Vandha Mala Movie Review | வந்தா மலை திரைவிமர்சனம்.

Print

ஆர்யா நடித்த கலாபகாதலன் திரைப்படத்தை இயக்கிய இகோர் இயக்கத்தில் வெளி வந்து இருக்கும் திரைப்படம் வந்தா மலை…
வந்தா மலை போன மயிறு… என்று சொல்வழக்கு கிராமபுறங்களில் உண்டு…

வாழ்க்கையில் பிரச்சனை சூழ்ந்து இருக்கும் போது… வேற சாய்சே இல்லை… ஒரே சாய்ஸ்தான் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம்.. அப்போது என்ன செய்வோம்… அந்த சாய்சிலும் 50 பர்சென்ட்தான் வெற்றி வாய்ப்பு…

நோ அதர் கோ…. களத்தில் இறங்கியே ஆக வேண்டிய கட்டாயம்… வந்தா மலை போனா மயிறு என்று களத்தில் இறங்கி இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்….

ஆனால் வந்தா மலை… படத்தில் நான்கு இளைஞர்கள் அவர்கள் நோக்கம் குடித்து விட்டு ஜாலியாக இருக்க செயின் திருடுவது… இதுதான் வாழ்க்கையாக இருக்கின்றார்கள்… நாயகனை உயிருக்கு உயிராய் காதலிக்கும் அறவை மில் வைத்து நடத்தும் பெண்…ஆனால் அந்த பெண் மிக நேர்மையான பெண்…

நான்கு பேரும் குற்ற வழக்குகளில் ஜெயிலுக்கு போனால் அந்த ஏரியாவில் இருக்கும் முன்னால் ரவுடி வியட்நாட் வீடு சுந்தரம் அந்த பசங்களை பெயிலில் எடுப்பார்..

இந்த நான்கு இளைஞர் கையில் ஒரு செயின் பறிப்பின் போது, ஒரு லாக்கெட் செயின் கையில் கிடைக்கின்றது. அதில் என்னை காப்பாற்றினால் இரண்டு கோடி கிடைக்கும் என்று எழுதி இருப்பதை பார்த்துவிட்டு எழுதிய நபரை காப்பாற்ற செல்கின்றார்கள்…. அவர்கள் காப்பாற்றினார்களா? இரண்டு கோடி பணம் கிடைத்ததா இல்லையா என்பதை நீட்டி முழங்கி சொல்லி இருக்கின்றார்..

நேட்டி விட்டியில படம் எடுக்கலாம் குப்பத்தில் போய் படம் எடுப்பதாலும்..அல்லது குப்பத்து பாழை பேசுவதாலும் நேட்டிவிட்டி வந்து விடாது.. கதைமாந்தர்கள் ரத்தமும் சதையுமாக நம் மனதில் நிற்க வேண்டும்…

நான்கு நண்பர்களுக்கும் நோக்கம்.. எதுவுமே இல்லை.. திருட்டு மட்டுமே பிரதானம்.. முருகன் இட்லி கடை போல வைக்க வேண்டும் என்ற வெறி கூட முருகள் இட்லி கடையில் திருடும் போது நிகழ்ந்தது..

படத்தின் ஒரே ஆறுதல் நாயகி பிரியங்காதான்.. நன்றாக நடித்து இருக்கின்றார்… நாயகனை சின் சியராக லவ்வுகின்றார்… குப்பத்து டயலாக்கை மிக அழகாக டெலிவரி செய்துள்ளார்.

??????????????????????????????????????????????????

உன்னான்ட காதலை நான் சொன்னதும் என்னா நினைச்சா நீ..??? பாடல் நன்றாக இருந்தது.. அதை ரசிக்கும் விதத்தில் படம் ஆக்கி இருந்தார்கள்… அதே போல இசையமைப்பாளர் நாடக கோஷ்ட்டி வாசிப்பது போல ஆர்மோனியத்தை பிரேமுக்கு பிரேம் வாசித்து தள்ளி இருக்கின்றார்…

வியட்நாம் வீடு சுந்தரம் வரும் காட்சி…. முன் தோல் பிரச்னையில் ஆண்டிகளை பார்த்து அழுவும் நாயகனின் நண்பன் என சுவாரஸ்யங்கள் படத்தில் கொஞ்சம் கொஞ்சம் எட்டி பார்க்கின்றன..

ரவுடி வியட்நாம் வீடு சுத்தரம் இறப்பின் போது ஒரு பெண் கேமரா பற்றி கவனம் இல்லாமல் இயல்பாய் சாவு இசைக்குஊடு கட்டி ஆடுவார்.. அந்த இயல்பு படம் குப்பத்து நேட்டிவிட்டி காட்சிகளில் இருந்து இருக்க வேண்டும்… அது மட்டுமல்ல… பக்கம் பக்கமாக பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்

திருடுவதை மட்டுமே தொழிலாக கொண்ட நான்கு பேர்.. கடைசி ரீலில் நாட்டுக்காக சண்டை போடுகின்றார்கள் என்று காட்டினால் எப்படி பொருத்துக்கொள்வது–?

தயாரிப்பாளர் வந்தா மலை என்றுதான் பணம் போட்டு இருக்க வேண்டும்….
பெட்டர்லக் நெக்ஸ்ட்டைம். வந்தா மலை டீம்.