kakki sattai( 2015) movie review

kakki-sattai-songs-free-download

மிமிக்ரி பண்ணி நாயகனாக உயர்ந்தவர் என்று பார்த்தால் அது சிவாதான்…மயில்சாமி, தாமு, சின்னிஜெயந், என்று மிமிக்கிரியில் பலர் சாதித்தாலும் சிவகார்த்திகேயனின் இளமையும்…. அவரின் உழைப்பும் இந்த வளர்ச்சியை பெற்றுக்கொடுத்து இருக்கின்றது எனலாம்…

சந்தானம் போல லொள்ளு சபாவில் நடித்த ஜீவா கூட ரஜினி சாயலில் நடித்தாலும்…. அவருக்கும் திறமை இருந்தது… ஆனால் கடைசிவரை ரஜினி மாயையில் இருந்து அவர் வெளிவரவேயில்லை.. அப்படி வந்து இருந்தால் சிவாவை போலோ… அல்லது சந்தானத்தை போல அவரும் சாதித்து இருக்கலாம்… ஆனால் சிவகார்த்திகேயன்… ரஜினிமேனாரிசங்களை பின் பற்றினாலும் தேவையான இடத்தில் மட்டும் பயண்படுத்தியது சிவாவின் வெற்றியும் புத்திசாலிதனமும் என்றே சொல்ல வேண்டும்.

எல்லா கமர்ஷியல் நாயகர்களும் கையில் எடுக்கும் ஆயுதம் .. காக்கி சட்டை..ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகி…..அடி பட்டு வெற்றி தோல்வி எல்லாம் பார்த்து…. வாய்ப்பில்லலாமல் இருந்து கடைசி கட்டமா போலலிஸ் பாத்திரம் ஏற்று தமிழ் நாயகர்கள் ஒரு ரவுண்டு வருவார்கள்… அதற்கு உதாரணம்…சூர்யா… காக்க காக்க முன் பின் என்று பிரிக்கலாம்… ஆனால் சிவாவுக்கு நான்காம் படத்திலேயே போலிஸ் வாய்ப்பு… கை கூடி இருக்கின்றது…

சரி.. படத்தின் கதை என்ன என்பதை பார்த்து விடுவோம்…
சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் கருப்பொருளும்…இந்த படத்தின் கருப்பொருளும் ஒன்றுதான்…
மனித உறுப்புகளை சட்ட விரோதமாக கடத்தும் கும்பலை ஒரு சாதாரண காண்ஸ்டபிள் எப்படி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுக்கின்றார் என்பதே கதை.

சிவாகார்த்திகேயன்…பூந்து விளையாடுறார்… அவருடைய விடலைதனம் ரொம்பவே கைகொடுத்து இருக்கின்றது… எது கரெண்ட் டிரெண்டுல சோசியல் மீடியாவுல எது பாரிகாசிக்க படுதோ? அதை தன்னுடைய டயலாக்கில் சேர்த்து கொள்பவர்தான் சிவகாத்திகேயன்.அதுவே அவரின் வெற்றியும் கூட… அந்த வகையில் ஹர ஹர மஹாதேவகி வாட்சப் ஆடியோ சாமியாரையும் விட்டு வைக்கவில்லை…

பிரபுக்கிட்டயே…நம்பிக்கை அதானே எல்லாம்……. இமான் அண்ணாச்சி கிட்டு காம்பயர் பண்ணிக்கோங்க… என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா…போன்ற வார்த்தை விளையாட்டுகளில் வெளுத்து வாங்குகின்றார்.. அது மட்டுமல்ல.. ஹர ஹர மாஹா தேவக்கி வாட்ஸ் அப் சாமியாரை கூட விட்டு வைக்கவில்லை… அதுதான்   சிவாவின் பலம்.

ஸ்ரீதிவ்யா… நம்ம தமிழ் கதாநாயகிகள் வட இந்திய சாயலில் கவர்ச்சியாக பார்த்துவிட்டதாலோ… என்னவோ ஸ்ரீதிவ்யாவை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் பார்த்தது போல சிட்டி சப்ஜெக்டில் இந்த படத்தில் பல காட்சிகளில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் போலவே இருக்கின்றார்…. ஓவர் மேக்கப் அண்டு லிப்ஸ்டிக்…..கவர்ச்சி காட்டாத நாயகி என்பதால் கூட இருக்கலாம். ஏன்னா நம்மளை அந்த அளவுக்கு  மற்ற ஹீரோயின்ஸ் கெடுத்து  வச்சி இருக்காங்க..பட் கட்டிக்கட முன்னே நாம ஒத்திக்கைய பார்க்கனும்  பாடலில் திவ்யா செமையாக ஒரு குத்தாட்டம் தாவணியில் ஆடி இருக்கின்றார்… பிரமாதம் போங்க….

