Darkest Hour 2017 movie Review

#Darkesthour 2017 movie Review

டார்க்கஸ்ட் ஹவர்.

கிரிஸ்டோபர் நோலன் டங்க்ரிக் திரைப்படம் எடுத்தார்… டங்கரிக் கடற்கரையில் மூன்று லட்சம் இங்கிலாந்து வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தை மிக நெருக்கமாக பதிவு செய்தார்…

அதே வேளையில் மூன்று லட்சம் இங்கிலாந்து வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தை சந்தித்த போது இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் முக்கியமாக இங்கிலாந்து பிரமர் வின்சன் சர்ச்சில் என்ன முடிவுகளை எடுத்தார்… தன் பிள்ளைகள் டங்கிரிக் கடற்கரையில் இருக்கும் போது அவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன – நாடு சரணகதி என்ற ஒற்றை வார்த்தையில் சிக்கி தவித்த போது அவர் எடுத்த நிலைப்பாடு என்ன என்பதுதான் டார்க்கஸ்ட் ஹவர் திரைப்படத்தின் கதை….

வின்சன்ட் சர்ச்சில் ஆக கேரி ஓல்ட் மேன்… ஏர் போர்ஸ் ஒன் திரைப்படத்தில் ஹரிசன் போர்ட்டு கெட் அவுட் மை பிளேன் என்று தள்ளி விடுவாரே.. அந்த படத்தில் தீவிரவாதி வேஷம் போட்டவர்தான்… இந்த படத்தில் வின்சன் சர்ச்சிலாக அசத்தி இருக்கின்றார்…

இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் சர்ச்சிலை ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.. மூன்று லட்சம் வீரர்கள் உயிர் ஊசாலடிக்கொண்டு இருக்கின்றது… எதிர்கட்சிகள் சரணகதி அல்லது பேச்சுவார்த்தை செய்யுங்கள் என்று நெருக்கி தள்ள தூக்க மில்ல இரவுகள்… உதவி கேட்ட நாடுகள் எல்லாம் கை விரித்து விட்டன… எல்லாம் யுத்த தளவாடங்களும் சிதைந்து விட்டன…. கண்களில் கண்ணீரோடு செய்வதரியா தவித்த தலைவன் தன் நாடு மானத்தையும் தன் வீரர்களின் உயிரையும் காத்த அந்த நிமிடங்களை பற்றி திரைப்படம் இது..

முழுக்க முழுக்க ஸ்பார்க் லைட் படம் போல பாலியல் காட்சிகளை காட்டாமலே பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்த்தியது போல இந்த திரைப்படம் போர் காட்சிகளை அதிகம் காட்டாமல் அந்த தீவிரத்தை கேரி ஓல்ட் மேன் மூலம் வெளிப்படுத்திய காட்சிகள் அருமை-.
எல்லாவற்றையும் விட டியூப் ரயிலில் பயணிக்கும் பிரதமர் அங்கே விரியும் உணர்ச்சி பூர்வமான காட்சிகள் சான்சே இல்லை..

சர்ச்சிலுக்கு ஒரு ஓப்பனிங் சீன் வைத்து இருப்பார்கள் பாருங்கள்.. தலையில் பூசனிக்காய் உடைத்து நான் ஆட்டோக்காரன் பாடும் என்ட்ரியை விட அதிகம் ரசிக்க வைத்த சர்ச்சிலின் என்ட்ரி காட்சி என்பேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

 

https://www.youtube.com/watch?v=lCSH1GYUvnQ

Previous articleEnter Nowhere (2011) Movie Review
Next article‘பூமராங்’ சமுதாய கருத்துள்ள ஆக்ஷன் படம்