10எண்றதுக்குள்ள…
1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் சியான் விக்ரம் தமிழ் திரையுலகில் கால் பதித்து 25 வருடங்கள் ஆகி விட்டன. அவருடைய முதல் படம் அக்டோபர் 17 ஆம் தேதி ரிலிஸ் ஆனாது.. 25 ஆண்டுகள் கழித்து அவருடைய படமான பத்து எண்றதுக்குள்ள அதே அக்டோபர் மாதத்தில் ரிலிஸ் ஆகின்றது…
கோலி சோடா கொடுத்த தெம்பில் விஜய்மில்டன் கமர்ஷியல் பேக்கேஜில் களம்இறங்கி இருக்கும் திரைப்படம் பத்துஎண்றதுக்குள்ள..
======
பத்து எண்றதுக்குள்ள திரைப்படத்தின் கதை என்ன?,
கண்ணிமைக்கு நேரத்தில் காரியங்கள் முடிக்கும் டிரைவர் விக்ரம் …. அவர் ஒரு டிரான்ஸ்போர்டர்… பொருளை எடுத்தக்கொண்டு சேர்ப்பதோடு சரி… காரில் கொடுத்து அனுப்பும் பொருளில் அதில் என்ன இருக்கின்றது..?? ஏதுஇருக்கின்றது என்று கேட்காத டிரைவர் அவர்…. அவர் வேலை செய்யும் டிரைவிங்இன்ஸ்டியூட்டில் கார் கற்றுக்கொள்ள வரும் போது பழக்கமாகும் சமந்தா…. அதன் பின் ஒரு சுபதினத்தில் சமந்தா கடத்த பட… டான் பசுபதி மூலம் ஒரு காரை போலிஸ் கஸ்டடியில் இருந்து மீட்டு ஒரு காரை வட நாட்டில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை விக்ரமிடம் பசுபதி ஒப்படைக்க அந்த காரில் கடத்தப்பட்ட சமந்தா இருக்க… எந்த விஷயமும் தெரியாத விக்ரம் காரை எடுத்துக்கொண்டு ஜார்கன்ட் பக்கம் கிளம்ப.. விடை தெரியா கேள்விகளுக்கு வெண்திரையில் பதில் இருக்கின்றது.
======
படத்தின் சுவாரஸ்யங்கள்…
டிராண்ஸ்போர்டர் திரைப்படத்தின் முதல்பாகம் நினைவுபடுத்தும் சில காட்சிகள்… ஆனால் அந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு ஜார்கண்ட் ஜாதி பிரச்சனை, ஒடுக்கப்பட்ட இனம் , ரோட் டிராவல், செல்ல சண்டைகள்.. விக்ரம்பிளாஷ் பேக்.. டபுள் ஆக்ட் சமந்தா என்று ஊடுகட்டி அடித்து இருக்கின்றார் விஜய் மில்டன்..
விக்ரம் ரொம்ப பிரஷ்ஷாக இருக்கின்றார்.. 49 வயது விக்ரமுக்கு என்று சொன்னால் யாரும் நம்ம முடியாத அளவுக்கு பளிச் என்று இருக்கிறார்… முதல் காட்சியிலே பசுபதி குருப்பிடம் இருந்து … காரில் பறந்துக்கொண்டே பேக்கினை அடிக்கும் அந்த காட்சியில் ரசிகர்கள் கரகோஷத்தில் தியேட்டர் அதிர்கிறது.
சமந்தா டபுள் ஆக்ட் கொடுத்து இருக்கின்றார்..சென்னை ஹாஸ்டலில் தங்கி இருக்கும் சமந்தா கொள்ளைஅழகாக ரசிக்க வைக்கின்றார்… கோலிசோடாவில் நடித்து இருக்கும் கண்ணாடி பெண் சமந்தாவின் நண்பியாக நடித்து இருக்கின்றார்.. அது மட்டுமல்ல… ஒரு நடிகையின் நண்பிகள் அழகாகத்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை விஜய்மில்டன் அடித்து நொறுக்கி இருக்கிறார். அதற்கு விஜய்மில்டனுக்கு ஸ்பெஷல் கிப்ட்.
பசுபதி சான்சே இல்லை.. படத்தின் பெரிய பலம்.. அவருடைய பாடி லாங்வேஜ் பேச்சு போன்றவை ரொம்ப ரசிக்க வைத்தன என்றால் அது மிகையில்லை.. அது மட்டுமல்ல.. பசுபதி என்ட்ரி ஆகும் முதல் காட்சி அருமை… தெலுங்கில் வந்த சுவாமி ராரா திரைப்படத்தின் இன்ட்ரோ போல மிக அருமையாக இருந்தது என்றால் மிகையில்லை..
இந்த படத்துக்கு ஒளிப்பதிவு பாஸ்கரன் செய்து இருக்கின்றார்.. காட்சிகள் கண்ணில் ஒற்றிக்கொள்வது போல இருப்பது படத்துக்கு பெரிய பிளஸ்…
இமான் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.. முக்கியமாக சார்மி ஆடும் அந்த தாபா ஆட்டம் அந்த செட்.. அந்த பாடல் அந்த கான்செப்ட்.. கமர்ஷியல் மசாலாவுக்கு சிறந்த எக்சாம்பிள்…
சமந்தா விக்ரம் இரண்டு பேரும்ஒன்றாக லாட்ஜில் தங்கி பேசும் அந்த காட்சியில் ரொமான்ஸ் தூக்கல்…
கார் டோ பண்ணும் சென்னை போலிஸ் வாகனம், தண்டவாளத்தில் விரையும் கார்.. தெலுங்கு பட ஸ்டைலில் களம் இறங்கி இருக்கின்றார்கள்..
======
படக்குழுவினர் விபரம்.
Directed by Vijay Milton
Produced by AR Murugadoss
Written by Vijay Milton
Starring
Vikram
Samantha
Pasupathy
Jackie Shroff
Ramdoss
Sampoornesh Babu
Music by D. Imman
Anoop Seelin (BGM)
Cinematography Bhaskaran K.M
Edited by Sreekar Prasad
Production
company
A.R Murugadoss Productions
Distributed by Fox Star Studios
Release dates
Scheduled for
21 October 2015 (
Running time
144 minutes
Country India
Language Tamil
==
பைனல்கிக்.
முதல் பாதி பரபரப்பான காமெடி சென்டிமென்ட் ஆக்ஷன் பேக்கேஜ்… இரண்டாம்பாதி.. பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் பேக்கேஜ்… மீரா படத்துக்கு பிறகு விக்ரம் நடித்து இருக்கும் பரபரப்பான ரோட் மூவி பத்து எண்றதுக்குள்ள திரைப்படம் என்றால்அது மிகையில்லை.ஆக்ஷன் விரும்பிகள் கண்டிப்பாக இந்த படத்தை ரசிக்கலாம்..
வீடியோ விமர்சனம்.
https://youtu.be/6Tucznxi0Eo