Jackiecinemas

paayum puli (2015)movie review

Tamil Cinema

Paayum_Puli_2015

பாயும் புலி திரைப்படத்தின் விமர்சனத்துக்கு செல்லும் முன்… உங்களால் ஒரு படம் குறித்த தேதியில் ,குறித்த நேரத்தில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்றால் விளம்பர படுத்துங்கள்… அதற்கு பிறகு டிக்கெட்  புக்கிங் ஓப்பன்   செய்யுங்கள்…

அம்மா கால் வலிக்கு மருத்துவமனையில் காட்ட  காலை ஷிப்ட்டை   மதியத்துக்கு  மாற்றிக்கொண்டு படத்துக்கு வந்தவனோ.. அல்லது  இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டு விட்டு படத்துக்கு வந்து விட்டு  செல்லாம் என்று காலையில் திரைப்படத்துக்கு வந்தவனை கால் கடுக்க  நிற்க வைத்து  அவனை அவமானப்படுத்தி அனுப்பினால் முதல் முதல் காட்சிக்கு எப்படி நம்பி வருவான்..??

தியேட்டருக்கு போய் பாருங்கன்னு காத்து கத்து கத்திட்டு படம் பார்க்கவருபவனை அலைய உட்டா…??? அதெல்லாம் விடுங்க.. அடுத்தவங்க நேரம் என்பது உங்களுக்கு அவ்வளவு அலட்சியமா??, அவ்வளவு இளக்காரமா??

பாயும் புலின்னு இல்லை… உத்தமவில்லன், வாலு, இப்ப பாயும்புலி…  இதே போல முதல்நான் முதல் காட்சி அதுவும் ஸ்பெஷல் ஷோவுக்கு வருவனை ஏமாத்தி அனுப்பிச்சா அவன் எப்படி திரும்புவும்   தியேட்டருக்கு வருவான்..???  உங்களால் படத்தை ரிலிஸ்  செய்ய முடியலைன்னா..?  அது என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கட்டும்… முதல் நாள் நைட்டு படம்  கேன்சல்  என்று சொன்னால் வயிற்று வலி என்று சொல்லி லீவ் எடுத்தவன்..  இப்ப கொஞ்சம் உடம்பு தேவலாம்ன்னு   திரும்ப வேலைக்கு போவான் இல்லை..???

அதனால ரசிகர்களை இதே போல கிள்ளுக்கீரையாக நினைப்பது எதிர்கால தமிழ் சினிமாவுக்கு ஏற்றது அல்ல..

சரி…  பாயும் புலி திரைப்படத்தின் கதை என்ன??

நகரில் பெரும் பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்து வருகிறது ஒரு கொள்ளை கூட்டம்… எகிறும் பண முதலைகளை  எமலோக பதவி கொடுத்து வழி அனுப்புகிறார்கள்.. அப்படியான கொள்ளை கூட்டத்தை  போலிஸ் ஆபிசர் விஷால் எப்படி  வேர்  அறுக்கிறார் என்பதுதான் கதை.

======

தெலுங்கில் விஷாலுக்கு இருக்கும் மார்கெட் அதன் ஸ்பேஸ் தெரிந்துக்கொண்டு தெலுங்கு படங்களில் காரத்தை தன் படங்களில் பயண்படுத்தி வருகிறார். விஷால்..இந்த  படத்தில்  தன் பணியை  செவ்வனே செய்துள்ளார்.

காஜல் அகர்வால்  பாடல்களில் ஹாட் அகர்வால்.. முக்கியமாக  செகன்ட் ஆப்பில் வரும் டூயட்  பாடலில் காஸ்ட்யூம்  அருமையிலும் அருமை. முக்கியமாக  நீல கலர் பட்டுபுடவையும் லோ  ஹிப்பில் காஜல் ரசிகர்களை சூடேற்றுகிறார். நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை ..

சமுத்ரகனி பாத்திரம் வலுவாக இல்லை என்பதால் அவருடை  நடிப்பு விழலுக்கு இரைத்த நீராக போனாலும்.. அப்பாவிடம் கடைசியில் வாதாடும் இடத்தில் நிற்கிறார்.

சூரியின் ஹெல்மெட் காமெடி ஆஹா ரகம்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்குபலம் என்பதோடு  பாடல் காட்சிகளில்  நிறைய வண்ணங்களை  பயண்படுத்தியிருக்கிறார்.

முதலில் வரும் குத்து சாங்கின்  கொரியோ கிராப் , ஒளிப்பதிவு, எடிட்டிங் , இசை எல்லாம்  சேர்ந்து அசத்துகிறது…

இமானின் பாடல்களில்  இரண்டு பாடல்கள் தேறுகின்றது.

===

படத்தின் டிரைலர்.

 

=====

படக்குழுவினர்  விபரம்.

Directed by Suseenthiran
Screenplay by Suseenthiran
Story by Suseenthiran
Starring Vishal
Kajal Aggarwal
Soori
Samuthirakani
Music by D. Imman
Cinematography Velraj
Edited by Anthony
Production
company
Vendhar Movies
Distributed by Escape Artists Motion Pictures
Release dates
4 September 2015
Country India
Language Tamil
Budget ₹250 million

 

=

பைனல் கிக்…

ஒரு டைம்பாஸ் திரைப்படம்… நிறைய லாஜிக் ஓட்டைகள் என்பதால்… இரண்டாம் பாதிக்கு மேல் படத்தில் ஒட்முடியவில்லை.. ஆனால் ஒரே அடியாக படம் மொக்கை என்று சொல்ல முடியாது..    போர் அடித்தால்  நிச்சயம் பாயும்புலியை கண்டு மகிழலாம்.

====

படத்தோட ரேட்டிங்.

5/2.75

 

வீடியோ  விமர்சனம்.

 

Related posts

𝑲𝑨𝑳𝑨𝑴 𝑺𝑨𝑳𝑨𝑨𝑴 – 𝑽𝑰𝑹𝑻𝑼𝑨𝑳 𝑻𝑹𝑰𝑩𝑼𝑻𝑬 𝑻𝑶 𝑻𝑯𝑬 𝑷𝑬𝑶𝑷𝑳𝑬’𝑺 𝑷𝑹𝑬𝑺𝑰𝑫𝑬𝑵𝑻 𝑶𝑵 𝑯𝑰𝑺 5𝑻𝑯 𝑹𝑬𝑴𝑬𝑴𝑩𝑹𝑨𝑵𝑪𝑬 𝑫𝑨𝒀 𝑭𝑹𝑶𝑴 7.00𝑷𝑴 𝑶𝑵𝑾𝑨𝑹𝑫𝑺

admin

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்

admin

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்

admin

Leave a Comment