படத்தின் முன் பாதி பலம்… இமான் அண்ணாச்சி மற்றும் சிவகார்த்திகேயன்  அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை…
அம்மாவாக கல்பனா மற்றும் தங்கச்சி நடிகையாக நடித்து இருப்பவர் சில காட்சிகளில் வந்தாலும்  திறமையாக மனதில் நிற்பது போல இயல்பாக நடித்து இருக்கின்றார்கள்… அதே போல மனோபாலா வரும் இடங்கள் கலகல.,…

நாம பொண்ணு பின்னாடி போககூடாது.. பொண்ணுங்கதான் நம்ம பின்னாடி வரனும் என்று கல்பனா சொல்ல.. அப்ப அதுக்கு  அதுங்க பேகை புடுங்கிக்கிட்டு  ஓடனும் என்று சிவா சொல்லும் இடம் அருமை.

மயில் சாமி டைமிங்கில் கண்ணாடியில் மோதிக்கொண்டது… சாதரண விஷயம் என்றாலும் தியேட்டர் சிரிக்க காரணமாக இருக்கின்றார்…

திரைவிவாதம் என்று ஒரு பெரிய பட்டியலே போட்டு இருக்கின்றார்கள்.. அந்த வகையில் படக்குழுவினரக்கு சல்யூட்.. அதுதான் வெற்றியாக மாறி இருக்கின்றது….சினிமா என்பது கூட்டு முயற்சி..

பட்டுகோட்டை பிரபாகர் வசனம்… நிறைய இடங்களல் அட போட வைக்கின்றார்.. முக்கியமாக சிவகார்த்திகேயன் ஏன் போலிசா வந்தான் என்று கல்பனா ஸ்ரீ திவ்யா வீட்டில் பேசும் வசனங்கள்… சிவகார்த்திகேயனின் நிஜமான போலிஸ்காரர் அப்பாவை மனதில் வைத்து எழுதி இருக்கின்றார்கள்…ஏ பிளஸ் பி ஹோல்ஸ்கொயர்… 100 மீட்டர் போன்… திவ்யா கிட்ட எனக்கு போலிஸ் வேலை முக்கியம் ,கமிஷ்னரிடம் சிவகார்த்திகேயன் கான்ஸ்டபிள்ன்னா யாரு என்று பேசும் இடங்களில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஜொலிக்கின்றார்…ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடல் உறுப்புகள் இரண்டு கோடி….

வில்லானக விஜய் ராஸ் கலக்கி இருக்கின்றார்.. ஆர்பாட்டமில்லாமல் கலக்கி இருக்கின்றார்….

சுகுமார் ஒளிப்பதிவு நாளுக்கு நாள் மெருகு ஏறிக்கொண்டே வருகின்றது.. அவர் ஒளிப்பதிவில் லாடம், கும்கி,மான்கராத்தே… வரிசையில் இந்த படமும்… மான்கராத்தே… மற்றும் லாடம்மில் பேக்லைட் அதிகம் யூஸ் பண்ணி இருப்பார்.. இந்த படத்தில் அப்படி யூஸ் பண்ணாமல் கலர்ஸ்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றார்… அதே போல சிவகார்த்திக்கு பில்டப் கொடுக்கும் இடங்களில் சான்சே இல்லை…

கேரவேன் நிற்கும் பெசன்ட் நகர் உடைஞ்சபாலம் மிக அழகாக லைட் பண்ணி இருக்காங்க…

kakki-sattai-story
வெள்ளிக்கிழமை தளும்ப எண்ணெய் தேச்சி… அந்த எண்ணெய் கண்ணுக்கு வந்துட்ட.. சின்ன எரிச்சலோடு குளிச்சி முடீச்சி வந்தப்பபுறழுமும் கண்ணு லைட்டா எரிஞ்சி கலங்கும் அது போல சிவகார்த்திகேயன் கண்ணு பிரேமுக்கு பிரேம் கலங்கியபடி இருக்கின்றது….

