Jackiecinemas

இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கவுள்ள ”காயம்குளம் கொச்சுண்ணி”

News Tamil Cinema
உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது  நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும்  அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற  காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. ’36 வயதினிலே’ படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ”காயம்குளம் கொச்சுண்ணி” என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது .
” மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடி அமலா பால். பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் இப்படம் தயாராகவுள்ளது . கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி மக்களாலும் நிச்சயம் ரசிக்கப்படும் ” என தயாரிப்பு தரப்பு கூறுகின்றனர் . ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ்’ சார்பில் திரு. கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் ‘பழசிராஜா’ என்ற மிக பிரம்மாண்ட படத்தையும் , கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தின் கதையில் எழுத்தாளர்கள் பாபி மற்றும் சஞ்சய் பணியாற்றியுள்ளனர். இந்த மெகா பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல்  வாரம் முதல் துவங்கவுள்ளது. இப்படம் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

Related posts

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்

admin

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்

admin

ஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்

admin

ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”

admin

Leave a Comment