தமிழ் திரையுலகில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படத்தில் விஜய சேதுபதி காயத்ரி இரண்டு பேரும் ஒன்றாக நடிக்கின்றார்கள்.. ஆனால் அந்த படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி… வளர்ச்சி அபாரா வளர்ச்சி… ஆனால் காயத்திரிக்கு சொல்லிக்கொள்ளும் வாய்ப்புகள் ஏதும் இல்லை.. அந்த வருத்தம் எல்வலோருக்கும் இருக்கும் வருத்தம்தான்…
திரும்பவும் மெல்லிசை படத்தில் விஜய்சேதுபதி காயத்திரியின் நடிப்பு திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்க இயக்குனரிடம் சிபாரிசு செய்கின்றார்…. காயத்திரியும் மகிழ்ச்சியில் அந்த திரைப்படத்தின் நடிக்கின்றார்….
இதுவரை பார்த்த காயத்திரியா இது?? என்று வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு ரொம்ப ஸ்டைலிஷாக, இருக்கின்றார்… அதை விட பாடல்காட்சிகளில் அவரது காஸ்ட்யூம்கள் பட்டையை கிளப்புகின்றன..
ஆனால் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கின்றார் காயத்ரி …. ஆனால் படம் நினைத்த நேரத்தில் படம் வெளிவராமல் கொஞ்சம் காலதாமதம் ஆக உடைந்து விட்டார்…
யோசித்து பாருங்கள்…. ஒரு நல்ல திரைப்படம் வெளிவந்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது… அது வெளிவர தாமதம் ஆகி கொண்டு இருக்கும் போது யாருக்குதான் மன உளைச்சல் இருக்காது..???
பாடல் வெளியீட்டு விழா அளவுக்கு இந்த திரைப்டபம் முன்னேறி இருக்கின்றது..அதனால் பேசும் போதே காயத்ரி உடைந்து விட்டார்… அழகையோடு எமோஷனல் ஆகி எதுவும் பேசாமல் உட்கார்ந்து விட்டார்…
மெல்லிசை படம் வந்தால் நிச்சயம் காயத்ரியை ரசிப்பீர்கள்…அந்த அளவுக்கு அழகாக இருக்கின்றார்..
பழசை மறக்காமல்.. காயத்ரி திறமையை கண்டு திரும்பவும் தன் படத்தில் வாய்ப்பு கொடுக்க சொல்லி சிபாரிசு செய்த விஜய்சேதுபதி பாராட்டுக்குறியவர்தான்.