லேப்டாப்பில் காப்பி பண்ண.. விஷயத்தை வைத்து துரையை அரெஸ்ட் பண்ணி இருக்கலாமே என்று இந்திய அரசியல் சட்டம் தெரியாதவர் உணர்ச்சிவசப்படலாம்.. அதிகாரமும் சட்டத்தின் ஓட்டையும் தெரிந்து விட்டால் கிளவாராக தப்பிக்கலாம் என்பதை இந்திய மற்றும் தமிழக அரசியல் தொடர்ந்து நிரூபித்து வருகின்றது…

இயக்குனர் துரை செந்தில் குமார்…அனிருத்,சிவா, தனுஷ் மூவரும் எதிர் நீச்சல் படத்துக்குபிறகு மீண்டும் இணைந்து இருக்கின்றார்கள்… கமர்ஷியல் படத்தில் எங்கு எங்குபுளிப்பு காரம் சேர்க்க வேண்டும் எங்கே பெப்பர் அல்லது சால்ட் தூவ வேண்டும் என்று இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு கை வந்துள்ளது.. நால்வர் கூட்டணி இந்த திரைப்படத்தின் மூலம் இரண்டாவது வெற்றியை சுவைத்து இருக்கின்றார்கள்… என்றே சொல்ல வேண்டு?

சிவகார்த்திகேயன் அப்பா.. ஒருவேளை இந்த படத்தை பார்த்து இருந்தால் தன் பிள்ளையை உச்சிமுகர்ந்து இருப்பார்.
படம் முடியும் போது எதுவாக ஆவனும்ன்னு நினைக்கறிங்களோ.. அதுவா ஆயிடுவாங்கன்னு சொல்றாங்க…
உண்மைதான்….

சாதாரண காம்பியரர்…. சிவகார்த்திகேயன்… சினிமா ஸ்டாரா மாறிட்டார்.. சாதாரண போட்டோகிராபர் சுகுமார்.. சினிமாட்டோகிரபாரா மாறிட்டார்…
ரைட்டர். பட்டுக்கோட்டைபிரபாகம் வசனகர்த்தாவா ஆயிட்டார்..
ஆம் நீங்க என்னவாக நினைக்கறிங்களோ.. அதுவாவே மாறிடுவிங்க…
உண்மைதான்..

இரட்டை அர்த்த வசனம், அதீத வன்முறை, எதுவும் இல்லாமல் நீட் எண்டர்டெயின் மென்ட். குடும்பத்தோடு தியேட்டருக்குஇந்த படம் பார்க்க மக்கள் படையெடுப்பார்கள் என்பது நிச்சயம்.

ஒரு விஷயம்… காக்கிசட்டை போட்டுக்கிட்ட நிறைய கருப்பாடுகள் இருக்கலாம்.. ஆனால் உண்மையாக காக்கிச்சட்டைகளுக்கு இந்ததிரைப்படம் டேடிக்கேட் செய்கின்றார்கள்… படம் முடிந்து வெளியே வந்ததும்.. 12 பெண்கள் கூட்டத்தை நான்கு பேர் கொண்ட காதில் கடுக்கன் போட்டு இருந்த பசங்க கலாய்ச்சாங்க… அந்த பொம்பளை பசங்க பண்ணிரண்டு பேரும்… ரவுண்டா நின்னு ஒரு ஸ்டெப் கூட நவுரலை… அந்த பசங்க நக்கல் விட்டாங்க…. எல்லோரும் படம் விட்டு வெளியோ போய்க்கிட்டுதான் இருந்தாங்க… யாரும் கேட்கலை…

பந்தோபஸ்த்துக்கு வந்த போலிஸ்காரர் சின்ன பையன் போல இருந்தார்… முதலில் அந்த போலிஸ்காரர் முன்னேறினார்.. மச்சான் போலிஸ் என்று ஒரு சத்தம்… அடுத்து கூட்டத்தை தள்ளிக்கொண்டு கலாய்த்த பசங்களை நோக்கி இன்னும் இரண்டு போலிசார்  செல்ல… பின் ட்ராப் சைலண்ட் ஆகி… எல்லோரும் அளுக்கோரு திசையில் காணாமல் போனார்கள்… அதுதான் காக்கிசட்டை… அந்த பெண்களை காக்க முன்னேறிய அந்த போலிஸ்காரர்கள் என் கண்ணுக்கு கிளைமாக்சில் போலிஸ் ஜிப்பில் வந்து  இறக்கும் சிவகார்த்திகேயனாகவே தெரிந்தார்கள்.

வீடியோ விமர்சனம் பார்க்க…

http://youtu.be/uyZE1I4SdM8

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்

ஜாக்கிசினிமாஸ்