‘Vai Raja Vai’ Press Meet

 

 

 

 

 

வை ராஜா வை பிரஸ் மீட்…

32783-038 3

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில்   கார்த்திக் மகன் கவுதம் நடிக்கும் வை ராஜா வை திரைப்படத்தின் பிரஸ் மீட்… சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில்  நடந்தது…. விழாவில் வைராஜா வை  திரைப்படத்தில் பங்கு பெற்ற முக்கிய கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

ஐஸ்வர்யா தனுஷ்  முதலில்  விழா தொடங்க  தாமதமானதற்கு வருத்தம் தெரிவித்தார்.  பின்பு பிஆர் ஓ நிகில் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்க…

மேடை நிரம்பியது.

வை ராஜா வை திரைப்படத்தில் மூன்று இயக்குனர்கள் நடிக்கின்றார்கள்…

கேளடி கண்மணி இயக்குனர் வசந்த், இயக்குனர் மனோபாலா, எஸ்ஜே  சூர்யா….. அட என்ன எஸ்ஜே  சூர்யாவா என்று வாய் பிளக்க வேண்டாம்… ஒரு  கானா பாலா பாடிய  பாடலுக்கு ஆட்டோ டிரைவராக ஆட்டம் போட்டு இருக்கின்றார்…

விழாவை கலகலப்பாக்கியது விவேக்கின் பேச்சுதான்…. மனிதர் பாராட்டுவது போல  பாராட்டி.,.. அனைவரையும் கொஞ்சம் கலாய்த்தார் என்றே சொல்ல வேண்டும். நாயகி டாப்சி… முழுக்க கவர் செய்த உடையில் வந்தாலும்  அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக  சின்ன கவுனில் வந்து  முன்வரிசை பத்திரிக்கையாளர்களுக்கு பீதியை கிளப்பினார் படத்தின்    இன்னோரு நாயகியான பிரியாஆனந்.

இசையமைப்பாளர் யுவன் வழக்கம் போல அளவாக பேசினார்..

விழாவில் இல்லையென்றாலும் கேமராமேன் வேல்ராஜை பற்றி  படத்தில் பங்கு பெற்ற அனைவரும் புகழ்ந்து பேசினார்கள்..

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை வெளியிடுகின்றார்..

உத்தமவில்லன் திரைப்படத்தோடு வை ராஜா வை திரைப்படமும் மே ஒன்னாம் தேதி  களம் இறங்குகின்றது..

மூன்று படம்  போல மென்மையான கதையாக இருக்கும் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம் என்று ஐஸ்வர்யா டுவீஸ்ட்  தன் இரண்டாவது  படத்தில்  டுவிஸ்ட்  வைத்து இருக்கின்றார்…

பார்ப்போம்…

மே ஒன்னாம் தேதிக்கு வெயிட்டிங்.

 

Ajith Thunivu Movie Release on Jan 11th
Previous articlewatch Tomorrowland Official Trailer (2015) – George Clooney, Britt Robertson
Next articleKanchana 2 Movie review | Raghava Lawrence,Taapsee Pannu,Kovai Sarala| jackie cinemas