Sawaari Movie Press Meet |சவாரி திரைப்பட பிரஸ் மீட்

வின்டேஜ் காரினை மையப்படுத்தி  திரைக்கதை அமைத்து உருவாகும் திரைக்கதைகள் தமிழில்  மிகக்குறைவு… பாட்டி சொல்லை தட்டாதே அந்த வகை திரைப்படம்தான்… ஆனால்  பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் காரின் மீதான காதலை  நெகிழ்ச்சியாய் சொன்ன திரைப்படம் என்றால் அது மிகையில்லை… சமீபத்தில் வெளியாக ஜில் ஜங் ஜக்  திரைப்படம் கூட  வின்டேஜ் காரினை மையப்படுத்தி வந்த ரோட் ஜானார் திரைப்படம்..

 

விரைவில் வெளி வர இருக்கும் சவாரி திரைப்படம்   கல்ட் திரைப்பட வகையை சார்ந்த திரைப்படம் இந்த திரைப்படத்தின் பிரஸ் மீட் ஆக்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.. படத்தில் பங்கு பெற்ற முக்கிய கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்கள்.

தொடர்ந்து ஆறு கொலைகள்… யார் செய்கின்றார்கள் எதற்கு செய்கின்றார்கள் என்பதுதான் சவாரி திரைப்படத்தி  ஒன்லைன்…

டிரைலரில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் என்பதை   மிக அழகாக சொல்லி இருக்கின்றார்கள்… ஷாட் காம்போசிங் அனைத்து அருமை.. கல்ட் திரைபடங்களில் என்ன என்ன  காட்சிகளை பார்கிறோமோ… அவைகள் அத்தனையையும் கொடுத்துள்ளார்கள்…

மார்ச் 18 ஆம் தேதி  வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை  தேனான்டாள் பிலிம்ஸ்  வெளியிட இருப்பது..  சவாரி படத்துக்கு கிடைத்த மற்றோரு அங்கீகாரம்.