Central Intelligence 2016 movie review
பாஸ்ட் பியூரியஸ் படத்தில் கலக்கிய ராக் என்கின்ற Dwayne Johnson நடிப்பில் இந்த வாரம் வெளியான திரைப்படம் சென்ட்ரல் இன்டிலஜென்ஸ்.. ஆக்ஷன் காமெடி ஜானரில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் உலக அளவில் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வருகின்றது.. அதற்கு காரணம் படம் நெடுக இழையோடும் நகைச்சுவைதான்.
===
சரி Central Intelligence திரைப் படத்தின் கதை என்ன?
1996 ஆம் ஆண்டு ஹை ஸ்கூலில் பள்ளி நண்பர்கள்தான் Dwayne Johnson மற்றும் Kevin Hart கெவின் திறமையானவர்… ஆனால் Dwayne Johnson உடல் பருமன் கொண்டவர்… அவரை அநியாயத்துக்கு கலாய்க்கின்றனர். அசிங்க படுத்துகின்றனர்… அவன் இவன் ஜமீன்தார் போல ஓட்டு துணி இல்லாமல் அசிங்க படுத்தி கூனிக்குறுகி நிற்க அந்த நேரத்தில் அவரது மானத்தை தனது ஜாக்கெட் கொடுத்து காப்பாற்றுகின்றார் Kevin Hart … நாட்கள் நகர்கின்றன… 1996 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் மீண்டும் சந்திக்கலாம் என்று பேஸ்புக்கில் ரியூனியன் அமைக்க நாள் குறிக்க உடல் பருமனால் அசிக்கபடுத்தப்பட பாப் என்கின்ற Dwayne Johnson தானும் கலந்துக்கொள்ள போவதாக தெரிவிக்கின்றார்… அதே உடல் பருமனோடு வருவார் என்று எதிர்பார்த்தால் கட்டுமஸ்தான ஜிம் பாடியோடு வருகின்றார்… சரி வந்து தன்னை அவமானப்படுத்தியவர்களை ஒரு கை பார்க்க போகின்றார் என்றால்… தனது பால்ய நண்பன் Kevin Hart இடம் தான் சிஐஏ உளவாளி என்று சொல்ல… அதன் பின் சாதாரண அக்கவுண்டன்ட் கேவின் ஜான்சனோடு சந்திக்கும் அதிரடி திருப்பங்கள்தான் பரபரப்பான் ஆக்ஷன் கதை….
=======
பாப்பாக ஜான்சன் இயல்பாய் நடித்து இருக்கின்றார்… முதல் பார் சண்டையிலேயே கவர்ந்து விடுகின்றார்…படத்தின் காமெடி போர்ஷனை கெவின் பார்த்துக்கொள்கின்றார்… அதற்கு அவரது பாடி லாங்வேஜ் உறுதுணையாக உள்ளது.
ஒரு பக்கம் சிஜஏன்னு சொல்றானுங்க… மற்றோரு பக்கம் அதிரடி தாக்குதல்.. எதை நம்பறது?- எதை நம்பக்கூடாது என்று தவிக்கும் இடத்தில் Kevin Hart நடிப்பில் பின்னி இருக்கின்றார்..
ஆனாலும் தனது நண்பன் Dwayne Johnson மாட்டி விட்டு மனது கேட்காமல் தப்பிக்க உதவும் காட்சி அருமை..
போலிஸ் விசாரனையில் இவனை தெரியுதா-? என்று டேபை காட்டி கேட்க.. போர்ன் ஹப் இது தெரியாதா? என்று Kevin Hart சொல்ல… சாரி மேடம் என்று செக்யூரிட்டி ஜான்சன் படத்தை காட்டும் இடம் சிரிப்பின் உச்சம்.
Rawson Marshall Thurber இந்த திரைப்படத்தை எழுதி இயக்கி இருக்கின்றார்… படம் போரடிக்காமல் செல்கின்றது.. புதுமை என்று பார்த்தால் எதவும் இல்லை… இது போன்று நூற்றுக்கணக்கான திரைப்படங்களை பார்த்து இருக்கின்றோம்.. அதனால் இது பத்தோடு பதினொன்று அவ்வளவே…
இந்த திரைப்படத்துக்கு ஜாக்கி சினிமாஸ் அளிக்கும் மதிப்பெண் ஐந்துக்கு மூன்று…
வீடியோ விமர்சனம்.
https://youtu.be/YmTAK1WNRsc