Mellisai audio launch

mel

 

மெல்லிசை  திரைப்படம்  ஆடியோ லான்ச்.

கற்றது தமிழ் ராமின் உதவியாளர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி காயத்ரி நடிக்கும் மெல்லிசை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக சிறப்பாகவும் அதே சமயத்தில்  நெகிழ்ச்சியாகவும் நடைபெற்றது…

விழாவில்  இயக்குனர் ராம் பேசுகையில்….

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி… என்னிடம் உதவியாளராக 2004 மற்றும் 2005இல் பணி புரிந்தார்..அவர் புத்தக விரும்பி.. கவிதை கதை புதினம் என எல்லாவற்றிலும் பரிட்சயம் உள்ளவர். அதே போல விஜய் சேதுபதி தனியாக வளர்ந்த காட்டு மரம்… யார் தயவையும் எதிர்பார்க்காமல் வளர்ந்த மனிதர் விஜய்சேதுபதி என்று புகழாரம் சூட்டினார்… அது மட்டுமல்ல… நாங்கள்  எந்த படத்தின் படப்பிடிப்பையும் 75 நாட்களில் முடித்து விடுகிறோம்…ஆனால் படம்  வெளிவர  மூன்று வருடத்துக்கு மேல் ஆகின்றன.. என்னை பிடித்த சாபம் என் உதவியாளர்களையும்  தொடர்வதில் எனக்கு வருத்தம் என்றார் ராம்.

 

விஜய் சேதுபதி பேசுகையில் படம் வேண்டும் என்றால் தாமதமாக வரலாம்.. ஆனால் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி திறமையானவர்…. அவருக்கு நான் வாய்ப்பு கொடுத்தததாக சொல்கின்றார்கள்… ஆனால் எனக்கு அவர்தான் வாய்ப்பு கொடுத்தார் என்று மேடையில் புகழ்ந்தார்.. அது மட்டுமல்ல… மெல்லிசை படத்தின் பாடல்கள் மற்றும் அதை படமாக்கிய  விதத்தில் ஒரு ஸ்டைல் தெரிந்தது.. அது மட்டுமல்ல..

 

அந்த பாடல்களில்  வந்த மான்டேஜ் காட்சிகள்  அருமை… மெல்லிசை திரைப்படம் வெற்றிபெற  ஜாக்கிசினிமாஸ் மனதார வாழ்த்துகிறது.