O Kadhal Kanmani Single Track Review – Mental Manadhil – Lyric | A.R. Rahman, Mani Ratnam

O-Kadhal-Kanmani-Mental-Manadhil-audio-songs-download (1)

1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலம் ஆரம்பித்தது அந்த பயணம்….மணிரத்னம் ஏ ஆர் ரகுமான் இணைந்து 2015 இந்த வருடத்தோடு சரியாக 23 வருடங்கள் ஆகின்றன….

இந்த இருபத்தி ஐந்து வருடத்தில் மணியும் ரகுமானும் இணைந்து 12 படங்கள் கொடுத்து இருக்கின்றார்கள்… ஓ காதல் கண்மணி திரைப்படம் 12வது திரைப்படம்…

மணியின் ரோஜா தொட்டு தனது குரலை ரகுமான் ஏதாவது ஒரு படத்தில் பயண்படுத்தி விடுவார்.. அது இன்றுவரை தொடர்கின்றது…ரோஜாவின் சின்ன சின்ன ஆசை பாடலில் ஏலேலோவில் ஆரம்பித்தது இன்று மன மன மென்டல்வரை தொடர்கின்றது…

ஒரு பதிவோ கட்டுரையோ எழுதுகின்றோம்.. அதை சரியாக மக்களிடம் சென்று சேரவில்லைஎன்றால் அதனை மீள் பதிவு செய்வோம் இல்லையா..?? அது போல பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கண்களால் கைது செய் .. திரைப்படத்தில் ஆஆ தமிழம்மா.. பாட்டை கேட்டது போலவே இருந்தது மன மன மென்ட்டல் மனதில் பாடலின் பஸ்ட் பீட்

மணி படங்களில் ரகுமான் முழு சுதந்திரத்தோடு வேலை பார்ப்பார்..

திருடா திருடா படத்தில் இண்டர்வெல் பிளாக்கில் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டப்போவுதுடி வெள்ளக்காரி என்று சொல்லும் போது… சிவ சங்கரே.. என்று ஸ்டைலாக அந்த பெயரை ஒலிக்கவிடுவார்…

அது போல இந்த பாடலிலும் வார்த்தை ஜாலத்தை நிகழ்த்துகின்றார் ரகுமான் என்றே சொல்ல வேண்டும்…

மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை
லைக்க லைக் மை லைலா லைலா
இன்று மட்டும் கிங் அன்ட் குயின் ஆ
மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
லைலா லைக்க லைக்க மை லைலா
லைக்க லைக்க லைலா யுவர் லைலா
லைலா லைக்க லைக்க மை லைலா
கண்ணாலே கிள்ளாதே சீண்டாமல் செல்லாதே
தொட்டாலே துள்ளாதே விட்டாலும் போகாதே
கல்யாணம் கச்சேரி சம்சாரம் சம்மந்தி
பெண் பிள்ளை ஆண் பிள்ளை ஐயையோ ஓ மானே
மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை
லைக்க லைக் மை லைலா
இன்று மட்டும் கிங் அன்ட் குயின் ஆ
லக லக லக பொல்ல வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

இதில் சரணத்தில் நேற்று என்பது இன்றில்லை.. நாளை நினைப்பே ஓ தொல்லை என்று ஒரு வரியில் ஓ தொல்லை என்ற வார்த்தையில் ரகுமான் பின்னி இருக்கின்றார்..

அது மட்டுமல்ல.. பாடலை ரொம்ப தடிப்பு மேல… அலட்சியமாக பாடினால் எப்படி இருக்கும்… அது போல பாடி இருக்கின்றார்… இந்த பாடலை ரகுமான் தவிர்த்து யார் பாடி இருந்தாலும் அந்த பெப்பி பீல் கிடைத்து இருக்காது என்றே சொல்ல வேண்டும்.

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

வீடியோ பதிவு..

https://youtu.be/IpTorlBLuPM