WHO I AM I -2014 (GERMAN) MOVIE REVIEW | நான் யாரு ? எனக்கே தெரியலையே…

Who_am_I_movie_poster

 

யாருக்கு என்ன  தேவையோ..அதில்  மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள்…   இதுதான் ஒன்லைன்… இதை வைத்துக்கொண்டு   மிக அற்புதமாக கதை  பண்ணி இருக்கிறார்கள்… மிக அற்புதமான திரைக்கதையில் சமீபத்தில் கவனம் ஈர்த்த  ஜெர்மன் திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும்..

 

பென்ஜமின் என் பெயர்.

எல்லோரையும் விட  என்னை  பாராட்டும் படி  நான் சாகச செயல் செய்ய வேண்டும்… உதாரணத்துக்கு  நான் சூப்பர் ஹீரோ போல ஆக வேண்டும்… ஆனால் நான் தான் செய்தேன் என்று தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான்…

ஆனால் நான் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று ஒருவன் போலிசில் சரண் அடைந்தால் அதுவும் அவன் உலகிலேயே வலை வீசி தேடப்படும்  ஒரு ஹேக்கர் என்றால்  உட்கார வைத்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பார்களா? என்ன?

ஆனால் அவன் ஆராத்தி எடுக்க வைக்கிறான் எப்படி என்பதுதான் திரைக்கதை…

 

Who-Am-I-2014

 

WHO AM I திரைப்படத்தின் கதை என்ன??

 

பெஞ்சமின்  கம்யூட்டர் சர்வர்களை ஹேக்  செய்வதில் வல்லவன்… ஆனால்  அவனுக்கு மேல்  மாக்ஸ் என்பவன் ஹேக்கர் நம்பர் ஒன்… அவனை விட ஒரு நாளாவது பெரிய ஆளாக வேண்டும என்பதுதான் பெஞ்சமினின் ஆசை.. உதாரணத்துக்கு சூப்பர் ஹீரோக்கள் போல .. சாகசம் செய்ய வேண்டும்… ஆனால் அவன் யார் என்று வெளியே தெரியக்ககூடாது. அதுதான் பெஞ்சமீனின் பாலபாடம்.

 

 

விளையாட்டாக நண்பர்களோடு சர்வர்களை முக்கியமாக இன்டர் போல் சர்வர்களை ஹேக்  செய்து ஜாலியாக விளையாட அது   பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விடுகிறது…  அவன் நண்பர்கள்  கொலையாகிறார்கள்..

ஹேக்கர்ஸ் மாக்ஸ் இவனை கொலைப்பழியில்  சிக்கவிடுகின்றான்… போலிஸ் பெஞ்சமீனை விசாரிக்கிறது..  கொலை பழியில் இருந்து  எப்படி தன்னை தற்காத்துக்கொண்டான் பெஞ்சமின் என்பதுதான் ஹு அம் ஐ திரைப்படத்தின் கதை.

=====

படம்  பட்டாசு….

அற்புதமான திரைக்தை… சான்சே இல்லை… இதுதான் முடிவு என்று நினைக்கவே முடியாத திரைக்கதை முடிச்சி.அடச்சே இப்டி நினைச்சா… இப்படி மாத்திட்டானுங்களே என்று  நீங்கள் படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இயக்குனரை திட்டுவீர்கள்.

செமையான திரில்லர் திரைக்கதை.

இன்ட்ராகேஷன் நடக்கும் போது  பெண் அதிகாரியின் புல் டிடெயிலையும்  நாயகன்  சொல்லும் இடத்தில் கை தட்டல் பெறுகிறான்… அந்த கணத்தில் இருந்து தான்..  தன் எதிரில் உட்கார்ந்து கொண்டு இருப்பவன் சாதாரண ஆள் இல்லை என்பதை உணரும் இடம் அருமை..

அதே போல பார்வையாளரை வேறு பீலுக்கு அழைத்து செல்ல… அல்லது  நிறைய  யோசிக்க வைக்காத அளவுக்கு  என்ன செய்யலாம் என்று யோசித்து காதலை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குனர்..

தான் ஏன்  சூப்பர் ஹீரோவாக மாற  வேண்டும் என்று  நினைத்தேன் என்று சூப்பர் ஹீரோக்களின்  பெற்றோர் கதையை சொல்லும் இடம் காமெடி கலந்த சுவாரஸ்யம்.

ஹேக்கர்கள் முகம் அற்றவர்கள் என்பதற்கு பிடித்த அந்த கான்செப்ட் அருமை… அதே போல அவர்கள் சாட்டிங்கை பக்கத்தில் ஓட விடுவதில் அவர்கள் யார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

பெஞ்சமின் கேரக்டருக்கு டாம் சிச்சிங்  நல்ல தேர்வு…

டிரினி டைய்லோன்…  விசாரனை அதிகாரியாக நடித்து இருக்கிறார்.. இவர் டேனிஷ் நாட்டு பாடகி என்பது குறிப்பிடதக்கது.

==========

படத்தின் டிரைலர்..

 

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/5vnjheCqRIs” frameborder=”0″ allowfullscreen></iframe>

==

படக்குழுவினர் விபரம்

Directed by Baran bo Odar
Written by Baran bo Odar
Starring Tom Schilling, Elyas M’Barek
Release dates
6 September 2014 (TIFF)
25 September 2014 (Germany)
Running time
105 minutes
Country Germany
Language German, English

====

பைனல்கிக்

இந்த படம் பார்த்தே தீர வேண்டிய ஜெர்மன் திரைப்படம்… இந்த படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும்  என்று சினிமாரவ கரைத்து குடித்த யாராலும் யூகிக்க முடியாத திரைக்கதை… முக்கியமாக  நாயகனின் நடிப்பும் இன்வெஸ்ட்டிகேஷன் ஆபிசரின்  நடிப்பும் பின்னிபெடுலெடுத்து இருக்கும்.. திரில்லர் மற்றும் ஆக்ஷன் ரசிகர் தவறவிடாமல் பார்க்கவேண்டிய  பார்த்தே தீர வேண்டிய திரைப்பட் ஹு அம் ஐ…. டோன்ட் மிஸ் இட்.

=

வீடியோ விமர்சனம்.

https://youtu.be/xSbbrgD8xnE