Badlapur-2015-hindi movie review

badlapur-new-poster-embed

பத்லாபூர்..

இந்தியில் படம் இயக்கும் ஸ்ரீராம் ராகவனை எனக்கு மிகவும் பிடிக்கும்.. காரணம்… அவர் இயக்கத்தில் 200 ஆம் ஆண்டு வெளியான ஜானி கதார் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்… அவர் சென்னைக்காரர் என்பது அவரை பிடிக்க இன்னோரு காரணம்… அது மட்டுமல்ல. டார்க் திரில்லர் திரைப்படங்களை மிக அழகாக பிரசன்ட் செய்வதில் வல்லவர்.. முக்கியமாக ஜானி கத்தார் திரைப்படத்தின் இன்டர்வெல் பிளாக்கை குறிப்பிட்டு சொல்லலாம்.. சான்சே இல்லை… சின்ன சின்ன விஷயங்களை மெனக்கெடுவதில் வல்லவர்…

எஜென்ட் வினோத் சரியாக போகத நிலையில் அவர் இயக்கத்தில் வெளி‘வந்து இருக்கும் திரைப்படம்தான்.. பத்லாபூர்..
போஸ்டரிலேயே மிரட்டி இருக்கின்றார்கள்…. வருன் தவான் பக்கம் தீச்சுவாலைகளுடனும்…நவ்ஷூதின் பக்கம் ரொம்ப கூலாக இருப்பது போலவும் … இரண்டே இரண்டு பேரின் முகம் மட்டும் தெரிவது போல போஸ்டரை டிசைன் செய்து இருக்கின்றார்கள்…

வலி என்பது கால போக்கில் மன்னிக்கவோ.. அல்லது மறக்கவே கூடாது என்பதுதான் இந்த திரைப்படம் சொல்லும் சேதி…
=========
படத்தின் ஒன்லைன்..
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் ஹெமுராபியின் சட்டம் போல குற்றம் செய்தவனுக்கு தண்டனை அளித்தல் வேண்டும் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
========
படத்தின் கதை என்னவென்று பார்த்து விடலாம்…

வழக்கமான பழிவாங்கும் கதைதான்….

ராகுல் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுகின்றான்… அழகான மனைவி, ஒரு ஆண்குழந்தை… ஒரு பேங்க் கொள்ளையில் கொள்ளையர்கள் ராகுலின் மனைவி குழந்தையை பினைக்கைதியாக பிடித்து பின்பு இரண்டு பேரையும் கொன்று விடுகின்றார்கள்… கொள்ளையர்களை கண்டு பிடித்து அவர்களை பழிக்கு பழிவாங்கினானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை…

=======
படத்தின் சுவாரஸ்யங்கள்…

படத்தின் முதல் பத்து நிமிடங்களை காண தவறாதீர்கள் என்று கேப்ஷனோடுதான் தியேட்டருக்கு அழைக்கின்றார்கள்…. பத்து மணி படத்துக்கு பத்தே முக்காவுக்கு உள்ளே போய் படம் பார்த்துக்கிட்டு இருக்கறவன் காலை எல்லாம் மிதித்துக்கொண்டு சீட் தேடி செல்பவர்களாக இருந்தால் இந்த படம் உங்களுக்கானது அல்ல…

அனில் மேத்தா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்…. முதல் பத்து நிமிடத்துக்கு அவர்கள் ரிகர்சல் எல்லாம் செய்து கண்டிப்பாக அந்த ஷாட்டை எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்… அது மட்டுமல்ல… அந்த பைக்காரர் சுமோ மீது இடித்து விழும் காட்சி ரொம்ப ரியாலிஸ்ட்டிக்கா எடுத்து இருக்கின்றார்கள்..
யாமி கவுதம் படம் பார்க்கும் அத்தனை பேரையும் கனவுலகில் மிதக்க வைத்து இருக்கின்றார்…. தமிழ் பெண்ணாக நடித்து இருக்கின்றார்.. வருன் தவானுக்கும் அவருக்கும் இருக்கும் இன்டிமசி.. சான்சே இல்லை…
மிக சிறப்பாக நடிப்பை வருன் தவான் வெளிப்படுத்தி இருக்கின்றார்.. ஸடுடன்ட் ஆப் த இயர் பையானா என்று ஆச்சர்யபட வைத்து இருக்கின்றார்…

