Geethanjali Telugu movie review – 2014

movie-geethanjali-telugu-movie-Actress Anjali Geetanjali Posters

நிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்.

சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருப்பவர்… நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக போட்டு படம் எடுக்க தில் வேண்டும்…

தன் கதையை பலமாகவே இயக்குனர் ராஜ் கிரன் நம்பி இருந்தாலும்… தானே எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல எழுத உட்காரவில்லை.. 5 லட்சம் பேமன் போனாலும் பரவாயில்லை… அதை எழுத திறமையான ஆள் கோனா ரெட்டி என்று அவரிடம் ஒப்படைத்து விட்டு மற்ற பணிகளில் கவனம் செலுத்தியதாலே இந்த படம் வெற்றிக்கோட்டை தொட்டு இருக்கின்றது..

=======
கீதாஞ்சலி படத்தின் கதை என்ன?

ஒரு இளம் பெண் அவள் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்கின்றாள்… அந்த அறையில் திரைப்படம் இயக்குனர் ஒருவர் தங்க….அமானுஷ்ய விஷயங்கள் நடக்க அந்த இளம் பெண் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்.

======
படத்தின்சுவாரஸ்யங்கள்..

பார்த்து சலித்து போன பேய்க்கதை என்றாலும் பிரசன்ட் பண்ண விதத்தில் படத்தை விட்டு இங்கிட்டு அங்கிட்டு நகர விடாமல் செய்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சீனுவாச ரெட்டி மட்டும் போதுமா?? பேய் கேரக்டருக்கு அஞ்சலியை பிடித்து போட்டு இருக்கின்றார்கள்.. அது மட்டுமல்ல.. இந்த படம் ஒன்றும் விஷுவல் டிரீட் எல்லாம் இல்லை….வளவள பேசி பார்ப்பவனை போர் அடிக்க வைத்து விடும் என்பதால் பேய் விரட்டும்,.சைத்தான் ராஜ் கேரக்டரில் பிரம்மானந்தத்தை வைத்து சிரிப்பில் ஜகல் பந்தி நடத்துகின்றார்கள்….

அ நிஜமாத்தான் சொல்றியா.. அஞ்சலி பின்னி இருக்கின்றார்… கொஞ்சமாக உடம்பு போட்டு இருக்கின்றார்.. அதனாலே அவர் அணிந்து வரும் ஜீன்ஸ் டீ ஷர்ட்டுகள்… இறுக்கத்தை மேலும் கொடுக்கின்றது… ஒரு பாடலில் நாட்டியம் மற்றும் அதன் காஸ்ட்யூம் அருமை….. பெரிய ஆர்ட்டிஸ்ட் என்ற பார்த்தால் அஞ்சலியும்… பிரம்மானந்தம் மட்டும்தான்.. இருந்தாலும் பின்னி இருக்கின்றார்கள்…

பிரமானந்தம் பேய் ஓட்டவதும் சரி.. அஞ்சலிக்கு பேய் பாடி லாங்வேஜ் கற்றுக்கொடுக்கும் போதும் சரி பின்னுகின்றார்.. அது மட்டுமல்ல கடைசியாக வரும் டைட்டில் பாடலான சைத்தான் ராஜ் பாடல் பெரிய பெரிய நடிகர்களை பகடி செய்து இருக்கின்றார்கள்…

ராவ் ரமேஷ்…மிகஅற்புகமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்…. திரைப்படத்தின் கதை கேட்பது வில்லத்தனம் செய்வது என்று மனிதர் பின்னி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.

படத்தை டெக்னிக்கல் சைடில் தூக்கி நிறுத்துவது… ஒளிப்பதிவாளர் சாய் ஸ்ரீராமும் இசையமைப்பாளர் பிரவினும்தான்.. அதே போல அட்குறி தேஜாவின் எடிட்டிங் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன…

======
படத்தின் டிரைலர்.

=======
படக்குழுவினர் விபரம்.

Directed by Raj Kiran
Produced by M.V.V.Satyanarayana
Written by Kona Venkat
Screenplay by Kona Venkat
Story by Raj Kiran
Starring Anjali
Srinivasa Reddy
Music by Praveen Lakkaraju
Cinematography Sai Sriram
Edited by Atkuri Teja
Release dates
August 8, 2014
Country India
Language Telugu
Budget ₹ 4 crore[1]
Box office ₹ 12 crore
==
பைனல்கிக்.

குறைந்த பட்ஜெட்…

பெரிய நடிகர் பட்டாளம் இல்லை…

தெலுங்கு திரைப்படத்தில் மசாலாக்கள் தேவையான அளவு தூவி வெற்றியை ருசிக்க வைத்து இருக்கின்றார்கள்…

4 கோடி செலவு செய்து பதினைந்து கோடி எடுக்கும் வித்தை தெரிந்து வைத்து இருக்கின்றார்கள்..

ஷுட்டிங் போவதற்கு முன் கதையில் வரும் கேனத்தனமான ஓட்டைகளை டிஸ்க்ஷன் மூலம் அடைத்து இருக்கின்றார்கள்…

கேமரா ரோல் சொல்வதற்கு முன் திரைக்கதையை பக்காவன பேப்பர் ஒர்க்கில் ரெடி செய்து இருக்கின்றார்கள்…

நிறைய ரீடேக் போய் சினிமாவை உண்மைக்கதையாக சித்தரித்து இருக்கின்றார்கள்…
சான்சே இல்லை….

கண்டிப்பாக பார்க்க வேண்டிய தெலுங்கு திரைப்படம்.

=======

எனது வீடியோ விமர்சனம்.

https://youtu.be/TXtn2kuxeRQ?list=UUFv86IHdngwcdyvgWxAMh8Q

=====
படத்தோட ரேட்டிங்…
பத்துக்கு ஏழு,.
=======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.