Kanchana 2 Movie review | Raghava Lawrence,Taapsee Pannu,Kovai Sarala| jackie cinemas

Kanchana-2

அது என்ன மாயமோ மந்திரமோ  தெரியலை…. தீபாவளி ராக்கெட்டுக்கு பின்னாடி வச்ச நெருப்பு மாதிரி காஞ்சனா படம்  இந்த ஓட்டம் ஓடுது…  முதல்  காட்சி ஓகே கண்மணி இரவு காட்சி காஞ்சனா 2 பார்க்க வேண்டும் என்பது திட்டம்… ஆனால்  யாழினி  காஞ்சனா பார்க்க வேண்டும்  என்று நச்சரித்த காரணத்தால்  கஞ்சானா டூ வை  அவளையும் அழைத்துக்கொண்டு பார்க்கலாம் என்று நினைத்து இருந்தேன்.. மறு நாள் சனிக்கிழமை ஸ்பெஷல் ஷோ எல்லா தியேட்டர்காரர்களும் போட்டு சனி ஞாயிறு ரெண்டு நாளும் செமையா கல்லா கட்டினாங்க…

சரி வீக்டேஸ்ல டிக்கெட்  கிடைக்கும்ன்னு நினைச்சா.. அன்னைக்கும் டிக்கெட் கெடக்கலை…  கடந்த  சனிஞாயிறும்… அதேகதைதான்…  ஞாயிற்று கிழமை மடிப்பாக்கம்   குமரன் தியேட்டர் ஒரே ஒரு டிக்கெட் இருந்திச்சி.. நானும் யாழினியும் மட்டும் கிளம்பினோம்.

கூட்டம்னா கூட்டம் அவ்வளவு கூட்டம்…. ரொம்ப நாளைக்கு அப்புறம் பேமிலி ஆடியன்ஸ்சை இப்போதுதான் பார்க்கறேன்.. சான்சே இல்லை.. லாரன்ஸ் காட்டுல செம மழை…

=============

கஞ்சனா டூ படத்தின் கதை என்னன்னு பார்த்துடலாமா?

கஞ்சானா 1ல என்ன கதையோ…?? அதே பார்மெட்டுல இரண்டாம் பாகமும் எடுத்து இருக்கார்..

இடைவேளைக்கு  அப்புறம் ஒரு  செண்டிமென்ட்… அதுதான் பேய்… அவ்வளவுதான் கதை..

இருந்தாலும் ரெண்டு வரியில் கதை சொல்லறேன்..

டாப்சி.. கீரின் டிவியில புரோக்கிராம் புரொட்யூசர்… டீஆர்பில கிரீன்டிவி  இரண்டாம் இடத்துக்கு வந்துடுது.. வழக்கமாக அரைக்கும்   மாவையே அரைக்காம.. பேய் கான்செப்ட் எடுத்தா ஜெயிக்கலாம்ன்னு நினைச்சி.. கேமராமேன் லாரன்ஸ்சோடு மகாபலிபுரம் பக்கத்துல பாழடைந்த பங்களாவில் ஷுட் நடத்தப்போறாங்க டாப்சி…

 அந்த பங்களாவில்   நிஜபேய்களின் தொல்லை.. அவர்கள்  அவைகளிடம் இருந்து  தப்பித்தார்களா..?? பேய்கள்… டாப்சி லாரன்ஸ் குழுவினரை வைத்து அவைகள் எவ்வாறு  தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டன என்பதுதான் காஞ்சனா டூ படத்தின் கதை.

===

படத்தின் சுவாரஸ்யங்கள்..

 படத்தின் முதல் பாடலில் தன் தம்பியை நடிகர் விஜய்யின் அப்பா எப்படி அறிமுகப்படுத்தினோரோ… அதாவது இந்த  பாடலை பாடிக்கொண்டு இருப்பவர் விஜய் என்பது போல…. அவரது தம்பியை  லாரன்ஸ் அறிமுகப்படுத்துகின்றார்…

லாரன்ஸ் தன் டிரேட்  மார்க் நடிப்பில் கிச்சி கிச்சி மூட்டுகின்றார்….எல்லோருடைய இடுப்பிலும் உட்கார்ந்து கொள்ளும் கான்செப்ட் செழிக்க….  கண்டிப்பாக காஞ்சனா பத்து பாகம் கூட எடுப்பார் என்று தாரளமாக நம்பலாம்.