படத்தின் பெரிய பலம் நவ்சுதின் சித்திக்… சான்சே இல்லை…. எல்லா காட்சிகளிலும் பாத்திரம் முடிந்து அசத்துகின்றார்.. அதுவும் கிளைமாக்சில் சிறையில் கண்ணாடியை எடுத்துப்போட்டுக்கொண்டு பாங்காங் அருமையா இருந்துச்சி என்று சொல்லும் இடம் இயலாமையுடன் கூடிய நடிப்பைவெளிப்படுத்தி அசத்துகின்றார்.

ராதிகா ஆப்தே… நடிப்பில் அசத்தில் இருந்தாலும் உடைகள் அவுக்க வேண்டும் என்று வருன் சொல்ல… பிரா ஜட்டியுடன் ஒரு பிரபல நடிகை நிற்பது.. இந்தி சினிமாவுக்கு புதுசு என்றாலும் தியேட்டரில் பெரியஅளவுக்கு கைதட்டலும் விசிலும் வருகின்றது..
படத்தில் நிறைய செக்ஸ் காட்சிகள் இருந்தாலும் அது ஆங்கில படங்களில் வருவது போல மிக இயல்பாக வருகின்றது…
ஜானிகதாரில் நடித்த நடிகர்கள் இந்த படத்திலும் நடித்து இருக்கின்றார்கள்…

15 வருடம் கடந்து இருக்கின்றது.. என்பதை நவ்சுதின் பிடிப்பட்டு அப்படியே கேமரா டிராவல் ஆகும் போது நவ்சுதின் தலை நரைத்து இருப்பதைக காட்டும் காட்சி.. அருமை.

முதல் ஷாட்டிலேயே… வெட்டிய கோடாலி மறந்து விடும்.. ஆனால் வெட்டுப்பட்ட மரம் ஒரு போதும் மறக்காது என்று ஆப்ரிக்க நாட்டு பழமொழியை சொல்லிதான் நமக்கு படம் காண்பிக்கின்றார்கள்.

நோ மேர்சி கொரிய படத்தை இந்த திரைப்படம் சற்றே நினைவுபடுத்தினாலும்… அடிப்படை ஆதாரம் ஒன்றுதான்… குற்றத்தை ஒரு போதும் மன்னிக்காமல் அந்த வலியை குற்றம் செய்தவன் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் படத்தின் ஆதாரம்.

======
படத்தின் டிரைலர்.

=====
படக்குழுவினர் விபரம்

Directed by Sriram Raghavan
Produced by Dinesh Vijan
Sunil Lulla
Written by Sriram Raghavan
Arijit Biswas
Starring
Varun Dhawan
Nawazuddin Siddiqui
Huma Qureshi
Yami Gautam
Vinay Pathak
Divya Dutta
Radhika Apte
Music by Sachin-Jigar
Cinematography Anil Mehta
Edited by Pooja Ladha Surti
Production
company
Maddock Films
Distributed by Eros International
Release dates
20 February 2015
Running time
135 minutes
Country India
Language Hindi
Budget INR25 crore
Box office INR32 crore
==
பைனல்கிக்…
அவசியம் பார்த்த தீர வேண்டிய திரைப்படம்…. கேங்ஸ் ஆப் வசிப்பூர் திரைப்படம் போல இந்த திரைப்படமும் இந்தி சினிமாவில் மைல் ஸ்டோன் மூவி என்றால் அது மிகையில்லை.. வாழ்த்துகள்… ஸ்ரீராம் ராகவன்.

===

இந்த படத்தின் வீடியோ  விமர்சனம்.

http://youtu.be/bkpjUQ0DHuU