இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் வடிவேல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் கள்ளப்படம். கள்ளப்படம் என்று ஒரு படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கேள்வி பட்டு இருந்தாலும் மூன்று வாரத்துக்கு முன் நண்பர் செந்தில்… கள்ளப்படம் எனது நண்பரின் அண்ணன் இயக்கும் திரைப்படம் என்றார்… அது மட்டுமல்ல முக நூலில்…. அருன் என்ற உதவி இயக்குனர் எனது பதிவுகளுக்கு பின்னுட்டம் இட்டு இருக்கின்றார்..
அவரும் இந்த படத்தில் வேலை செய்கின்றார் என்று தெரிந்து கொண்டேன்… அதை விட நேற்று கள்ளப்படம் திரைப்படத்தின் இயக்குனர் வடிவேல் தனது மனைவி மற்றும் தான் உயர காணமான நண்பரின் புகைப்படத்தை போட்டு நன்றி தெரிவித்து இருந்தார்… செம டச்சிங்காக இருந்தது… அதே போல உதவி இயக்குனர் அருன்…முதன் முதலாக கிளாப் போர்ட் பிடித்த போட்டோவை போட்டு அதன் பின் இருக்கும் சுவாரஸ்ய மிக்க விஷயத்தை பகிர்ந்து கொண்டது செமஇண்டர்ஸ்டிங்காக இருந்தது….
சினிமாவுக்குள்ளே சினிமா எடுக்கும் கதை…. சர்வ சுந்தரம் பார்த்துஇருப்பீர்கள்… கதை திரைக்கதை வசனம்,தாவாணி கனவுகள்,வெள்ளித்திரை, சமீபத்தில் வந்த ஜிகர்தண்டா… என்று இது போன்ற ஜானர்களில் நிறைய திரைப்படங்களை பார்த்து நீங்கள் இருப்பீர்கள்… அந்த வரிசையில் கள்ளபடமும் ஒன்று.
====
கள்ளப்படம் படத்தின் கதை என்ன?
வடிவேலு இயக்குனராக கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டு இருப்பவன்…கூத்துகலையின் விற்ப்பண்ணர் ஆனா வடிவேலுவின் அப்பா அந்த கலை தன் கண் எதிரே அழிவதை பார்க்க முடியாமல் மரித்து போகின்றார்… அந்த கதையே திரைக்கதையாக்கி தனது நண்பர்களுடன் வாய்ப்பு தேடி மூன்று வருடமாகியும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் கொள்ளை அடித்து திரைப்படம் எடுக்கமுடிவு செய்கின்றனர்…. கொள்ளை அடித்தார்களா? மாட்டிக்கொண்டார்களா??
படம் எடுத்தார்களா? என்பதை வெண்திரையில் பாருங்கள்.
========
இயக்குனர் வடிவேலு, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் சந்தோஷ், எடிட்டர் காகின் நால்வரும் கள்ளப்படம் திரைப்படத்திலும் அந்த பாத்திரமாகேவே வாழ்ந்து இருக்கின்றார்கள்…
தயாரிப்பாளர் நரேனிடம் கதை சொல்ல போகும் போது அவர் நடந்து கொள்ளும் விதம் எனைய இயக்குனர் சொல்லும் விஷயம்தான்.. காரணம் அப்படித்தான் நிறைய தயாரிப்பாளர்கள் கதை கேட்பார்களாம்..
போற வழி தப்பா இருந்தாலும் போய் சேரும் இடம் கோவிலாக இருக்க வேண்டும் என்ற கான்செப்ட்டில் படம் செய்து இருக்கின்றார்கள்…
ரொம்ப நாள் கழித்து செந்தில் வாய்ப்பு தேடும் இயக்குனராக நடித்து இருக்கின்றார்… சிங்கம்புலி வழக்கம் போல கிச்சு கிச்சு மூட்ட டிரை செய்கின்றார்.
ஒரு கலை கண் எதிரில் அழிந்து போவதை இளையதலைமுறைக்கு காட்சி படுத்திய விதத்திலும் கமர்ஷியல் மசாலா சேர்க்காமல் முதல் படத்திலேயே நிமிர்ந்து நிற்கின்றார் வடிவேல்…
மிஷ்கின் ஒரு பாடலை பாடியும் இருக்கின்றார்.. அந்த பாடலும் அந்த பாடலுக்கு ஆடிய அந்த பெண்ணும் இன்னும் நெஞ்சிலேயே குந்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் இடைவேளைக்கு பிறகு கூத்து காட்சிகளை படமாக்கும் இடங்களில் லைட்டிங்கில் ஜொலிக்கின்றார்… அதே போல படம் ஆரம்பிக்கும் போது லாங்ஷாட்டில் இருந்து பேக் வந்து… அதே போல அந்த கூத்தாடி படம் முடியும் போதும் அந்த சில் அவுட் அருமை….
அதே போல நரேனின் வாப்பாட்டியும் அவர் காதலனும் பேசும் காட்சியில் அப்பரேச்சர் கட் பண்ணி திரும்ப ஓப்பன் பண்ணி காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதியது என்று அதனை சிலர் சின்ன பசங்க மேக்கிங் போல இருக்கு என்று நக்கல் விட வாய்ப்பும் உண்டு.
===
ரஜினி கமல் ரெடியா என்று முதல் காட்சியிலேயே கேட்க நம்மை நிமிழ்ந்து உட்கார வைத்து இருக்க வேண்டும்…. படம் முதல் பாதியில் பல இடங்களில் நாடதன்மை செய்ற்கையாக இருக்கின்றது,.. படத்தின் டயலாக்குகள் படத்தை தாங்கி பிடிக்கின்றன…
ஒரே ஒரு கதையை மட்டும் வைத்துக்கொண்டு இயக்குனராக போராடுவது.. ஆதவும் மூன்று வருடங்களாக போராடுவது லாஜிக் மிஸ்டேக்…
இயக்குனர் வடிவேலு இயக்குனர் பாத்திரத்தில் அவர் நடிக்காமல் வேறு யாரையாவது நடிக்க வைத்து இருந்தால் இன்னும் படம் எடுப்பட்டு இருக்கும் என்பது எனது அபிப்பராயம்.
=====
பைனல்கிக்.
இங்க எப்படி ஜெயிச்சான்னு யாரும் பாக்கறதில்லை… வெற்றியை மட்டுமே பார்க்கின்றார்கள் என்று சொல்லும் டயலாக் வலுவான டயலாக்… முதல்படத்திலேயே கமர்ஷியல் சாயல் இல்லாமல்களத்தில் இறங்கியதற்கு பாராட்டுகளை தெரிவித்தாலும்… படம் நாடகதனமாக காட்சிகள் நிறைய இருப்பதாலே படம் தொய்வை கொடுக்கின்றன என்பது உண்மை… அடுத்த படத்தில் இன்னும் 16 அடி பாய்ந்து வெற்றி அடைய வாழ்த்துகள்.
===
கள்ளப்படம் வீடியோ விர்சனம்…