டாப்சி…   இப்போதுதான் இந்திபடமான  பேபி படத்தில் இப்போதுதான் பார்த்தேன்… அதை விட வை ராஜா வை பிரஸ் மீட்டில் நேரில் பார்த்தேன்…. ரொம்ப சிலிம்மாக இருக்கின்றார்…  இடைவேளைக்கு முன் வரும் ஒருபாடலில் லாரன்சோடு சேர்ந்து   நம்மையும் சூடாக்குகின்றார்.. லோ ஹிப்பில் குழைவான இடுப்போடு  படம்பார்க்கும்   அனைவரையும் சூடு ஏற்றுவதோடு லாரன்ஸ்க்கு மச்சம் என்று படம் பார்ப்பவர்களை பொலம்ப வைக்கின்றார்.

நித்யா மேனன் அசத்தி இருக்கின்றார்.. நடிகை அஞ்சலி செய்ய வேண்டிய பாத்திரம்… ஊனமுற்ற பாத்திரம் வேண்டாம் என்று மறுத்த காரணத்தால் நித்யா நடித்து இருக்கின்றார்.. நித்யா கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்… பின்னி இருக்கின்றார்.சன்சே இல்லை.. அந்த கேரக்டரகவே வாழ்ந்து இருக்கின்றார்..

 கோவைசரளா ரேணுகா… அடிக்கும் லூட்டி அருமை… ரேணுகா  இடுப்பில் உட்கார வாய்ப்பில்லை என்று நினைத்தேன்… அதே போல லாரன்ஸ் முயற்சிக்கவில்லை.

ஸ்ரீமன் சான்சே இல்லை..  பயத்தில் கையில் எச்சி துப்பி மூஞ்சியில் அடித்துக்கொள்ளும்  காட்சியில் மனிதர் அசத்தி இருக்கின்றார்.

மனோபாலா,மயில்சாமி, மொட்டராஜேந்திரன்,ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாகவே செய்து இருக்கின்றார்கள்.

========

ஸ்ரூதி டிவியின் பர்ஸ்ட்டே பர்ஸ்ட் ஷோ  காட்சி.

=======

படக்குழுவினர் விபரம்.

Directed by Raghava Lawrence
Produced by Raghava Lawrence
Bellamkonda Suresh
Written by Raghava Lawrence
Starring Raghava Lawrence
Taapsee Pannu
Nithya Menen
Kovai Sarala
Music by Leon James
C. Sathya
S. Thaman
Ashwamithra
Cinematography Rajavel Olhiveeran
Production
company
Raghavendra Productions
Distributed by Sun Pictures (Tamil)
Sri Lakshmi Narasimha Productions (Telugu)
Release dates
17 April 2015
Running time
165 minutes
Country India
Language Tamil

==

பைனல்கிக்..

முதல் பாதியில் இருந்த விறு விறுப்பு… இரண்டாம் பாதியில்  அந்த பிளாஷ் பேக் காட்சியை தவிர்த்து இல்லை.. அதை விட அதற்கு பிறகு ஒரு பாடல்.. என்று படுத்துகின்றது.. என்னை பொறுத்தவரை இந்த படம் டைம்பாஸ் திரைப்படம்… ஆனால் இந்த படம் குழந்தைகளுக்கு பிடித்து விட்ட காரணத்தால் அந்த சின்ன  பேய் திரில்லுக்காக… கூட்டம் கூட்டமாக மக்கள் தியேட்டருக்கு  வருகின்றார்கள்.. அடுத்த பாகம் வேறு வரும் என்று லாரன்ஸ் சொல்லி இருக்கின்றார்.

====

ரேட்டிங்

பத்துக்கு ஆறு.

========

நம்மோட  வீடியோ விமர்சனம்…

https://youtu.be/iPAdNzHpEMQ