை அதன் உள்ளே இல்லாத ஆயுதங்களே இல்லை….
கிங்ஸ்மேன் சீக்ரேட் சர்விஸ் என்பது தனி நபர்கள் உளவாளி இல்லை… எந்த பிரச்சனையா இருந்தாலும் பாண்டு மட்டுமே மார்மேலயும் தோள் மேலேயும் போட்டுக்கிட்டு போய் பிரச்சனையை சந்திக்கறது போல இல்லாம…
கிங்ஸ்மேன் என்பது ஒரு குழு…
கிங்ஸ்மேன் குழுவில் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை… அந்த டெஸ்ட் எல்லாம் ரொம்ப கடுமையா இருக்கும்… எசகு பிசகா கொஞ்சம் அசந்தா கூட… மார்கேயாதான்…
மந்திரி பையன் நான்… அப்பாக்கிட்ட லட்டர் வாங்கிட்டு வரேன் என்று யாரும் இந்த குழுவிடம் வந்து நிற்க முடியாது… மவுன்ட்ரோடுல ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்சி இருக்குமே…. அது போல போர்டு போட்டு விளம்பரம் செஞ்சி இருந்தா…—??? மந்திரி பையன் அவுங்க அப்பன் கிட்ட இருந்து லட்டர் வாங்கிட்டு வந்து இருப்பான்…
எங்க இந்த குழு இயங்குது?? என்பது எல்லாமே ரகசியம்.. அதே போல கிங்ஸ்மேன் குழுவில் பணிபுரிவது பெருமை மிக்க செயல்….

ஒரு ஆப்பரேஷன்ல கிங்ஸ்மேன் குழுவில் ஒரு வீரர் எதிர்பாராத விதமா தன் குழு உறுப்பினர்களை காப்பாற்ற தன் உயிரை கொடுக்கின்றான்.. அவன் மகன் எக்சி சின்ன பாலகன்… திறமையானவன்…. அவன் வளர்ந்து பெரியவன் ஆனாதும் அவன் சல்லித்தனமான பிரச்சனைகளில் ஈடுபட்டு போலிசிடம் சிக்கிகொள்கின்றான்..
அவன் சிறுவனாக இருந்த போது ஒரு கிங்ஸ்மேன் குழு சார்பாக அவனிடம் ஒரு மெடல் கொடுக்கப்படுகின்றது…ஆபத்து காலத்தில் இதனை உபயோகப்படுத்த சொல்லி..
அவன் உபயோககிக்க அவன் அப்பாவினால் காப்பாற்ற பட்ட நண்பர் அவனை கிங்ஸ்மென் குழுவில் சேர்கின்றார்… அவன் எப்படி தாக்கு பிடித்தான்… அவனுக்கு அந்த திறமை இருந்ததா?? நாட்டுக்கு சேவை செய்தானா? என்ன மாதிரியான ஆபத்துக்களை சந்தித்தான் என்பதுதான் கிங்ஸ்மேன் திரைப்படத்தின் கதை.

87316
=====
படத்தின் சுவாரஸ்யங்கள்..
பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள்.
அதிரடி சண்டைகாட்சிகள்………
கிங்ஸ்மேன் குழுவில் தேர்ந்து எடுக்க நடக்கும் பயிற்சிகள்…
அதை விட படத்தின் தொடக்கமான 15 நிமிடங்கள் அசத்தல்.. அதுவும் 17 வருடங்கள் கழிந்து அர்ஜென்டினாவில் பனி வீட்டில் நடக்கும் அந்த சண்டை காட்சியும்… சாமுவேல் ஜாக்சன் என்ட்ரியும் .. அசத்தல் ரகம்..

ஹெரி கேரக்டர்ல Colin Firth நடிச்சிஇருக்கார்… மனுஷன் பின்னி இருக்கார்… சான்சே இல்லை…. அதுவும் பார்ல எக்சியோடு இருக்கும் போது நடக்கும் அந்த குடை பைட் சான்சே இல்லை.. அசத்தி இருக்காங்க…
எக்சிக்கு ஆசை இருக்கு ஆனா அவன் கிங்ஸ்மேன் குழுவில் சேரும் உத்வேகத்தை கொடுத்த திரைக்கதை காட்சிகள் அசத்தல்.. அதுவும்.,.. அவனை வீட்டுல அடிக்கும் போது அங்க இருந்து பில்டிங்ல தாவி தாவி கீழே குதிக்கும் சிங்கிள் ஷாட்.. அருமை.

படத்தின் கிளைமாக்ஸ் அசத்தல்…

பின்னனி இசை ஜேம்ஸ்பாண்ட் படத்தின் தீம் மியூசிக் சாயல் நிறைய இடங்களில் தென் படுகின்றது…
matthew-vaughn-2008-empire-awards-01
இது ஒரு காமிக் கதை… படத்தை இயக்கி இருப்பது Matthew Vaughn…எங்க அம்மா தினமும் கதை சொல்லும் போது கிங்ஸ்மென் என்னவெல்லாம் செய்வான் என்று என்னிடத்தில் சிறு வயதில் போதித்தன் விளைவே இந்த படம் என்று படம் முடியும் போது.இயக்குனர் . Matthew Vaughn தன் அம்மா கேத்திக்கு நன்றி சொல்கின்றார்….
=======
படத்தின் டிரைலர்

===
படக்குழுவினர் விபரம்.

Directed by Matthew Vaughn
Produced by
Adam Bohling
David Reid
Matthew Vaughn
Screenplay by
Jane Goldman
Matthew Vaughn
Based on The Secret Service
by Mark Millar
Dave Gibbons
Starring
Colin Firth
Samuel L. Jackson
Mark Strong
Taron Egerton
Michael Caine
Music by
Henry Jackman
Matthew Margeson
Cinematography George Richmond
Edited by
Eddie Hamilton
Jon Harris
Production
company
Marv Films
Cloudy Productions
Distributed by 20th Century Fox
Release dates
13 December 2014 (Butt-Numb-A-Thon)
29 January 2015 (United Kingdom)
13 February 2015 (United States)
Running time
129 minutes
Country
United Kingdom
United States
Language English
Budget $81 million
Box office $403.8 million
======
பைனல் கிக்.
அவசிம் பார்த்தே தீர வேண்டிய ஆக்ஷன் திரைப்படம் கிங்ஸ்மேன் சர்விஸ்… ஒரு சாதாரண தொடை நடுங்கி உளவாளியாக எவ்விதம் உருவாகின்றான் என்பதை இந்த படத்தின் ஒன்லை… பட் அருமையாக திரைக்கதை… சினிமா விரும்பிங்கள் மிஸ் செய்யாமல் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் இது