Srimanthudu – 2015 Movie Review |ஸ்ரீமந்துடு திரைவிமர்சனம்

1436797865-1314

ஸ்ரீமந்துடு.

மகேஷ்பாபுவுக்கு கடந்த கால படங்கள் மாஸ் ஹிட் வெற்றிப்படங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் அவை.. கொரட்டல சிவாவோடு ஸ்ரீமந்துடுவில் வெற்றி பெற வேண்டும் அதுவும் மாஸ் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று மகேஷ் பாபு கோதாவில் இறங்கி இருக்கின்றார்.

வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை இனி விரிவாய் பார்ப்போம்.

சரி ஸ்ரீமந்துடு என்றால் என்ன அர்த்தம்..?? பணக்காரர் என்று அர்த்தம்.

அதற்கு முன் ஸ்ரீமந்துடு திரைப்படத்தின் கதை என்ன என்று பார்த்து விடலாம்..
Srimanthudu-Poster-10
========
பணக்கார ஜெகபதிபாபுவின் பையன் மகேஷ் பாபு.. அப்பாவின் தொழிலில் ஆர்வம் இல்லை…. கண்டதும் ஸ்ருதி மேல் காதல்… தான் ஒரு பணக்கார வீட்டு பையன் என்பதை ஸ்ருதியிடம் மறைக்கின்றார்… ஸ்ருதிக்கு உண்மை தெரியும் போது, தான் கிராமத்து பெண் என்றும் நீ பணக்காரன்.. அதை விட என் மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்து வேருக்கு என்று மதிப்பு இருக்கு… உனக்கு உன் பூர்வீகம் என்வென்று தெரியாது.. பணக்காரன் என்பதால் அது பற்றிய கவலையும் உனக்குஇல்லை அதனால் நமக்குள் காதல் சரிவாராது என்று சொல்லி விடுகின்றார்… தன் பூர்வீக கிராமம் நோக்கி மகேஷ்பாபு செல்கின்றார்..அங்கே பல பிரச்சனைகள்…. மகேஷ் பாபுவின் காதல் கை கூடியதா?? கிராமத்து பிரச்சனையை தீர்த்து வைத்தாரா ? என்பதே ஸ்ரீமந்துடு படத்தின் கதை.
==
அத்தடு,அதிதி திரைப்பட வரிசையில் மகேஷ் பாபுவுக்கு ஒரு ஸ்டைலான வெற்றித்திரைப்படம் ஸ்ரீமந்துடு.

பிரேமுக்கு பிரேம் அவரை அழகாக காட்டி இருக்கின்றார்கள். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஸ்ருதியுடன் அவர் லவ்வும் இடங்களில் அசத்துகின்றார்…
அதே போல பாடல்கள் படம் வெளிவரும் முன்பே … ரொம்பவே பிரபலம் ஆகிப்போனது… போருர் கோபாலகிருஷ்னாவில் காலை 5 மணி காட்சி… நாலு மணிக்கே ரசிகர்கள் கூட்டம்…. படம் ஆரம்பித்து முடியும் வரை தொண்டை தண்ணி வற்ற கத்தி கத்தி மகேஷ்பாபுவை கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள்..

எனக்கு தெரிந்து நான் முதன் முதலாக அதுவும் தமிழகத்தில் ஒரு தெலுங்கு படத்துக்கு இப்படி ஒரு கொண்டாட்டத்தை நேரில் பார்கின்றேன்… வெறுமனே கைலி மட்டும் கட்டிக்கொண்டு நடந்த ஒரு சிங்கிள் ஷாட்டை யூடியூபில் விட்டு பெரிய அளவில் டெம்ட் ஏற்றினார்கள்..
ஸ்ருதி ஏன் லிப்ஸ்ட்டிக்கை அப்பிக்கொண்டு வருகின்றார் என்று தெரியவில்லை.. கொஞ்சம் யாராவது அவரிடம் எடுத்து சொன்னால் நலம்.. செப்பு சிலை போல இருக்கின்றார்.. ஆனால் லிப்ஸ்டிக் உதட்டை பார்க்க பயமாக இருக்கின்றது..

Srimanthudu_movie_new_photos_009

ஒளிப்பதிவாளர் மதி மகேஷ்பாபுவை ரசிக்கப்பட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு எடுத்து இருக்கிறார்.. முக்கியமாக சைக்கிளில் வரும் காட்சிகள்.. அதை விட… மாந்தோப்பில் சைக்கிளில் வரும் அந்த காட்சி மரணமாஸ்…

அதே போல சிங்கிள் ஷாட் பியூ செகன்ட் என்றால் கூட மெனக்கெட்டு இருக்கின்றார்கள். பொக்லைனில் மண் கொட்டுவது அருவி போல காட்சிபடுத்தப்பட்டு இருப்பது நல்ல உதாரணம்..

அனல் அரசுவின் ஆக்ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் மாதக்கணக்கில் இருப்பது எல்லாம் தலையில் பூ சுற்றும் ரகம்.

=====
படத்தின் டிரைலர்.


======
படக்குழுவினர் விபரம்.

Directed by Koratala Siva
Produced by Y. Naveen
Y. Ravi Shankar
C. V. Mohan
Mahesh Babu
Written by Koratala Siva
Starring Mahesh Babu
Shruti Haasan
Music by Devi Sri Prasad
Cinematography R. Madhi
Edited by Kotagiri Venkateswara Rao
Production
company
Mythri Movie Makers
G. Mahesh Babu Entertainment Pvt. Ltd
Distributed by Eros International
Release dates
7 August 2015
Running time
160 Mins
Country India
Language Telugu
Budget ₹52 crore (US$8.1 million)[a]
Box office ₹3.2 crore (

=====
பைனல் கிக்.
இந்த படம் மகேஷ் பாபு ரசிகர்களை மட்டுமல்ல…. கமர்ஷியல் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் ஸ்ரீமந்துடு நிச்சயம் பிடிக்கும்..
கண்டிப்பா ஒரு முறை பார்க்கலாம்.. அவசியம் பார்க்க வேண்டிய படம்.
===
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஏழு,.

மேலும் விரிவாய் வீடியோ விமர்சனத்தில்..