மாவீரனாக விஜய் சேதுபதியின் குரல் ! இப்படி ஒரு ட்விஸ்ட்டா !

மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புளுடன் வருகின்ற ஜூலை 14ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதில் சிவகார்த்திகேயன் வானத்தை பார்த்தால் வேறொரு ஆளாக மாறிவிடுவார். ஒரு குரலை கேட்டதும் இப்படி மாறி விடுவார்.

 

மாவீரன் படத்தில் அந்த குரலுக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்க ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் அணுகியுள்ளனர்.ஆனால் அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனுஷ் தான் மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இது அனைத்து தரப்பு ரசிகர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.