kurangu kaila poomaalai Movie review |குரங்கு கைல பூ மாலை திரை விமர்சனம்

Kurangu-Kaila-Poomalai-Posters-1

குரங்கு கைல பூ மாலை..

பேச்சுவழக்கில் பேசும் வாக்கியங்கள்தான் தற்போது திரைப்படத்தின் தலைப்புகளாக வருகின்றன. அந்தளவுக்கு தலைப்பு பஞ்சம்.. ஆனால் இது போலான பேச்சு வழக்கு வாக்கிய தலைப்புகள் கொஞ்சம் கவனம் ஈர்க்கின்றன என்றால் அது மிகையில்லை.

ஒரு பெண் ஆனால் அவள் வாழ்க்கையில் நான்கு பேர் குறுக்கிடுகின்றார்கள்.. அவர்களிடம் அந்த பெண் மாட்டிக்கொண்டு முழிக்கும் சங்கடங்கள் என்ன? என்பதுதான் குரங்கு கைல பூமாலை திரைப்படத்தின் நீட்டி முழங்கி சொல்லி இருக்கும் கதை..

குரங்கு கைல பூ மாலை கிடைச்சா ? என்ன ஆகும்..?? சிக்கி சின்னாபின்னமாக்கிடும் இல்லையா??? அதேதான் இந்த படத்தின் உட்கருவும்..

பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கையில் தள்ள வேண்டும் என்று நினைக்கும் கட்டிட காண்டிராக்டர், காதலில் தோற்று போய் காதலர்களை பழிவாங்கும் காதலன், நாயகியை உண்மையாக நேசிக்கும் பணக்கார இளைஞன்.. நாயகியை கல்யாணம் செய்தே தீருவது என்று திரியும் முறைமாமன் இவர்களுக்குள் நடக்கும் குழப்பங்கள்தான் கதை..

மிக அழகான ஒரு குழப்ப திரைக்கதை… அதை மிக அழகாக ரசிகனுக்கு கடத்தி இருக்க வேண்டும்… நிறைய புதுமுகங்கள் நாடகதனமான காட்சிகள் அலுப்பை ஏற்படுத்துகின்றன…

படம் முடியும் போது வரும் இயக்குனர் சரவண சுப்பையா கொஞ்சம் இயல்பாய் நடித்து இருக்கின்றார்… கொஞ்சம் சிரிப்பு மூட்டுகின்றார்…மற்றபடி படத்தில் வரும் பல கேரக்டர்கள் சிரியலில் நடிப்பது போல நடித்து தள்ளிஇருக்கின்றார்கள்.

குழப்பங்களுக்கு விடை சொல்லும் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது… இருந்தாலும் அடுத்த புராஜெக்ட்டில் படக்குழுவினர் இன்னும் கவனம் செலுத்தட்டும். லோ பட்ஜெட் படம் என்பது தெரிகின்றது… கொஞ்சம் சீன்கள் நன்றாக இருந்தாலும் பாசிட்டிவாக எழுதி வைக்கலாம்…

ஆனால்…

குரங்கு கைல பூ மாலை பாடம் பார்க்கும் போது தெரியும்… யார் குரங்கு யார் மாலை என்று..