Natpadhigaram 79 movie review by jackie sekar

 

 

கண்ணெதிரே தோன்றினால் திரைப்பட ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளிவந்து இருக்கும் திரைப்பம் நட்பதிகாரம் 79… சரி நட்பதிகாரம் என்றால் என்ன? திருக்குறளில் நட்பை பற்றி புட்டு புட்டு வைக்கும் அதிகாரமே நட்புஅதிகாரம்.. அதன் வரிசை எண் 79 … ஆனாலும் என்னை பொருத்தவரை வித்தியாசமான டைட்டில்தான்.
=======
நட்பதிகாரம் திரைப்படத்தின் ஒன்லைன்
என்னதான் நட்பு பலமாய் இருந்தாலும் புரிதல் இல்லாமல் போனால் என்னாகும் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.

========
நட்பதிகாரம் படத்தின் கதை என்ன..
ஜீவா, பூஜா, இரண்டு பேரும் காதலர்கள் அரவிந்த மஹா இவர் இருவரும் காதலர்கள்தான் .. இருந்தாலும்…. யாரும் யாருக்கும் அறிமுகம் இல்லை.. ஒரு டிஸ்கோத்தே கிளப்பில் நட்பாகின்றார்கள்.. ஆனால் அவர்கள் நட்பில் புயல் வீசுகின்றது.. நண்பர்கள் புயல் காற்றில் கரை சேர்ந்தார்களா? இல்லையா என்பதே கதை.
======
இயக்குனர் ரவிச்சந்திரன் உறவினர் ராஜ்பரத் ஜீவாக நடித்துள்ளார்.. இதற்கு முன் ஓனாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருக்கின்றார்.. இந்த படத்தில் நாயகன் அவதாரம் பூண்டு இருக்கின்றார்.. தேஜஸ்வினியை தேடி பாண்டிவரை சென்று காதலை சொல்லும் கட்டத்தில் மிளிர்கின்றார்..

தேஜஸ்வினி கொஞ்சம் அலட்டல் தெரிந்தாலும் இயல்பாக இருக்கின்றார்.. இப்போதைய பணக்கார பெண்கள் போல காதலை ஐஸ்ட் லைக் தட்டாக சொல்கின்றார். இடைவேளைக்கு பிறகு அவரை வெறுக்கும் காட்சிகளில் அசத்துகின்றார்..
அம்ஜத் வல்லனிம் படத்தில் கவனத்தை ஈர்த்தவர்.. இந்த படத்திலும் இயல்பான நடிப்பின் மூலம் கவர்கின்றார்.. இவருக்கும் ஜோடியாக ரேஷ்மி மேனன்
ரேஷ்மிமேனன் பிரமாண பெண்ணாக அசத்தி இருக்கின்றார்..

நான்கு பேரும் நட்பாகி விட்டார்கள் என்பதை காட்ட ரெஸ்டாரண்ட் டேபில் ஜோடிகள் மாறி உட்கார்ந்து இருப்பதும் ஒரே கல்யாண பத்திரிக்கையில் அரவிந் அண்டு பிரண்ட்ஸ் என்று எழுதி கொடு என்று சொல்லும் இடங்கள் அருமை
படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவு தேவ் அசத்தி இருக்கின்றார்..மயிலாப்பூர் கபாலி கோவில் பேக்ரவுண்ட் சான்சே இல்லை.. எல்லா பிரேமும் செம ரிச்சாக இருக்கின்றது… அதே போல பின்னு மில் காட்சிகளும் பிரேமும் கிளாஸ்.

பாடல்கள் இரண்டு கேட்கும் படி உள்ளன.

==
படக்குழுவினர் விபரம்.

 

Directed by Ravichandran

Produced by D. Ravikumar

Starring Raj Bharath

Amzath Khan

Reshmi Menon

Tejaswi Madivada

Music by Deepak Nilambur

Cinematography R. B. Gurudev

Edited by V. J. Sabu Joseph

Production

company

Jayam Cine Entertainment

Release dates

11 March 2016

Country India

Language Tamil

 

======
பைனல்கிக்…
முதல் பாதி சும்மா ஜிவ் என்று எங் அண்டு எனர்ஜிட்டிக்கா இருக்கின்றது.. ஆனால் இரண்டாம் பாதி ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குடன் வலுவில்லாத திரைக்கதை மூலம் திரைப்படம் நொண்டி அடிப்பதை மறுக்க முடியாது.. அரவிந் அவசரமாக லண்டன் கிளம்பி சென்றாலும் இந்த தகவல் தொழில் நுட்ப உலகில் ஒரு விஷயத்தை மிக அழகாக புரிய வைக்கலாம்.. கடைசி வரை மஹாவிடன் தன் தரப்பை லண்டன் போயும் விளக்காகதது ஏன்.??
டைம்பாஸ் படமாக இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
==
படத்தோட ரேட்டிங்.
ஐந்துக்கு இரண்டே முக்கா.
=======

படத்தின் வீடியோ ரிவியூவ்

 

https://youtu.be/RKDhyBCNM8E