களத்தூர் கிராமம் திரை விமர்சனம்

நல்ல படம் வந்தால் கொண்டாடுவோம் .. இப்ப எல்லாம் நல்ல படம் எங்க வருது என்று அங்கலாய்ப்பவர்களுக்கு … எனக்கு தெரிந்து எடுத்துக்கொண்ட விஷயத்தை மிக நேர்த்தியாக.. லோ பட்ஜெட்டில்… உண்மை சம்பவங்களை உள் வாங்கி கிராமத்து லைவ்விசெஸ்வுடன் வந்து இருக்கும் திரைப்படம் களத்தூர் கிராமம்.

களத்தூர் கிராமம் திரைப்படத்தின் கதை என்ன?

களத்தூர் கிராமத்துக்குள்ள இதுவரைக்கு போலிஸ் நுழைஞ்சதில்லை…காரணம் அது திருட்டு பசங்க ஊர்… ஆனா களத்தூர் காரங்க என்ன சொல்றாங்கன்னா.. நாங்க ஒன்னும் யோக்கியம் இல்லை..குழந்தை குட்டிங்களை பசியாத்த கொஞ்சம் அங்க இங்க கை வச்சது உண்மைதான் ஆனா போலிஸ் எங்க மேல பொய் மூட்டையை அள்ளி விடும் அளவுக்கு நாங்க மோசம் இல்லை என்று சொல்கின்றார்கள்.. யார் மீது தவறு இருக்கின்றது என்று தியேட்டரில் போய் பார்த்துக்கொள்ளுங்கள்..

படத்தில் நாயகன் கிஷோரில் இருந்து நாயகி வரை எல்லோரும் இயல்பாய் நடித்து இருக்கின்றார்கள்.. ஒரே ஒருவரை தவிர.. நாயகியின் தாத்தாதான் அவர் கிஷோரிடம் நாயகி ஆபத்தில் இருப்பதை சொல்ல நடிப்பில் சொதப்பி பதறுகின்றார்.. மற்றபடி அந்த படத்தில் நடித்த யாருமே சோடையான நடிப்பை வெளிப்படுத்தவில்லை

இன்டர்வெல் பிளாக்கில் இளையாராஜாவும் கிஷோரும் பின்னி இருக்கின்றார்கள்.. அந்த பம்பை உடுக்கையும் வேஷத்தோடு கிஷோர் கொடுக்கும் ரியாக்ஷனும் அருமை.

அஜய்ரத்னத்தில் நேர்மையான கமிஷன் விசாரானை அதனை சார்ந்த காட்சிகள் அருமை
நாயகி யாக்னா ஷெட்டி செம…

எல்லாத்தை விட அந்த கிராமத்து வீடுகள் எல்லாம் செம லைவ்லி நெஸ் காரணம் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ்

இரண்டாம் பாதியில் கொஞ்ம் பிளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் .. இருந்தாலும் முதல் படத்திலேயே நெருடல் இன்றி இயக்குனர் சரண் அத்வைதன் கவனிக்க வைத்து இருக்கின்றார்.. வாழ்த்துகள்.