Naanum Rowdy Dhaan Movie Review by Jackie Sekar

 

vijay sethupathi naanum rowdy dhaan

 

 

நானும் ரவுடிதான்..

 

விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் யாருடன் உங்களுக்கு நடிக்க விருப்பம் என்று  விஜய்சேதிபதியிடம் கேட்டு வைக்க… அவரும் முகம் எல்லாம் வழிச்சலோடு நயன்தாரா என்று ரொம்ப கூச்சமாக அதே சமயம் கியூட்டாக சொன்னார்… அதற்கு பின் சட்டென நானும் ரவுடிதான் என்று பெயர் வைத்து அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அவரோடு அவரின் விருப்பநாயகி நயன்தாரா நடிக்கின்றார் என்று சொன்னதும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கிடக்க… அதை விட அனிருத்தின் இரண்டு பாடல்கள் எப்எம் ரேடியோக்களில் அலறி துடிக்க.. இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறவைத்தது என்றே சொல்ல வேண்டும்… தேவி பேரடைஸ் அரங்கம் ஸ்பெஷல் ஷோவுக்கு கூட்டத்தில் விழி பிதுங்கி நின்றது என்றே சொல்ல வேண்டும்..

==

நானும் ரவுடிதான் படத்தின் கதை என்ன?,

காதலனை கொலை செய்ய நிர்பந்திக்கும் காதலி.. இதுதான் படத்தின்  ஒன்லைன்.

மகன் விஜய்சேதுபதியை  கண்டிப்பாக போலிசாக்கிவிட வேண்டும் என்று போராடும் பெண் போலிஸ் ராதிகா… ஆனால் போலிசை விட கெத்து  ரவுடிதான் என்று ரவுடியாக   மாற வேண்டும்   என்று போராடும் விஜய்சேதுபதி.. அவர் வாழ்க்கையில் நயன்தாரா குறுக்கிடுகின்றார். இருவருக்கும் காதல் மலர்ந்து முத்தமிடும் வேளையில் ஒருவனை கொலை  செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.. இத்தனைக்கும் நயனுக்கு காது கேட்காது…  காதலி சொன்னது போல கொலை செய்தானா? அல்லது அம்மா விருப்படி போலிசானாரா ? என்பதை  வெண்திரையில் காண்க…

=======

படத்தின் சுவாரயஸ்யங்கள்.

விஜய் சேதுபதி முன்னனி நாயகனாக மாறிவிட்டார் கூடவே நயன் என்ற போது இன்னும்  வேல்யூ ஏறி விட்டது… என்னதான் வளர்ந்தாலும் அவரை ஹீரோவாக  பார்க்காமல் அவரை நம் நண்பர்களில் ஒருவர் போல பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.. காரணம்… அவரின் பாடிலாங்வேஜ்…

இந்த படத்தில் இன்னும்  நெருக்கமாகின்றார்… ஒரு ரவுடியை அறிமுகப்படுத்துங்க.. என்ற நயன்  சொன்னதும் ரவுடி தோரனைக்கு  மாறும் அந்த காட்சியில்  தியேட்டர் கல கல..

உனக்கு காது கேட்காது.. லிப் ரிடிங்ன்னு சொல்லறே…  எங்க நான் என்ன சொல்றேன்னு சொல்லு பார்ப்போம்.. ஓத்தா ஓம்மால  ஒன்று விஜய் சேதுபதி சொல்ல.. அதை வேறு விதமாக நயன் சொல்லும் போது தியேட்டரில் வெடிச்சிரிப்பு.

 

நயன்.. ஒட்டுமொத்த அழகும் ஸ்டேக்சரோடும் வலம் வரும் தேவதை.. ஆனால் நடிப்பில்  பின்னி எடுக்கும்  ராட்சசி. அதுவும் காது கேட்காது என்பதை பார்வையாளனுக்கு புரிய வைக்க முதல் காட்சியிலேயே  அசத்தி இருக்கின்றார்.. அதே போல இன்ர்வெல்   பிளாக்கின் போது  இரண்டு உதடுகளுக்கு செம குளோசப்பும்… அதற்கு பின் நயன் அந்த காதலை அங்கீகரிக்க அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் ஏ ஓன்  என்றே சொல்ல வேண்டும்.

பிக்எப்எம் பாலாஜி வரும் காட்சிகளில் கலகலப்பு என்றாலும்..  இடைவேளைக்கு பின்  பார்த்திபன் கலக்கி இருக்கின்றார்… அதுவும்… நயன்தாரா ஒன்னை போடனும் என்று  சொல்ல… நயன்   கொலை செய்ய போடனும் என்று சொல்ல… தன்னை மேட்டர் பண்ண  வந்து இருப்பதாக  நினைத்துக்கொண்டு பார்த்திபன் பேசும் இடத்தில் ஜிலு ஜிலுப்புதான் போங்க..

மன்சூர் அலிகான், ஆனந்ராஜ் போன்றவர்கள் தலை காட்டி இருந்தாலும் ஆனந்தராஜ் மனதில் இருக்கின்றார்.

அனிருத்தின் இசையில் இரண்டு பாடல்கள் செம… தங்கமே உன்னைதான்… நானும் நியும்  ஒன்றாய் சேரும் நேரமே  பாடலும்  அசத்தல்..

ஜார்ஜி சி வில்லியம்சின் ஒளிப்பதிவு புதுவையை  இன்னும் அழகாக காட்டி இருக்கின்றது என்றால் அது மிகையில்லை.

 

போடா போடி திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன்  இப்படத்தை இயக்கி இருக்கின்றார்… அதை விட சின்ன பசங்க பஞ்சாயத்து காதலில் லாஜிக்கா விஜய் சேதுபதி சொல்லும் டயலாக்  போர்ஷன் நான் மிகவும் ரசிக்க  இடம்… அதே போல பிலிம் பை என்று போட்டு அனிருத், ஸ்ரீகர்பிரசாத், ஜார்ஜ் சி வில்லியம்ஸ் என்று பெயர் போட்டு விட்டு தனது பெயரை போட்டுக்கொள்ளும்  இடத்திலும்  அடக்கத்தில் மிளிர்கின்றார்.

படக்குழுவினர்  விபரம்..

 

Directed by Vignesh Shivan
Produced by Dhanush
Written by Vignesh Shivan
Starring Vijay Sethupathi
Nayantara
Music by Anirudh Ravichander
Cinematography George C. Williams
Edited by A. Sreekar Prasad
Production
company
Wunderbar Films
Distributed by Lyca Productions
Release dates
21 October 2015
Running time
2 Hrs 20 Mins
Country India
Language Tamil

========

பைனல்க்…

முதல் பாதியில் இருந்த ஜாலியும் விறு விறுப்பும் … இரண்டாம்பாதியில்  முதலில் குறைந்தாலும் பார்த்திபன் என்ட்ரிக்கு பிறகு  பழைய நிலைக்கு படம் விறு விறுப்புக்கு சென்று விடுகின்றது. படம் எங் அன்டு எனர்ஜிட்டிக்காக இருக்கின்றது… காதலர்களுக்கு இந்த படம்   கண்டிப்பாக  பிடிக்கும்.

ஜாக்கிசினிமாஸ் ரேட்டிங்

ஐந்துக்கு மூன்று..

========

வீடியோ விமர்சனம்..

https://youtu.be/BKHGuSRzhis